என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    பெர்லின்:

    விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. 

    இதில்  2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

    இதேபோல் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறந்த அணிக்கான விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியின் கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி, லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

    சச்சினை தோளில் சுமந்து சென்ற வீரர்கள்

    கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. அந்த விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக்  இந்த விருதை வழங்கினார்.

    விருது பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், “இது மிகவும் சிறப்பு மிக்கது. உலக கோப்பையை வென்ற போது இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது” என்றார். 
    டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தென்ஆப்பிரிக்கா ரசிகர்களின் கேலி கிண்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று லாங்கர் தெரிவித்துள்ளார்.
    பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு எதிராக அங்குள்ள ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

    தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் என்ன செய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்வதை விரும்புகிறோம். நாங்கள் நல்ல விதமான நினைவுகளை பெற்றுள்ளோம். கடந்த முறை எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. தற்போது அதில் இருந்து எங்களுடைய அணி வீரர்கள் கடந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் எங்கே இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

    எப்படியும் தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் கோசம் எழுப்புவார்கள். அதை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
    இங்கிலாந்து தொடருக்காக ஓய்வு கொடுக்கப்பட்ட டு பிளிஸ்சிஸ், ரபடா ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் டு பிளிஸ்சிஸ், ரபடா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

    தற்போது ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ், ரபடா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    டு பிளிஸ்சிஸ் இன்று டி20 அணிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்வேன், என்னுடைய பேரார்வம் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இடம் பிடித்திருந்தார். இவர் அதிக அளவில் ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ஒருநாள் போட்டியில் இவருக்கு இடம் கொடுத்தது யார்?, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு இவர் தேவைதானா? என்று கிரிக்கெட் ரசிகர்கள் கொதித்தனர்.

    இந்நிலையில் நேர்மறை மற்றும் பேரார்வம் ஆகியவற்றின் மூலம் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியும் என ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘உறுதியாக நான் உலக கோப்பை மீது கண் வைத்துள்ளேன். நேர்மறை சிந்தனையுடன் போட்டியில் விளையாடுவதால், அதிக தன்னம்பிக்கை பெற்றுள்ளேன். போட்டி மீதான பேரார்வம் உலக கோப்பையை அணி வெல்வதற்கு, அல்லது என்னுடைய வேலை சிறப்பாக அமைய உதவும்.

    ஐபிஎல் தொடர் முக்கியமானது. ஐபிஎல் தொடரில் இருந்து உத்வேகத்தை பெற முடியும். அந்த உத்வேகத்தை அப்படியே உலக கோப்பைக்கு கொண்டு செல்வது அவசியம். அதன்பின் இலங்கை தொடர் இருக்கிறது. ஜிம்பாப்வேவுக்கு செல்கிறோம். அப்புறம் ஆசிய கோப்பை டி20 தொடர் இருக்கிறது’’ என்றார்.
    ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் 10-வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், கேஎல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
    டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 10-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதற்கு முன் 9-வது இடத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மோர்கன் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 10-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    கேஎல் ராகுல் 823 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 879 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், கொலின் முன்றோ 4-வது இடத்திலும், மேக்ஸ்வெல் 5-வது இடத்திலும், தாவித் மலன் 6-வது இடத்திலும், எவின் லீவிஸ் 7-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்து வீச்சு தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் எந்தவொரு இந்திய பந்து வீச்சாளர்களும் இல்லை. முதல் 10 இடங்களில் 9-வது இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் பிடித்துள்ளனர்.
    நியூசிலாந்து டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, இந்திய அணிக்கு தேர்வானதும் எனது கனவு நனவானது என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் நவ்தீப் சைனி. 27 வயதாகும் சைனி கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். அதன்பின் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    தற்போது நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வானபோது கனவு நனவானது என்று நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நவ்தீப் சைனி கூறுகையில் ‘‘எந்த நிலையை நான் அடைந்தேனோ, அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் இந்த கனவு இருக்கும். எனக்கும் அந்த கனவு இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

    நான் இந்திய அணிக்காக தேர்வானபோது, என்னுடைய கனவு நனவானது. முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினேன். அதன்பின் ரஞ்சி டிராபியில், தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். இது எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கான நிலை’’ என்றார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2020-21 டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு உள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018-19 டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்திருந்தது. இதற்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இதில் ஒரு போட்டியை டே-நைட் டெஸ்டாக நடத்த விரும்பியது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டே-நைட் டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மேலும் டேவிட் வார்னர், ஸ்மித் அணிக்கு திரும்பியுள்ளனர். லபுஸ்சேன் சூப்பர் பார்மில் உள்ளார். இதனால் இந்தியாவை எப்படியும் வீழ்த்தி விடலாம் என நினைக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்புள்ளது என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களுக்கு ஆடுகளம் குறித்து நன்றாக தெரியும். டே-நைட் டெஸ்டை பொறுத்த வரையில் இந்தியாவுக்கு அது புதிதாகும். விராட் கோலி அந்த சவாலை எடுக்கும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. நீங்கள் உலகின் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், முடிந்த அளவிற்கு வெளிநாட்டு மண்ணில் தொடர்களை வெல்ல வேண்டும்’’ என்றார்.
    தொடக்க பேட்ஸ்மேன் ஆன அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து அணிக்கு திரும்ப வேண்டுமென்றால் காத்திருந்தே ஆக வேண்டும் என மோர்கன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடியவர் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பைக்கான உத்தேச அணியில் இடம் பிடித்திருந்தார். அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அதில் இருந்து தற்போது வரை இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்காமல் உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஷ் டி20 லீக்கில் 576 ரன்கள் குவித்தார். சூப்பர் பார்மில் இருக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் காத்திருந்தே ஆக வேண்டும் என மோர்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘அணிக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கும் இடையிலான நம்பகத்தன்மை உடைந்துவிட்டது. அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, அவருடைய ஆட்டத்திறன் மோசமாக இருக்கவில்லை. அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.

    அதில் இருந்து நகர்ந்து, அணியுடன் நம்பகத்தன்மையை உருவாக்குவது அவசியமானது. அதற்கு போதுமான நேரம் தேவையானது’’ என்றார்.

    இதனால் டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம்தான்...
    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ் இடம் பிடிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்கிறார் மார்க் பவுச்சர்.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு தென்ஆப்பிரிக்கா அணி தயாராகி வந்தபோது திடீரென அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார்.

    அதன்பின் உலக கோப்பை நெருங்கும்போது மீண்டும் அணிக்கு திரும்ப தயார் என்று தெரிவித்தார். ஆனால் அணி நிர்வாகம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. தென்ஆப்பிரிக்கா அந்த தொடரில் படுதோல்வியடைந்தது.

    முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்று வெளியேறினர். இதனால் தென்ஆப்பிரிக்கா தள்ளாட ஆரம்பித்தது. அணியை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வர மாற்றங்கள் செய்யப்பட்டது. ஸ்மித் இயக்குனராகவும், மார்க் பவுச்சர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு சிறந்த அணியை தயார்படுத்த தென்ஆப்பிரிக்கா விரும்புகிறது. இதற்கிடையில் டி20 அணிக்கு திரும்ப தயார் என்று டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்திருந்தார். மார்க் பவுச்சர் டி வில்லியர்ஸ் திரும்புவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டி வில்லியர்ஸ்க்காக கதவு திறந்தே இருக்கும் என மார்க் பவுச்சர் மீண்டும் ஒருமுறை தெளிவுப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் ‘‘டி வில்லியர்ஸ் மீடியா மற்றும் பொது இடங்களில் இதுகுறித்து பேசி வருகிறார். ஆனால் என்னுடன் ஒருபோதும் பேசியது கிடையாது. அவருடனான பேச்சுவார்த்தை எப்படி செல்லப் போகிறது குறித்து விரைவில் எங்களுக்கு தெரியவரும்.

    நாங்கள் உலக கோப்பை தொடருக்கு சிறந்த அணியை அனுப்ப விரும்புவோம் என்பதை நான் பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே கூறி வருகிறேன். சிறந்த பார்மில் இருந்து அணிக்கு திரும்ப அவர் விரும்பினால், நாங்கள் கேட்டுக்கொண்ட காலத்திற்குள் அவராகவே இடம் பிடிப்பார். அணிக்கு அவர் சிறந்த வீரராக இருப்பார் என்றால், அவருக்கு கட்டாயம் இடமுண்டு.

    இதில் ஈகோ, கருத்து வேறுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக கோப்பைக்கு சிறந்த அணியை அனுப்பி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள்’’ என்றார்.

    ஏபி டி வில்லியர்ஸ்க்கு இன்று பிறந்த நாள். அவர் 36 வயதை பூர்த்தி செய்து 37-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
    பெண்கள் டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் பீல்டு மைதானத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.

    ஆனால் பிரிஸ்பேனில் கனமழை பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா நாளை கடைசி பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

    மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

    இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இது உலக கோப்பையின் தொடக்க போட்டியாகும்.
    தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டு பிளிஸ்சிஸ்.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். 50 ஓவர் உலக கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்ததால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் 1-3 எனத் தொடரை இழந்தது. டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. நேற்றுடன் முடிவடைந்த டி20 தொடரை தென்ஆப்பிரிக்கா 1-2 இழந்தது.

    இந்நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 அணிக்கான கேப்டன் பதவியை டு பிளிஸ்சிஸ் ராஜினாமா செய்துள்ளார். தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு குயிண்டன் டி காக் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து தொடரின்போது டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இதனால் டி காக் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
    இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட், இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ்படேல் இடம் பெற்றுள்ளனர்.
    வெலிங்டன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    20 ஓவர் தொடரைஇந்தியா 5-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட் அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் காயத்தால் ஆடவில்லை. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை.

    இதேபோல மற்றொரு வேகப்பந்து வீரர் கெய்ல் ஜேமிசன் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் தான் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். தற்போது டெஸ்டில் அறிமுகமாகிறார்.

    சுழற்பந்து வீரர்களில் இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ்படேல் இடம் பெற்றுள்ளார். அவர் 7 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

    முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:-

    வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், ரோஸ் டெய்லர், வாக்னர், கிராண்ட்ஹோம், நிக்கோலஸ், வாட்லிங், புளுன்டெல், போல்ட், ஜேமிசன், அஜாஸ்படேல், டேரியல் மிச்செல், சவுத்தி.
    ×