என் மலர்
விளையாட்டு
ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில் இந்தியா அனுபவம் இல்லாத வீரர்களுடன் களம் இறங்கினாலும், அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் என டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் விளையாடி வந்தனர். ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை.
இதனால் மயங்க் அகர்வால் உடன் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. மயங்க் அகர்வால் 9 டெஸ்ட் போட்டிகளிலும், பிரித்வி ஷா 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
நியூசிலாந்து ஆடுகளத்தில் டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் ஆகியோரின் பந்து வீச்சை அனுபவம் இல்லாத இருவரும் தாக்குப்பிடித்து விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர்களிடம் அனுபவம் இல்லாவிடிலும், சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ‘‘இந்திய அணி காயம் காரணமாக ஒன்றிரண்டு வீரர்களை இழந்துள்ளனர். ஆனால் திறமை வாய்ந்த வீரர்களை இந்தியா பெற்றுள்ளது. தேவைப்படும்போது அணியை முன்னெடுத்துச் செல்லும் திறன் அவர்களிடம் உள்ளது. ஹாமில்டனில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்ளுக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்கள் கிளாஸ் பிளேயர்ஸ்’’ என்றார்.

நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் சாதனை மிகவும் மோசமாக இருப்பது குறித்து கவலை இல்லை, எங்களால் தொடரை வெல்ல முடியும் என்கிறார் விராட் கோலி.
இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்தில் மண்ணில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1968-ம் ஆண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. அதன்பின் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவோம் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எங்களுடைய உடற்தகுதி மற்றும் கவனம் செலுத்தும் நிலை ஆகியவற்றை கொண்டே நாங்கள் தயாராகி உள்ளோம். இதனால் உலகின் எந்தவொரு அணிக்கெதிராகவும் எங்களால் போட்டியிட முடியும். இந்த வகையான நம்பிக்கையை நாங்கள் இந்தத் தொடரில் எடுத்துச் செல்வோம்.
கடந்த முறை நாங்கள் இங்கே வந்தபோது தொடரை 0-1 எனத் தோற்றோம். தற்போது இருப்பது அதே அணியல்ல. தற்போது நாங்கள் முழுமையடைந்த அணியை பெற்றுள்ளோம். நியூசிலாந்து திறமையான பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், சிறந்த பீல்டர்களை கொண்ட அணி. அவர்கள் எளிதான ஆட்டத்தை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியான பயன்படுத்தி போட்டியை நம் பக்கம் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நீல் வாக்னர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுவதால் நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நாளைமறுநாள் (பிப்ரவரி 21-ந்தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் நீல் வாக்னர் இடம் பிடித்திருந்தார்.
அவர் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீல் வாக்னர் இன்னும் அணியில் இணையவில்லை. ஒருவேளை அவர் அணியில் இடம் பெறாவிட்டால் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் மேட் ஹென்றியை நியூசிலாந்து அழைத்துள்ளது.
மேட் ஹென்றி இன்று அணியுடன் இணைகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர் ஒருவேளை இடம் பெறாவிடில் அது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
மேட் ஹென்றி கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி டெஸ்டில் விளையாடினார். இந்த டெஸ்டில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார். இந்த டெஸ்டில் நியூசிலாந்து தோல்வியடைந்தது.
ஹென்றிக்கு அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் லெவனில் இடம் பிடிக்க இவருக்கும் கைல் ஜேமிசனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

கிரிக்கெட்டின் வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்த 3 வீரர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் தெரிவித்துள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்- ஹக்.
அந்நாட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராவார்.
இந்த நிலையில் கிரிக்கெட்டின் வெவ்வேறு காலக்கட்டங்களில் 3 வீரர்கள் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று இன்சமாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
3 வீரர்கள் கிரிக்கெட்டில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்கள் இந்த விளையாட்டில் புதிய நடைமுறையை கொண்டு வந்தவர்கள் ஆகும். அவர்களால் ஆக்ரோஷம், கற்பனைக்கு எட்டாத பேட்டிங், புதுமையான அணுகுமுறையை கொண்டு வர முடிந்தது.
கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய முதல் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த விளையாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் ஆடிய காலக்கட்டத்தில் வேகப்பந்து வீரர்களை பேட்ஸ்மென்கள் பின்னால் வந்து (பேக்புட்) ஆடுவார்கள்.
அப்போது வேகப்பந்து வீச்சை முன்னாள் வந்து (பிரன்ட் புட்) ஆட முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். வேகப்பந்து வீச்சை அடித்து ஆட முடியும் என்று ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்தவர் ரிச்சர்ட்ஸ். அவர் எப்போதுமே ஒரு சிறந்த வீரர் ஆவார்.
2-வது மாற்றத்தை கொண்டு வந்தவர் ஜெயசூர்யா. இலங்கையை சேர்ந்த அவர் முதல் 15 ஓவர்களில் வேகப்பந்தில் அதிரடியாக விளையாட முடியும் என்று நிரூபித்தவர். அவரது வருகைக்கு முன்பு பந்தை தூக்கி வானத்துக்கு அடித்தால் முறையான பேட்ஸ்மென் இல்லை என்பார்கள்.

டிவில்லியர்ஸ் மாற்றத்தை ஏற்படுத்திய 3-வது வீரர் ஆவார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அவர் கிரிக்கெட்டில் 3-வது மாற்றத்தை ஏற்படுத்தியவர். இன்றைய காலக்கட்டத்தில் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் வீரர்கள் அதிரடியாக ஆடுவதற்கு அவர்தான் காரணம்.
பொதுவாக பேட்ஸ்மென்கள் நேராக தூக்கி அடித்து ஆடுவார்கள். ஆனால் இதில் டிவில்லியர்ஸ் தான் புதுமையை புகுத்தினார். சுவிப் மற்றும் ரிவர்ஸ் சுவிப் மூலம் பந்தை தூக்கி அடித்து மாற்றத்தை ஏற்படுத்தினார்.
ரிச்சர்ட்ஸ், ஜெயசூர்யா, டிவில்லியர்ஸ் ஆகிய 3 வீரர்களுமே தொழில்நுட்பத்தை அறிந்த முறையான பேட்ஸ்மென்கள்தான். மனவலிமையும், திறமையும் மூலம் அவர்களால் மாற்றத்தை கொண்டுவர முடிந்தது.
ரிச்சர்ட்ஸ் 121 டெஸ்டில் 8540 ரன்னும் (சராசரி 50.23), ஒருநாள் போட்டியில் 6721 ரன்னும் (சராசரி 47) எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அவரது ஸ்டிரைக்ரேட் 90.20 ஆகும்.
ஜெயசூர்யா 1996 உலக கோப்பையில் முதல் 15 ஓவர்களில் அதிரடியாக விளையாடி தனது அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
டிவில்லியர்ஸ் 114 டெஸ்டில் 8765 ரன்னும், 228 ஒருநாள் போட்டியில் 9577 ரன்னும், 78 இருபது ஓவர் போட்டியில் 1673 ரன்னும் எடுத்துள்ளார்.

ஆனால் அவர் முதல் 15 ஓவர்களில் வேகப்பந்தை அதிரடியாக ஆடி புதிய அத்தியாயத்தை உருவாக்கினார்.

14 வயதுக்குட்பட்ட மண்டல போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மகன் 2 மாதத்தில் 2 இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
பெங்களூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிபரல வீரர் ராகுல் டிராவிட். தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும் அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் பணியாற்றி இருக்கிறார். இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக தற்போது அவர் இருக்கிறார்.
ராகுல் டிராவிட்டின் மகன் சமித் பெங்களூரில் உள்ள மல்லையா அதிதி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த பி.டி.ஆர். ஷீல்டு 14 வயதுக்குட்பட்ட மண்டல போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் இரட்டை சதம் அடித்தார்.

பேட்டிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் சமித் சாதித்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
கடந்த 3 மாதங்களில் ராகுல் டிராவிட் மகன் 2-வது முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார். டிசம்பர் மாதம் அவர் துணை தலைவர் லெவன் அணிக்காக விளையாடி 201 ரன் குவித்து இருந்தார்.

146 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் அவர் 200 ரன் குவித்தார். சமித்தின் இந்த ஆட்டத்தால் அவரது அணி 3 விக்கெட் இழப்புக்கு 377 ரன் (50 ஓவர்) குவித்தது. அடுத்து ஆடிய ஸ்ரீகுமரன் அகாடமி அணி 110 ரன்னில் சுருண்டது. இதனால் சமித் டிராவிட் அணி 267 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் சமித் சாதித்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
கடந்த 3 மாதங்களில் ராகுல் டிராவிட் மகன் 2-வது முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார். டிசம்பர் மாதம் அவர் துணை தலைவர் லெவன் அணிக்காக விளையாடி 201 ரன் குவித்து இருந்தார்.
ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார், கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி:
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ‘கிரிகோ ரோமன்’ 55 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்திய வீரர் அர்ஜூன் ஹலாகுர்கி 7-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் டோங்யோக் வானை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றார். 87 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் இந்திய வீரர் சுனில் குமார், கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்தார். இதில் 1-8 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த சுனில் குமார் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு தொடர்ச்சியாக 11 புள்ளிகள் குவித்ததுடன், சரிவில் இருந்து மீண்டு 12-8 என்ற புள்ளி கணக்கில் அஜாமத் குஸ்துபயேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்த சுனில் குமார் தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 130 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் மெஹர் சிங் 1-9 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் மின்செக் கிம்மிடம் தோல்வி அடைந்தார்.
ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்றுள்ள ஜப்பான், தென்கொரியா மற்றும் சீன தைபேவை சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மூககவசம் அணிந்தபடி தங்கள் பந்தயங்களில் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் மற்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசு ஆகியவற்றுக்கு பயந்து வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூககவசம் அணிந்து போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

துபாயில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா - கார்சியா ஜோடி ரஷியா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
துபாய்:
துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரான்சின் கரோலின் கார்சியா ஜோடி, ரஷியா ஜோடியை சந்தித்தது. இந்த போட்டியில் 6-4, 6-4, 10-8 என்ற கணக்கில் சானியா ஜோடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சானியா ஜோடி முன்னேறியது.
பும்ராவுக்கு எதிராக நியூசிலாந்து அணி கடைபிடித்த எச்சரிக்கையுடன் விளையாடும் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும் என ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். இவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை பேட்ஸ்மேன்களால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து தொடரின்போது பும்ரா பந்தை அடித்து விளையாடாமல் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளும் அணுமுறையை பேட்ஸ்மேன்கள் கடைபிடித்தனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் பும்ரா ஏமாற்றம் அடைந்தார்.
இந்நிலையில் இந்த அணுகுமுறையை மற்ற அணிகளும் கடைபிடிக்கும் என நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்த்து சிறப்பாக விளையாடினார் என்று நினைக்கிறேன். அவர்கள் பும்ராவை மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடினார்கள். அதேவேளையில் அனுபவம் இல்லாத (நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்) வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இருந்தனர். பும்ராவின் கடினமான டெலிவரியை கண்டுபிடித்தனர்.
மற்ற அணிகளும் பும்ராவின் கடினமான டெலிவரியை தற்போது கண்டுபிடித்தால், மற்ற பந்து வீச்சாளர்கள் மீது தாக்குதல் நடத்தலாம். பந்து வீச்சாளர்கள் ஒரு குரூப்பாக செயல்படுவது அவசியம். ஆடுகளம் பிளாட்டாக இருக்கும்போது பந்து வீசுவது எளிதானது அல்ல. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா சிறப்பாகத்தான் பந்து வீசினார். இருந்தாலும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.
டெஸ்ட் தொடரில் பும்ரா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.

ஆறு அணிகள் பங்கேற்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சியில் நாளை தொடங்கும் நிலையில், வாட்சன் உள்பட 36 வெளிநாட்டு வீரர்கள் இதில் விளையாடுகின்றனர்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால் நடத்தப்பட்டு வருகிறது. நான்கு வருடத்திற்கு முன் இந்தத் தொடர் அறிமுகமான போது வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் மண்ணில் விளையாட தயங்கினர்.
இதனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டிகளை நடத்த வேண்டிய சூழ்நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. அதன்பின் மெல்ல மெல்ல பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டியை நடத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக 2020 சீசனில் எல்லா ஆட்டத்தையும் பாகிஸ்தான் மண்ணில் நடத்துகிறது.
இந்தத் தொடர் நாளை கராச்சியில் தொடங்குகிறது. இதில் வாட்சன், டேரன் சமி உள்பட 36 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார். மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற இது மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என பாகிஸ்தான் நம்புகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி வாசிம் கான் கூறுகையில் ‘‘வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வருவது எங்களுக்கு மிகப்பெரிய போனஸ். சர்வதேச போட்டிக்கான மிகப்பெரிய முன்னேற்றம். ஏனென்றால், வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் நான்கு வாரங்கள் முதல் ஐந்து வாரங்கள் வரை தங்கியிருந்து பாதுகாப்பான முறையில் விளையாடலாம் என நம்புகிறார்கள்’’ என்றார்.
2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது இலங்கை அணி சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன்பின் பாகிஸ்தான் செல்ல வெளிநாட்டு அணிகள் மறுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காளேதேசம் வீரர்கள் வார்த்தை போரில் மோதிக் கொண்ட போதிலும் அமைதியாக இருக்க இதுதான் காரணம் என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய நேரத்தில் இருந்தே வங்காளதேசம் அணி வீரர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டனர். போட்டி முடிந்த பின்னர் இந்த வார்த்தை போர் கைகலப்பு வரை சென்றது. இதில் சில வீரர்கள் ஐசிசி-யால் எச்சரிக்கப்பட்டனர்.
ஆனால் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலை வங்காளதேசம் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் சீண்டினர். ஜெய்ஸ்வால் அதற்கு பதிலடி கொடுக்காமல் பேட்டிங்கில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவர் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் வார்த்தை போரில் ஈடுபடாமல் இருந்ததற்கு ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில் ‘‘இதற்கு காரணம் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் தெண்டுல்கர் சார்தான். அவர்கள் என்னுடைய பேட் மட்டுமே பேச வேண்டும், வாய் பேசக்கூடாது. இந்த ஒரு நினைப்போடுதான் விளையாட வேண்டும் என என்னிடம் கூறியிருந்தனர். நான் அவர்களுடைய ஆலோசனையைத்தான் டாப்பில் வைத்திருக்கிறேன்.
அதனால்தான் இறுதிப் போட்டியில் வங்காளதேச அணி வீரர்களுடன் வார்த்தைப்போரில் ஈடுபடவில்லை. நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்து, ரன்களை உயர்த்த வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஒரு விஷயம்தான் என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது’’ என்றார்.

போட்டியை நடத்தும் சொந்த அணிக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற வேண்டியது அவசியம் என லட்சுமண் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வருகிற வெள்ளிக்கிழமை (21-ந்தேதி) வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நியூசிலாந்து மண்ணில் ஸ்விங், பவுன்சர், புதுப்பந்தை (New Ball) இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகின்றன.
இந்நிலையில் கேம் பிளான் குறித்து லட்சுமண் விவரித்துள்ளார். இந்தியா ஆதிக்கம் செலுத்த அவர் கூறும் ஆலோசனை கீழ் வருமாறு:-
இளம் தொடக்க வீரர்களுக்கு மிகப்பெரிய சாவல் காத்திருக்கிறது. மயங்க் அகர்வால் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. மேலும், இந்தியா ஏ அணிக்கெதிராக இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பிரித்வி ஷா அல்லது ஷுப்மான் கில் ஆகியோரில் ஒருவர் களம் இறங்க வாய்ப்புள்ளது. இருவருக்கும் அனுபவம் கிடையாது.
போட்டியை நடத்தும் அணியை அதன் சொந்த சூழ்நிலையில் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டுமென்றால், முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் புதுப்பந்து (New Ball) தாக்குதலை எப்படி தாக்குப்பிடிக்கிறோம் என்பது பொறுத்துதான் ரன்குவிப்பு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஆறு அணிகளில் ஒன்றான செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை வாங்குகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் லீக்கை நடத்துவதுபோல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் ஆறு அணிகள் விளையாடுகின்றன. இதில் ஒரு அணி செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியாகும். இந்த அணிக்கு டேரன் சமி கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அந்த அணியை வாங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாம். இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியதும் ஒப்பந்தம் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஒருவரான ஷாருக்கான் டிரினிடாட் அண்டு டொபாக்கோ அணியை வாங்கினார். அதன்பின் அந்த அணியின் பெயர் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என பெயர் மாற்றப்பட்டது.
2013-ம் ஆண்டில் இருந்து கரீபியன் பிரிமீயர் லீக் நடைபெற்று வருகிறது.