search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின்ட் லூசியா, கிங்ஸ் லெவன் பஞ்சாப்
    X
    செயின்ட் லூசியா, கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    கரீபியன் பிரிமீயர் லீக் அணியை வாங்குகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஆறு அணிகளில் ஒன்றான செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை வாங்குகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
    இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் லீக்கை நடத்துவதுபோல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் ஆறு அணிகள் விளையாடுகின்றன. இதில் ஒரு அணி செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியாகும். இந்த அணிக்கு டேரன் சமி கேப்டனாக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அந்த அணியை வாங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாம். இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியதும் ஒப்பந்தம் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஒருவரான ஷாருக்கான் டிரினிடாட் அண்டு டொபாக்கோ அணியை வாங்கினார். அதன்பின் அந்த அணியின் பெயர் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என பெயர் மாற்றப்பட்டது.

    2013-ம் ஆண்டில் இருந்து கரீபியன் பிரிமீயர் லீக் நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×