என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பயிற்சியை தொடங்கும் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு இருக்கிறது. அதில் விளையாட்டு வீரர்கள் வெளிப்புற மைதானத்தில் தனி பயிற்சியாளர் மேற்பார்வையில் அரசு அறிவுறுத்தி இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியில் ஈடுபடலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களிலும் மீண்டும் பயிற்சியை தொடங்கும் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி விதிமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ‘மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள கொரோனா நடைமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும். அரசின் நடைமுறை விதியில் இருந்து சாயின் வழிகாட்டுதல் வித்தியாசப்பட்டால் அரசு அறிவித்துள்ள நடைமுறைக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பயிற்சி பெறும் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    கொரோனா வைரசின் பாதிப்பு மற்றும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக விளக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பயிற்சி மையத்தின் நுழைவு வாயிலில் இருந்தே கடைப்பிடிக்கப்பட வேண்டும். குத்துச்சண்டையில் பார்ட்னருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும், தொடர் ஓட்டத்தில் ‘பேட்டனை’ மற்ற வீரருடன் மாற்றவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய நிலையில் வீரர்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்வதுடன், அது குறித்த அறிக்கையை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அனைத்து வீரர்களும், ஊழியர்களும் ஆரோக்ய சேது செயலியை முறையாக பயன்படுத்த வேண்டியது கட்டாயம். வீரர்கள் தங்களது தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது’ என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 
    மழைக்காலம் முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்தார்.
    மும்பை:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் தணிந்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதேநேரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி இருப்பதால் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்படும் பட்சத்தில், ஐ.பி.எல். போட்டியை வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. ஆனால் மத்திய அரசின் அனுமதி, மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒத்துழைப்பு, வருங்கால போட்டி அட்டவணை ஆகியவற்றை பொறுத்து தான் ஐ.பி.எல். போட்டியின் தலைவிதி நிர்ணயமாகும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அனைத்து நாட்டு வீரர்களையும் ஒருங்கிணைக்கும் போட்டிகளில் ஐ.பி.எல். மிகவும் சிறப்பான ஒன்றாகும். கடந்த இந்திய பொதுத்தேர்தலில் ஓட்டுபோட்ட மக்களை விட அதிகமானவர்கள் கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை பார்த்து இருக்கிறார்கள். ஸ்பான்சர் விஷயத்தில் கிரிக்கெட் தான் முன்னிலையில் இருக்கிறது. உலகின் சிறந்த வீரர்கள் வந்து விளையாடுவது தான் ஐ.பி.எல். போட்டியின் தனி சிறப்பாகும். அந்த தனிசிறப்பு தொடர வேண்டும் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது. எனவே இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து வீரர்கள் எடுக்கும் முடிவை நாம் மதிக்க வேண்டும். அரசின் வழிமுறைகளை நாங்கள் அப்படியே கடைப்பிடிப்போம். தற்போதைய ஊரடங்கு காலகட்டம் முடிந்ததும், மழைக்காலம் (பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை) தொடங்கி விடும். மழைக்காலம் முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கு முன்னதாக தற்போதைய நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். அதற்கு தகுந்தபடி எங்களது அணுகுமுறை அமையும்.

    ஐ.பி.எல். போட்டியை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும். போட்டிக்கு முன்னதாக எல்லோரையும் தனிமைப்படுத்த வேண்டும். வழக்கமாகவே போட்டி அட்டவணை நெருக்கடியாக இருக்கும். புதிய நடைமுறைகள் போட்டி அட்டவணையில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். பயிற்சிக்கு முன்பாக வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல பிரச்சினைகள் இருக்கிறது. இருப்பினும் இந்த நிலைமை விரைவில் மாறும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு இந்திய வீரர் தான் பொருத்தமானவராக இருப்பார் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரேம் சுமித் தெரிவித்துள்ளார்.
    கேப்டவுன்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவின் ஷசாங் மனோகர் இருக்கிறார். அவரது பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த நிலையில் ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி பொருத்தமானவராக இருப்பார், அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரரும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனருமான கிரேம் சுமித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    கிரேம் ஸ்மித் - சவுரவ் கங்குலி


    இது குறித்து சுமித் கூறுகையில், ‘கொரோனா தாக்கம் தணிந்த பிறகு ஐ.சி.சி.யை வழிநடத்த வலுவான தலைமை தேவை. தலைமை பண்புடன் நவீன கால கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஒருவர் பொறுப்பு ஏற்க இதுவே சரியான தருணம் ஆகும். அதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கச்சிதமான தேர்வாக இருப்பார். ஐ.சி.சி.யின் தலைவர் பதவி மிகவும் முக்கியமான பதவி. கிரிக்கெட்டில் நன்கு அனுபவம் உள்ள கங்குலி போன்றவர் தலைவராக இருந்தால் அது கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லது. அவர் தொடர்ந்து கிரிக்கெட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார்’ என்றார். 
    சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கரா அல்லது விராட்கோலியா என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கரா அல்லது விராட்கோலியா என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்த பதில் வருமாறு:-

    கோலியை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வேன். ஏனெனில் தெண்டுல்கர் விளையாடிய காலத்தில் விதிமுறைகள் வேறு மாதிரி இருந்தது. ஒரு வெள்ளைநிற பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 4 பீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்திற்குள் நிறுத்தப்பட்டனர்.

    விராட்கோலி பிரமாதமாக விளையாடி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளன. இரண்டு முனையிலும் புதிய பந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் பந்து பழசாகி ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. விரல்களை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பவுலர்களுக்கு ஏற்ற சூழல் இல்லை. 50 ஓவர்களிலும் 5 பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் நிறுத்தப்படுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிப்பு மேலும் சுலபமாகி விடுகிறது. தெண்டுல்கர் விளையாடிய காலத்தை பாருங்கள். வெவ்வேறு விதிமுறைகள் இருந்தன. 230 முதல் 240 ரன்கள் எடுத்தாலே அப்போது வெற்றிக்குரிய இலக்காக இருந்தது. நீண்ட காலம் விளையாடியதற்காகவும், விதிமுறைகள் அடிப்படையிலும் தெண்டுல்கரை தேர்வு செய்கிறேன்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    ஒரு நாள் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 7 சதங்களே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் விளையாடியிருந்தால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருப்பார் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். 1989 முதல் 2013 வரை சுமார் 24 வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34 ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் 15921 ரன்களும், 463 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 18426 ரன்களும், ஒரேயொரு டி20 போட்டியில் 10 ரன்களும் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    தற்போதைய காலக்கட்டத்தில் விளையாடி வரும் விராட் கோலி சச்சின் தெண்டுல்கரின் ஏறக்குறைய சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இருவரையும் ஒப்பிட்டு வருகிறார்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் விளையாடியிருந்தால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருப்பார் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர், சோயிப் அக்தர்

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘சச்சின் தெண்டுல்கர் மிகவும் கடினமான கால கிரிக்கெட்டில் பேட்டிங் செய்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னும் 1.30 லட்சம் ரன்கள் அதிகமாக அடித்திருப்பார். ஆகவே சச்சின் தெண்டுல்கர் - விராட் கோலி ஒப்பீடு சரியாக இருக்காது’’ என்றார்.

    ரன்-மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சர்வதேச அளவில் 21,901 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், தென்ஆப்பிரிக்காவுக்கு வந்து இந்தியா மூன்று டி20 போட்டிகளில் விளையாட கங்குலியிடம் சம்மதம் வாங்கிவிட்டார் ஸ்மித்.
    மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. கடைசி இரண்டு போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தால் ரத்து செய்யப்பட்டன

    தென்ஆப்பிரிக்க வீரர்கள் பாதுகாப்பாக சொந்த நாடு திரும்பினர். அதன்பின் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளது.

    ஜூன் 15-ந்தேதிக்குப்பின் ரசிகர்கள் இன்று வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகளை நடத்த ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் இயக்குனர் கிரேம் ஸ்மித், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய அணி ஆகஸ்ட் மாதம் தென்ஆப்பிரிக்கா வந்து மூன்று டி20 போட்டிகளில் விளையாட சம்மதம் வாங்கிவிட்டார்.

    இந்த போட்டிகள் ஐசிசி-யின் போட்டி அட்டவணைக்குள் வரவில்லை. இருநாட்டின் கிரிக்கெட் போர்டு இந்த முடிவை எடுத்துள்ளன. ஒருவேளை ஆகஸ்ட் மாத இறுதியில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், அடுத்த கோடைக்காலத்தில் நடத்தப்படும் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இயக்குனர் கிரேம் ஸ்மித் இதுகுறித்து பேசுகையில் ‘‘நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று போட்டிகளை நடத்த சம்மதம் பெற்றுள்ளோம். ஆகஸ்ட் மாதம் இறுதியில் என்ன நடக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் ஏதும் கூற இயலாது. ஆனால் சமூக இடைவெளி, ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த முடியும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

    ‘‘இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடினால் தென்ஆப்பிரிக்கா அணியின் நிதி நெருக்கடியை சமாளிக்க முக்கிய காரணமாக அமையும். 2019-2020 சீசனில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு சுமார் 36 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது’’ என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
    கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது குறுகிய கால தீர்வுதான் என்று பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
    ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எம்எஸ் டோனிக்குப் பதில் மாற்று விக்கெட் கீப்பரை இந்திய அணி நிர்வாகம் இன்னும் அடையாளம் காணவில்லை. இளம் வீரரான ரிஷப் பண்ட்-ஐ தயார் செய்து வருகிறது.

    ஆனால் அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் ரிஷப் பண்ட் அதை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நேரத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

    பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகிய இரு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதால், டி20 உலக கோப்பை தொடரில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரை ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என பார்தீவ் பட்டேலிடம் கேட்கப்பட்டது. அதற்கு கேஎல் ராகுல் குறுகிய கால தீர்வு என்று பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பண்ட், கேஎல் ராகுல்

    இதுகுறித்து பார்தீவ் பட்டேல் கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் கேஎல் ராகுல். நீங்கள் உலக கோப்பையை பற்றி சிந்தித்தால் கேஎல் ராகுல் குறுகிய கால தீர்வுகாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். உலக கோப்பையின்போது விக்கெட் கீப்பர் பணியை கேஎல் ராகுல் செய்தால், அதில் எந்தவித சந்தேகமும் இருக்க வாய்ப்பு இல்லை.

    ஆனால் ரிஷப் பண்ட் அவருடன் நிச்சயமாக இருப்பார். நான் ஒவ்வொரு முறையும் ரிஷப் பண்ட்-ஐ சந்திக்கும்போது, உனக்குள் திறமை இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் திறமை இல்லை என்றால் மக்கள் ஒருபோதும் உங்களை பற்றி பேசமாட்டார்கள். அகவே, இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்பேன். சில நேரங்களில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்போது, மீண்டும் பார்முக்கு வர முடியும்’’ என்றார்.
    விராட் கோலி வீட்டில் டைனோசர் போன்று நடந்த வீடியோவை அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
    நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் ஊரடங்கு காலத்தில் தாங்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் விராட் கோலி - அனுஷ்கா ஜோடியும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி நேற்று விராட் கோலி டைனோசராக நடித்துக் காட்டிய வீடியோவை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் டைனோசர் போல நடந்து வரும் கோலி கடைசியில் அதேபோல ஒலி எழுப்பி செல்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இது க்யூட்டான டைனோசர் என பதிவிட்டு வருகின்றனர்.
    அடுத்த ஆண்டிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் ரத்து செய்யப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த ஆண்டும்  ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் போட்டி ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தாமஸ் பேக் கூறுகையில் ‘‘ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021-ல் கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அல்லது 5 ஆயிரம் பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது. விளையாட்டு வீரர்களை நிச்சயமற்ற நிலையில் வைத்திருக்க முடியாது.

    மாறுபட்ட சூழ்நிலைகள் உள்ளன. அதை அடையாளம் காண்பது மிகவும் எளிது அல்ல. உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 23 -ந்தேதிக்குள் எப்படி இயங்கப்போகிறது என்பது குறித்து தெளிவான பார்வை கிடைத்த பின்னர்தான், பொருத்தமான முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
    சுயநலவாதி என்று கூறிய வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பதில் அளித்துள்ளார்.
    மெல்போர்ன்:

    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்-அவுட்டில் தொடர்புடைய வீரர்களின் பட்டியலை ‘கிரிக்இன்போ’ இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் முதலிடத்தில் உள்ளார்.

    அவர் பேட்டிங் செய்யும் போது ஏற்பட்ட ரன்-அவுட் நிகழ்வு மொத்தம் 104. இதில் அவரே ரன்-அவுட்டில் வீழ்ந்தது 31 முறை. எதிர்முனையில் நின்ற சக பேட்ஸ்மேன்கள் ரன்-அவுட் ஆனது 73 தடவை. இந்த பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 2-வது இடத்திலும் (ரன் அவுட்டில் தொடர்பு 101), சச்சின் தெண்டுல்கர் 3-வது இடத்திலும் (98) உள்ளனர். இந்த புள்ளி விவரத்தை சுட்டிகாட்டி பேசிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, ‘ஸ்டீவ் வாக்கை நான் வெறுக்கவில்லை. எனது கணிப்பில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய சிறந்த அணியில் அவரையும் தேர்வு செய்திருந்தேன். ஆனால் என்னுடன் விளையாடிய வீரர்களில் ஸ்டீவ் வாக்கை விட சுயநலம் கொண்டவர் யாரும் கிடையாது. புள்ளிவிவரங்களே அதற்கு சாட்சி. இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன்’ என்றார்.

    அவரது குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் இப்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது, ‘மக்கள் இதை தொன்று தொட்டு வரும் நீண்ட கால பகை என்று பேசிக்கொள்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது இரு நபர்களுக்கு இடையே உள்ள பகை மட்டுமே. அதிலும் நான் ஒரு போதும் வில்லங்கத்தை கொண்டு வந்ததில்லை. அதனால் இது ஒரு நபர் சார்ந்த விஷயம் தான். வார்னேவின் கருத்துகள் அவரை பற்றி தான் பிரதிபலிக்கிறது. மற்றபடி இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை’ என்றார். 
    வார்னேயின் குற்றச்சாட்டு அவரையே பிரதிபலிக்கிறது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்-அவுட்டில் தொடர்புடைய வீரர்களின் பட்டியலை ‘கிரிக்இன்போ’ இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது.

    இதில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் முதலிடத்தில் உள்ளார். அவர் பேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட ரன்-அவுட் நிகழ்வு மொத்தம் 104. இதில் அவரே ரன்-அவுட்டில் வீழ்ந்தது 31 முறை. எதிர்முனையில் நின்ற சக பேட்ஸ்மேன்கள் ரன்-அவுட் ஆனது 73 தடவை.

    இந்த பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 2-வது இடத்திலும் (ரன் அவுட்டில் தொடர்பு 101), சச்சின் தெண்டுல்கர் 3-வது இடத்திலும் (98) உள்ளனர்.

    இந்த புள்ளி விவரத்தை சுட்டிகாட்டி பேசிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, ‘‘ஸ்டீவ் வாக்கை நான் வெறுக்கவில்லை. எனது கணிப்பில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய சிறந்த அணியில் அவரையும் தேர்வு செய்திருந்தேன். ஆனால் என்னுடன் விளையாடிய வீரர்களில் ஸ்டீவ் வாக்கை விட சுயநலம் கொண்டவர் யாரும் கிடையாது. புள்ளி விவரங்களே அதற்கு சாட்சி. இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன்’’ என்றார்.

    ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே

    அவரது குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் இப்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘மக்கள் இதை தொன்றுதொட்டு வரும் நீண்ட கால பகை என்று பேசிக்கொள்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது இரு நபர்களுக்கு இடையே உள்ள பகை மட்டுமே. அதிலும் நான் ஒருபோதும் வில்லங்கத்தை கொண்டு வந்ததில்லை. அதனால் இது ஒரு நபர் சார்ந்த விஷயம்தான். வார்னேவின் கருத்துகள் அவரை பற்றிதான் பிரதிபலிக்கிறது. மற்றபடி இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை’’ என்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது ஸ்டீவ் வாக் கேப்டனாக இருந்தார். அப்போது ஷேன் வார்னேயை போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கினார். அதில் இருந்து இருவருக்கும் இடையில் இதுபோன்று வார்த்தை போர் ஏற்பட்டு வருகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்களுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த ரூ. 3.78 கோடி எங்கே? என மைக்கேல் ஹோல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
    கிங்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான மைக்கேல் ஹோல்டிங் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது;-

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்களின் நலனுக்காக 2014-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.3.78 கோடியை ( இன்றைய மதிப்பு ) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி. சி.ஐ.) வழங்கியது. நான் ஒரு முன்னாள் வீரர். அதனால் அந்த பணம் எனக்கு வேண்டும் என்று கேட்கவில்லை.

    ஆனால் அந்தப்பணம் பற்றி கேள்வியேபடாத பல முன்னாள் வீரர்களை எனக்கு தெரியும். ஒருவேளை முன்னாள் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. வழங்கிய தொகையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அளித்திருந்தால் அதைப்பற்றி பகிரங்கமாக விளம்பரம் செய்திருப்பார்கள்.

    பி.சி.சி.ஐ. வழங்கிய ரூ.3.78 கோடி பணம் எங்கே போனது. முன்னாள் வீரர்களுக்காக வழங்கப்பட்ட இந்த தொகையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தவறாக பயன்படுத்தி உள்ளது.

    என்னுடைய அடுத்த பேட்டியில் இது குறித்த கூடுதல் விவரங்களை அளிப்பேன்.

    இவ்வாறு மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
    ×