என் மலர்
விளையாட்டு
கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஆறு அணிகளில் ஒன்றான செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை வாங்குகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் லீக்கை நடத்துவதுபோல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் ஆறு அணிகள் விளையாடுகின்றன. இதில் ஒரு அணி செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியாகும். இந்த அணிக்கு டேரன் சமி கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அந்த அணியை வாங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாம். இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியதும் ஒப்பந்தம் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஒருவரான ஷாருக்கான் டிரினிடாட் அண்டு டொபாக்கோ அணியை வாங்கினார். அதன்பின் அந்த அணியின் பெயர் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என பெயர் மாற்றப்பட்டது.
2013-ம் ஆண்டில் இருந்து கரீபியன் பிரிமீயர் லீக் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காத போதிலும் கேஎல் ராகுல், ரஞ்சி டிராபி காலிறுதியில் கர்நாடகா அணிக்காக விளையாடவில்லை.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். இவருக்கு அணியில் இடம் கிடைக்காததால் விக்கெட் கீப்பருடன் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காததால் அவர் இந்தியா திரும்பியுள்ளார். கேஎல் ராகுல் சர்வதேச போட்டி இல்லாத நேரத்தில் கர்நாடகா அணிக்காக விளையாடுவது வழக்கம். ரஞ்சி டிராபியில் கர்நாடகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
20-ந்தேதி நடைபெறும் இந்த ஆட்டத்தில் கர்நாடகா ஜம்மு-காஷ்மீர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதனால் ரஞ்சி டிராபியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை. அதேசமயத்தில் மணிஷ் பாண்டே கர்நாடகா அணிக்காக விளையாடுகிறார்.

காயம் குணமாகி அணிக்கு திரும்பியுள்ள டிரென்ட் போல்ட், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட். இடது கை பவுலர் ஆன
இவர் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் விளையாடிய டிரென்ட் போல்டுக்கு கையில் முறிவு ஏற்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட டிரென்ட் போல்ட் உடற்தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவதற்காக காத்திருக்க முடியாது என்று முதல் டெஸ்டில் விளையாட இருக்கும் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறும்போது ‘‘தனிப்பட்ட முறையில் நான் போட்டியில் விளையாடும்போது விராட் கோலி போன்ற வீரர்களை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என விரும்புவேன். எனக்குள்ளே இப்படி ஒரு போட்டியை உருவாக்கிக் கொள்வேன். ஆகவே, விராட் கோலியை அவுட்டாக்குவதற்காக காத்திருக்க முடியாது.
ஆனால் அவர் தலைசிறந்த வீரர். அவர் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்’’ என்றார்.

உலக கோப்பையை வென்றால் விஷயங்கள் மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தாய்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். சிட்னியில் 21-ந்தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சி சிட்னியில் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் உள்பட அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
பின்னர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த முறை எங்களுடன் இருந்த அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளை இந்த தடவை நாங்கள் இழக்கிறோம். இருப்பினும் இளம் வீராங்கனைகளை கொண்ட இந்திய அணி நல்ல வளர்ச்சி கண்டு இருப்பதுடன் சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி வீராங்கனைகள் செயல்பட்டு வருகிறார்கள். நமது அணி நல்ல நிலையில் இருக்கிறது.
நமது அணி நாளுக்கு, நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. அணியினர் அனைவரும் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர். உலக கோப்பையை வென்றால் அது எங்களுக்கு மிகப்பெரிய விஷயமாகும். எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். நாங்கள் உலக கோப்பையை வென்றால் விஷயங்கள் மாறும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற போட்டிகள் வீராங்கனைகளுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் அளித்த பேட்டியில், ‘‘20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடக்கத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். உள்ளூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் அனுபவித்து விளையாட விரும்புகிறோம். உள்ளூரில் உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு ஏதாவது ஒரு முறைதான் கிடைக்கும். நெருக்கடியும், எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கத்தான் செய்யும். எல்லா அணிகளை போல் நாங்களும் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.

ஐபிஎல் 2020 தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த சனிக்கிழமை கசிந்த நிலையில், இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2020 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 29-ந்தேதி தொடங்குவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் வார இறுதி நாளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். லீக் போட்டிகள் 44 நாட்களுக்கு பதிலாக 50 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும் அதே நேரத்தில் சில போட்டிகள் மாலை 4 மணிக்கு தொடங்கும் எனத் கடந்த சனிக்கிழமை தகவல் வெளியானது. அத்துடன் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2020 சீசன் போட்டிக்கான அட்டவணை முழு விவரம்:-
மார்ச் 29, ஞாயிறு - மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - (இரவு 8:00) - மும்பை
மார்ச் 30, திங்கள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (இரவு 8:00)- டெல்லி
மார்ச் 31, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) - பெங்களூர்
ஏப்ரல் 1, புதன் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்
ஏப்ரல் 2, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- சென்னை
ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் (இரவு 8:00)- கொல்கத்தா
ஏப்ரல் 4, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- மொகாலி
ஏப்ரல் 5, ஞாயிறு- மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (மாலை 4:00)- மும்பை
ஏப்ரல் 5, ஞாயிறு- ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர் / கவுகாத்தி
ஏப்ரல் 6, திங்கள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா
ஏப்ரல் 7, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- பெங்களூர்
ஏப்ரல் 8, புதன்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் - (இரவு 8:00)- மொகாலி
ஏப்ரல் 9, வியாழக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) - ஜெய்ப்பூர் / கவுகாத்தி
ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை- டெல்லி தலைநகர் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- டெல்லி
ஏப்ரல் 11, சனிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (இரவு 8:00)- சென்னை
ஏப்ரல் 12, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (மாலை 4:00)- ஐதராபாத்
ஏப்ரல் 12, ஞாயிறு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா
ஏப்ரல் 13, திங்கள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- டெல்லி
ஏப்ரல் 14, செவ்வாய்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- மொகாலி
ஏப்ரல் 15, புதன்- மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மும்பை
ஏப்ரல் 16, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்
ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- மொகாலி
ஏப்ரல் 18, சனிக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்
ஏப்ரல் 19, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (மாலை 4:00)- டெல்லி
ஏப்ரல் 19, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- சென்னை
ஏப்ரல் 20, திங்கள்- மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- மும்பை
ஏப்ரல் 21, செவ்வாய்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
ஏப்ரல் 22, புதன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்
ஏப்ரல் 23, வியாழக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- கொல்கத்தா
ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- சென்னை
ஏப்ரல் 25, சனிக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
ஏப்ரல் 26, ஞாயிறு- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மாலை 4:00- மொகாலி
ஏப்ரல் 26, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்
ஏப்ரல் 27, திங்கள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- சென்னை
ஏப்ரல் 28, செவ்வாய்- மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)- மும்பை
ஏப்ரல் 29, புதன்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
ஏப்ரல் 30, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்
மே 1, வெள்ளிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மும்பை
மே 2, சனிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா
மே 3, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (மாலை 4:00)- பெங்களூர்
மே 3, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- டெல்லி
மே 4, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
மே 5, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஐதராபாத்
மே 6, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- டெல்லி
மே 7, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)- சென்னை
மே 8, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி
மே 9, சனிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஐதராபாத்
மே 10, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (மாலை 4:00)- சென்னை
மே 10, ஞாயிறு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- கொல்கத்தா
மே 11, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
மே 12, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஐதராபாத்
மே 13, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- டெல்லி
மே 14, வியாழக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்
மே 15, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- கொல்கத்தா
மே 16, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி
மே 17, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்

சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிசா மற்றும் மணிப்பூர் அணிகள் வெற்றி பெற்றனர்.
சென்னை:
65-வது சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஓ.எம்.ஆரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் 1,200 க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியை அர்ஜூணா விருதை வென்ற செபாஸ்டியன் சேவியர் தொடங்கி வைத்தார்.
செயின்ட்ஜோசப் கல்விக்குழும சேர்மன் பி.பாபு மனோகரன் இயக்குனர் சசிசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் ஒடிசா அணி குஜராத்தை 35-21, 35-14 என்ற கணக்கில் வீழ்த்தியது. மேற்கு வங்காளம் அணி 35-22, 35-26 என்ற கணக்கில் அட்டாமிக் எனர்ஜி அணியை தோற்கடித்தது.
பெண்கள் பிரிவில் மேற்கு வங்காளம், மணிப்பூர், ஒடிசா, இஸ்ரோ அணிகள் வெற்றி பெற்றன.

இந்தியா, பாகிஸ்தான் உபசரிக்கும் சிறந்த நாடுகளில் ஒன்று. மீண்டும் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் கடைசியாக 2012-13-ல் நடந்தது. பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்தியா வந்தது. அதுவும் 5 வருட இடைவெளிக்குப் பிறகு. இரு நாடுகளும் கடைசியாக 2007-ல்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடியது .
இருநாடுகளுக்கும் இடையிலான தொடர் 2013-க்குப் பிறகு நடைபெறவில்லை என்றாலும், ஐசிசி போட்டிகளிலும் ஆசிய கோப்பைகளிலும் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நாம் டேவிஸ் கோப்பை விளையாடலாம். ஒருவருக்கொருவர் கபடி விளையாடலாம். பின்னர் கிரிக்கெட் விளையாடுவதில் என்ன தவறு? . இந்தியா பாகிஸ்தானுக்கு வர முடியாது. பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல முடியாது என்று எனக்கு புரிகிறது. ஆனால் நாம் நடுநிலை இடங்களில் ஆசியா கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விளையாடுகிறோம். இருதரப்பு தொடர்களுக்கும் இதைச் செய்ய முடியவில்லையா?.
நாம் உலகின் மிகச்சிறந்த விருந்தோம்பல் நாடுகளில் ஒன்றாக இருக்கின்றோம். இந்தியா அதை முதலில் பார்த்து உள்ளது. வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் தெண்டுல்கர் போன்றவர்களிடம் கேளுங்கள்.
நமக்கிடையிலான வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கப்படக்கூடாது. இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் இருதரப்பு தொடரை விளையாட முடியும் என்று நம்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது முக்கியம்.
பாகிஸ்தான் பயணம் செய்ய மிகவும் பாதுகாப்பான இடம். இந்தியாவின் கபடி அணி வந்தது. அவர்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. வங்காளதேசம் அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்தது. ஆனால் இன்னும் சந்தேகங்கள் இருந்தால் நடுநிலை இடங்களை நான் பரிந்துரைக்கிறேன்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கெட் விளையாட முடியாவிட்டால் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும்.
நீங்கள் உறவுகளை துண்டிக்க விரும்பினால் வர்த்தகத்தை நிறுத்துங்கள். கபடி விளையாடுவதை நிறுத்துங்கள். ஏன் கிரிக்கெட் மட்டும்?. அது கிரிக்கெட்டாக இருக்கும் போதெல்லாம் நாம் அதை அரசியல் ஆக்குகிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
நாம் வெங்காயம் மற்றும் தக்காளி சாப்பிடுகிறோம். நாம் இனிப்புகளை பரிமாறிக் கொள்கிறோம். பிறகு ஏன் கிரிக்கெட் விளையாட முடியாது?.
இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது வருவாயை கொடுக்கிறது. அது ஊக்கமளிக்கிறது. அழுத்தத்தைக் கையாளக்கூடிய புதிய வீரர்களைப் நாம் பார்க்கிறோம். அனைவரும் முன்வந்து இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களை சாத்தியமாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு சோயிப் அக்தர் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இன்று இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மோதியது.
டாஸ் ஜெயித்த அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்து வீச்சில் இந்திய வீராங்கனைகள் திணறினார்கள். ஷாபிலி வர்மா 12 ரன்னிலும், மந்தானா 4 ரன்னிலும், ரோட்ரியஸ் 9 ரன்னிலும், கேப்டன் கவுர் 11 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது.
இதனையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி களமிறங்கியது. கிர்பி 42 ரன்னிலும், கேப்டன் டெய்லர் 16 ரன்னிலும் அவுட் ஆயினர். கடைசியாக மேத்யூஸ், ஹென்றி ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். கடைசி 6 பந்தில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்திய அணியின் பூனம் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய பெண்கள் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது, 50 (5 கோடி) மில்லியன் ஆக உள்ளது. இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 31 வயதான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் இதுவரை 930 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டவராக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனோல்டா விளங்குகிறார். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரோனோல்டா 200 மில்லியன் (20 கோடி) பின் தொடர்பவர்களை (பாலோயர்ஸ்) பெற்றுள்ளார்.
இந்திய அளவில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் , பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா (49.9 மில்லியன்) உள்ளார். 3 வது இடத்தில் தீபிகா படுகோனே (44.1 மில்லியன்கள்) உள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 40 பேர் கொண்ட சீன அணிக்கு ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
புதுடெல்லி:
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள கடும் முயற்சிக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 40 பேர் கொண்ட சீன அணிக்கு இந்த போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
சீன அணியினருக்கு விசா வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது. இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கருத்து தெரிவிக்கையில், ‘கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. எனவே தற்போது வீரர்களின் உடல் நலம் மிகவும் முக்கிய பிரச்சினையாகும். சீன அணியினருக்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்ததற்கான காரணத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்றார்.

விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெர்லின்:
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.
இதில் 2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதேபோல் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறந்த அணிக்கான விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியின் கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி, லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. அந்த விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த விருதை வழங்கினார்.
விருது பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், “இது மிகவும் சிறப்பு மிக்கது. உலக கோப்பையை வென்ற போது இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது” என்றார்.
டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தென்ஆப்பிரிக்கா ரசிகர்களின் கேலி கிண்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று லாங்கர் தெரிவித்துள்ளார்.
பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு எதிராக அங்குள்ள ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் என்ன செய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்வதை விரும்புகிறோம். நாங்கள் நல்ல விதமான நினைவுகளை பெற்றுள்ளோம். கடந்த முறை எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. தற்போது அதில் இருந்து எங்களுடைய அணி வீரர்கள் கடந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் எங்கே இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
எப்படியும் தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் கோசம் எழுப்புவார்கள். அதை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’’ என்றார்.