search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவிஎஸ் லட்சுமண்
    X
    விவிஎஸ் லட்சுமண்

    நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றால்... கேம் பிளான்-ஐ விவரிக்கிறார் லட்சுமண்

    போட்டியை நடத்தும் சொந்த அணிக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற வேண்டியது அவசியம் என லட்சுமண் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வருகிற வெள்ளிக்கிழமை (21-ந்தேதி) வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நியூசிலாந்து மண்ணில் ஸ்விங், பவுன்சர், புதுப்பந்தை (New Ball) இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகின்றன.

    இந்நிலையில் கேம் பிளான் குறித்து லட்சுமண் விவரித்துள்ளார். இந்தியா ஆதிக்கம் செலுத்த அவர் கூறும் ஆலோசனை கீழ் வருமாறு:-

    இளம் தொடக்க வீரர்களுக்கு மிகப்பெரிய சாவல் காத்திருக்கிறது. மயங்க் அகர்வால் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. மேலும், இந்தியா ஏ அணிக்கெதிராக இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பிரித்வி ஷா அல்லது ஷுப்மான் கில் ஆகியோரில் ஒருவர் களம் இறங்க வாய்ப்புள்ளது. இருவருக்கும் அனுபவம் கிடையாது.

    போட்டியை நடத்தும் அணியை அதன் சொந்த சூழ்நிலையில் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டுமென்றால், முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் புதுப்பந்து (New Ball) தாக்குதலை எப்படி தாக்குப்பிடிக்கிறோம் என்பது பொறுத்துதான் ரன்குவிப்பு அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×