என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
தேசிய பால் பேட்மிண்டன் போட்டி: ஒடிசா-மணிப்பூர் அணிகள் வெற்றி
சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிசா மற்றும் மணிப்பூர் அணிகள் வெற்றி பெற்றனர்.
சென்னை:
65-வது சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஓ.எம்.ஆரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் 1,200 க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியை அர்ஜூணா விருதை வென்ற செபாஸ்டியன் சேவியர் தொடங்கி வைத்தார்.
செயின்ட்ஜோசப் கல்விக்குழும சேர்மன் பி.பாபு மனோகரன் இயக்குனர் சசிசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் ஒடிசா அணி குஜராத்தை 35-21, 35-14 என்ற கணக்கில் வீழ்த்தியது. மேற்கு வங்காளம் அணி 35-22, 35-26 என்ற கணக்கில் அட்டாமிக் எனர்ஜி அணியை தோற்கடித்தது.
பெண்கள் பிரிவில் மேற்கு வங்காளம், மணிப்பூர், ஒடிசா, இஸ்ரோ அணிகள் வெற்றி பெற்றன.

Next Story