என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின்னர் ஐபிஎல் போட்டியை நடத்துவது சிறந்தது என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2 ஆண்டாக ஆடி வருகிறார்.
இந்த நிலையில் உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியே சிறந்தது என்று பட்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால்தான் வளர்ந்துள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் விளையாடியே தீர வேண்டும் என்பதே என் ஆசை. உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் .கிரிக்கெட்தான் சிறந்த போட்டியாகும். ஐ.பி.எல். தொடரில் சில சவால்கள் மிகப்பிரமாதமானவை, கோலி, டி வில்லியர்ஸ், கெய்ல் ஆகியோர் ஸ்டெயின், பும்ரா, மலிங்காவை எதிர்கொள்வது சுவாரசியம். கோலி, டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆடுவதைப் பார்ப்பது வித்தியாசமானது.
கெவின் பீட்டர்சன் உண்மையில் நாங்கள் எல்லாம் ஐ.பி.எல். ஆடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர். வளரும் கிரிக்கெட் வீரர்களுகு ஐ.பி.எல். எவ்வளவு முக்கியம் என்பதை பீட்டர்சன் உணர்ந்திருக்கிறார்.
இவ்வாறு ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிக்காக உலககோப்பையை தள்ளிவைக்க எந்த வித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது
புதுடெல்லி:
13-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை கடந்த மார்ச் 29-ந் தேதி முதல் மே மாதம் 23-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) காலவரையின்றி ஒத்திவைத்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் இந்த போட்டியை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பி.சி.சி.ஐ. இருக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டி தள்ளி வைக்கப்படும் போது அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல்.லை நடத்த முடிவு செய்து உள்ளது.
செப்டம்பர் 25-ந் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தினால் வருவாய் கிடைக்காது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. மேலும் உலகக்கோப்பையை விட இந்திய அணி டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்வதைத்தான் விரும்புகிறது. ஏனென்றால் இந்த தொடர் மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உலககோப்பை நடத்துவதில் விருப்பமில்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் இந்த போட்டி 2 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வருகிற 28-ம் தேதி முடிவு செய்கிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்காக உலகக் கோப்பையை தள்ளிவைக்க இந்தியா நெருக்கடி கொடுத்துள்ளதாகவும், பி.சி.சி.ஐ. அதன் செல்வாக்கை பயன்படுத்தி வருவதாகவும் ஆஸ்திரேலிய மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஐ.பி.எல். போட்டிக்காக உலகக்கோப்பையை தள்ளி வைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே ஐ.பி.எல். போட்டிக்காக உலககோப்பையை தள்ளிவைக்க எந்த வித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமால் கூறியதாவது;-
ஐ.சி.சி கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பையை நடத்த என்னென்ன வாய்ப்பு உள்ளது என ஆராய உள்ளோம். அப்படி இருக்கும் போது அந்தப் போட்டியை தள்ளி வைக்குமாறு ஐ.சி.சி.க்கு ஏன் பி.சி.சி.ஐ. ஆலோசனை வழங்க வேண்டும். ஐ.பி.எல் போட்டியை நடத்துவதற்காக இத்தகைய முயற்சியில் ஒருபோதும் பி.சி.சி.ஐ ஈடுபடாது. எந்தவித அழுத்தமும் கொடுக்கமாட்டோம்.
ஆஸ்திரேலிய அரசு போட்டியை நடத்தலாம் என்று முடிவெடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் இருக்கிறது. பல்வேறு அணிகளை அனுமதிக்குமா, ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தலாமா? என்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் பி.சி.சி.ஐ .எந்த கருத்தும் தெரிவிக்காது
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அருண்துமால் கூறும் போது, “இந்திய அணி ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்கா செல்வதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை” என்றார்.

கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
துபாய்:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. போட்டிகள், பயிற்சிகள் மீண்டும் நடக்கும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகளை அனைத்து விளையாட்டு அமைப்புகளும் வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஒரு தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளும் பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அப்போது அவர்களிடம் உடல் வெப்ப நிலை பரிசோதனை, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு அணியிலும் தலைமை மருத்துவ அதிகாரி அல்லது உயிர் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
அரசின் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், பயிற்சி மற்றும் போட்டியை மீண்டும் தொடங்குவதற்கான உயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு இவர் பொறுப்பாவார்.
பயிற்சியின்போது வீரர்கள் இடையில் ஓய்வுக்காக வெளியே செல்ல அனுமதி கிடையாது.
வீரர்கள் தங்களது தொப்பிகள், துண்டுகள், சன்கிளாஸ் உள்ளிட்ட பொருட்களை நடுவரிடமோ அல்லது சக வீரர்களிடமோ கொடுக்க அனுமதி இல்லை.
வீரர்கள் மற்றும் நடுவர்கள் கிரிக்கெட் களத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நடுவர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் பந்துகளை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று ஐ.சி.சி. குழு பரிந்துரை செய்து இருக்கிறது. அதே நேரத்தில் வியர்வைக்கு தடை இல்லை.
எச்சிலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பவுலர்களுக்கு மிகவும் சவாலானதாகும்.

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ஓபன் போட்டி டிசம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் அபாயத்தால் பேட்மிண்டன் போட்டிகள் 2 மாதத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக மார்ச் 15-ந்தேதி ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் நடந்தது. அதன் பிறகு நடக்க இருந்த எல்லாவிதமான பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த நிலையில் மற்ற நாட்டு பேட்மிண்டன் சங்கங்களுடன் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் ஆலோசித்து மாற்றி அமைக்கப்பட்ட புதிய போட்டி அட்டவணையை நேற்று வெளியிட்டது. இதன்படி ஐதராபாத் ஓபனோடு பேட்மிண்டன் தொடர் மீண்டும் ஆரம்பிக்கிறது. இந்த போட்டி ஆகஸ்டு 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வழக்கமாக இந்த போட்டிக்கு பெரிய வீரர், வீராங்கனைகள் வருவதில்லை. ஆனால் கொரோனா பாதிப்பால் பேட்மிண்டன் தடைப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு நடக்கும் முதல் போட்டி என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும்.
இதே போல் மார்ச் மாதம் டெல்லியில் நடக்க இருந்த ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டிசம்பர் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாகவும் அமைந்திருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. ரூ.1¼ கோடி பரிசுத்தொகைக்கான சயத் மோடி நினைவு சர்வதேச போட்டி லக்னோவில் நவம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இதே தேதியில் ஜகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியும் அரங்கேறு கிறது. இந்தோனேஷிய ஓபனுக்கு தரவரிசை புள்ளியும், பரிசுத்தொகையும் அதிகம் என்பதால் சயத் மோடி கோப்பையை விட இந்தோனேஷிய தொடருக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த காலக்கட்டத்திற்குள் கொரோனாவின் தாக்கம் குறைந்து விடும் என்று நம்பப்படுகிறது. இல்லாவிட்டால் போட்டியை நடத்துவதில் சிக்கல் உருவாகும்.
டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ளும் உலக டூர் இறுதி சுற்று சீனாவின் குவாங்ஜோவில் டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மலேசிய ஓபன், கொரியா ஓபன், சீனா ஓபன், ஜப்பான் ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்ச் ஓபன் போன்ற முன்னணி போட்டிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அதே சமயம் பிரபலம் இல்லாத குறைந்த தரவரிசை புள்ளிகள் வழங்கும் 10 தொடர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இடைநீக்கம் செய்யப்பட்ட ஜெர்மனி ஓபன், சுவிஸ் ஓபன், ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய போட்டிகளுக்கு ஏதுவான தேதி அமையாததால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளன பொதுச் செயலாளர் தாமஸ் லுன்ட் கூறுகையில், ‘பேட்மிண்டன் போட்டியை மீண்டும் தொடங்கும் திட்டத்தை வகுப்பது கடினமான பணி. இது ஒரு திணிக்கப்பட்ட போட்டி அட்டவணை தான். பாதுகாப்பான சூழலுடன், நடைமுறை சிக்கல்கள் தணியும் போது மறுபடியும் போட்டியை தொடங்குவதற்கு வசதியாக போட்டி அட்டவணையை வழங்கியிருப்பதாக நம்புகிறோம். அதே நேரத்தில் ஒவ்வொரு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை எப்போது தளர்த்தும் என்பதை கணிப்பது சிரமம். முழுமையான பாதுகாப்பு இல்லாதவரை போட்டியை நாம் மீண்டும் தொடங்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.’ என்றார்.

மார்ச் மாதம் நடைபெற இருந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர், டிசம்பர் மாதம் நடைபெறும் என உலக பேட்மிண்டன் பெடரேசன் தெரிவித்துள்ளது.
உலக டூர் சூப்பர் பேட்மிண்டன் தொடரான இந்தியா ஓபன் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை டெல்லியில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் 8-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை இந்தத் தெடர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் பெடரேசன் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தொடர்களில் ஒன்றாக இந்திய ஓபன் கருதப்படுகிறது. ஐதராபாத் ஓபன் ஆகஸ்ட் 11-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரையும், சையத் மோடி சர்வதேச ஓபன் நவம்பர் 17-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நியூசிலாந்து ஓபன், இந்தோனேசியா ஓபன், மலேசியாக ஓபன், தாய்லாந்து ஓபன் மற்றும் சீனாவில் நடைபெற இருந்த உலக டூர் பைனல்ஸ் ஆகியவற்றின் தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு டி20 லீக் தொடர்களிலும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என உத்தப்பா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் என்ற பெயரில் டி20 லீக் தொடரை கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து பிசிசிஐ நடத்தி வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் அனுமதியில்லை.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக், தென்ஆப்பிரிக்காவில் மான்சி சூப்பர் லீக், வங்காள தேசத்தில் வங்காளதேசம் பிரிமீயர் லீக் போன்ற டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மற்ற தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. யுவராஜ் சிங் ஐபிஎல் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் இருந்து ஓய்வு பெற்றதால் கனடாவில் நடபெற்று வரும் குளோபல் டி20 லீக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டார். மற்ற வீரர்களுக்கும் அதுபோன்று அனுமதி வழங்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தப்பா கூறுகையில் ‘‘வெளிநாட்டில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்காவிட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் ஒன்றிரண்டு லீக்கில் விளையாட அனுமதி அளித்தால் கூட, சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால், கிரிக்கெட் குறித்து மேலும் கற்றுக்கொள்ள, வளர்ச்சி பெற உதவிகரமாக இருக்கும்’’ என்றார்.
இங்கிலாந்து தொடருக்காக 25 பேர் கொண்ட அணியை தயார் செய்ய இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளதால் விளையாட்டு போட்டிகளை தொடங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இரு நாட்டின் கிரிக்கெட் போர்டுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி முன்னதாகவே இங்கிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள இருக்கிறது. அதன்பின் பயிற்சி மேற்கொண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ஒருவேளை வீரர்களுக்கு சோர்வு ஏற்பட்டால் மாற்று வீரர்களை தயார் செய்யும் வகையில் 25 பேர் கொண்ட அணியுடன் செல்ல இருக்கிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் வாசிம் கான் கூறுகையில் ‘‘இங்கிலாந்து சென்ற பிறகு எங்களை தனிமைப்படுத்திக் கொள்ள 14 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்பின் போதுமான அளவுக்கு பயிற்சி பெற நேரம் உள்ளது. இதனால் போட்டி நடைபெறும் நாட்களுக்குள் வீரர்கள் தயாராகிவிடுவார்கள்.
கொஞ்சம் சவாலானது என்பதால் 25 பேர் கொண்ட அணியை அழைத்துச் செல்ல இருக்கிறோம். அவர்களை ஒன்றிணைத்து போட்டிக்கு தயார்படுத்த திட்டமிட்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான வெலைகளை ஆரம்பித்து விடுவோம்.
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ள அனைத்து கருத்துக்களும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. வீரர்கள் சற்று யோசிக்கிறார்கள். இந்த தொடரை நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
உலக கோப்பை நடைபெறும் நேரத்தில் ஐபிஎல் போட்டி என்பது இந்திய கிரிக்கெட்டால் பணத்தை பறிக்கும் செயல் என ஆலன் பார்டர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனைக்கிடையில் 15 அணி வீரர்கள் ஒரு நாட்டிற்குச் சென்று தனிமைப்படுத்திக் கொண்டு போட்டிகளில் கலந்து கொள்வது எளிதான காரியம் அல்ல.
இதனால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இதுகுறித்து விரைவில் ஐசிசி முடிவு எடுக்க இருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டியை மழைக்காலத்திற்குப் பிறகு நவம்பரில் நடத்த வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
டி20 உலக கோப்பை தள்ளிப்போனால் ஐபிஎல் தொடரை பிசிசிஐ எப்படியும் நடத்திவிடும். அப்படி ஐபிஎல் நடத்தப்பட்டால் அது இந்திய கிரிக்கெட்டால் பணம் பறிக்கும் செயல் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆலன் பார்டர் கூறுகையில் ‘‘எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. உள்ளூர் போட்டியை காட்டிலும் உலக போட்டிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உலக கோப்பைக்குப் பதில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால், நான் நிச்சயம் கேள்வி எழுப்புவேன். இது ஜஸ்ட் பணம் பறித்த போன்றதாகும். அப்படி இல்லையா?....
டி20 உலக கோப்பைக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தற்போது டி20 உலக கோப்பைக்குப் பதில் ஐபிஎல் தொடர்தான் என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். 80 சதவீத கிரிக்கெட் வருமானத்திற்கு நீங்கள்தான் (ஐசிசி) பொறுப்பு என்றால், நியாயமாக என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள் என்பதை நான் பார்க்க இருக்கிறேன்.
ஆனால் உலக போட்டிகள் இதுபோன்று நடக்க அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு செல்வதை நிறுத்த வேண்டும். சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில், இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்’’ என்றார்.
வேகப்பந்து வீச்சாளர்களுடன் வரும் 1-ந்தேதியில் இருந்து பயிற்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் மீண்டும் மைதானங்களில் பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 1-ந்தேதியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் சிறிய குழுவை கொண்டு பயிற்சியை தொடங்கும்வோம் என்று, அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
‘‘கடந்த வாரம் விரைவான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம். அப்போது மீண்டும் பயிற்சியை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சாதகமான பதில்களை பெற்ற பின்னர், கேப்டன் மற்றும் என்னுடைய சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் திட்டத்தை பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன்.
முதலில் சிறிய குழுவாக பயிற்சியை தொடங்குவோம். வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். ஏனென்றால், ஒருமுறை பந்து வீசிய பின்னர், மீண்டும் பந்து வீச அவர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள்’’ என்றார்.
பொது ஊரடங்கு காரணமாக மிக்கி ஆர்தர் சொந்த நாடு திரும்ப முடியாமல் இலங்கையிலேயே தங்கியுள்ளார்.
இத்தாலியின் முதன்மை கால்பந்து லீக்கான ‘செர்ரி ஏ’-யை ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் முடித்துவிட்டு, 2020-2021 சீசனை செப்டம்பர் 1-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கால்பந்து லீக் ‘செர்ரி ஏ’நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்றின் வீரியம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் போட்டிகளை நடத்த விளையாட்டு அமைப்புகள் தயாராகி வருகின்றன. மீதமுள்ள ‘செர்ரி ஏ’ கால்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் முடிக்கப்படும் என்றும், 2020 - 2021 சீசன் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கும் என்று இத்தாலி கால்பந்து பெடரேசன் அறிவித்துள்ளது.
ஜூன் 13-ந்தேதி ‘செர்ரி ஏ’ லீகை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் ஜூன் 15-ந்தேதி வரை தொடங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே யுவென்டஸ் அணி, அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துவிட்டோம். யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் ஜெர்சி எண் குறித்த ரகசியம் வெளியானது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. 26 வயதான இவர் 2016-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.
ஹர்திக் பாண்ட்யாவின் ஒருநாள் போட்டி ஜெர்சியில் 228 என்ற நம்பர் இடம் பெற்று இருந்தது.
இதற்கு என்ன காரணம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியது. தற்போது அதற்கான ரகசியம் வெளியாகி உள்ளது.
புள்ளியல் நிபுணரான மோகன்தாஸ் மேனன் இதற்கு பதில் அளித்து உள்ளார். கடந்த 2009-ல் டிசம்பரில் மும்பை அணிக்கு எதிரான விஜய் மெர்ச்சன்ட் டிராபி போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) பரோடா அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தினார்.
இந்த ஆட்டத்தில் அவர் 8 மணி நேரம் பேட்டிங் செய்து 391 பந்துகளில் 228 ரன்கள் குவித்தார். தற்போது வரை அவர் அடித்த ஒரே இரட்டை சதம் இதுவாகும். இதுதான் அதிகபட்ச ரன்னாகவும் இருக்கிறது.
இதனால்தான் இந்த நம்பரை அவர் ஜெர்சியில் வைத்துள்ளார்.
இதுகுறித்து ஹர்த்திக் பாண்ட்யாவின் பயிற்சியாளர் ஜிதேந்திரா கூறியதாவது;-
இந்த தொடர் ஹர்திக் பாண்ட்யா தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய முதல் சீசன் ஆகும். இந்த போட்டியில் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சாதித்தார்.
5 விக்கெட் கைப்பற்றிய அவர் சிறந்த ஆல்ரவுண்டராக அடையாளம் காணப்பட்டார். இதன்பிறகு 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாட தேர்வானார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹர்திக் பாண்ட்யா நீண்ட காலம் 228 எண் இடம் பெற்றிருந்த ஜெர்சியை பயன்படுத்தவில்லை. அவரது ஜெர்சியில் 33 என்ற நம்பர் இடம் பெற்றுள்ளது.

பயிற்சியை தொடங்கும் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு இருக்கிறது. அதில் விளையாட்டு வீரர்கள் வெளிப்புற மைதானத்தில் தனி பயிற்சியாளர் மேற்பார்வையில் அரசு அறிவுறுத்தி இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியில் ஈடுபடலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களிலும் மீண்டும் பயிற்சியை தொடங்கும் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி விதிமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ‘மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள கொரோனா நடைமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும். அரசின் நடைமுறை விதியில் இருந்து சாயின் வழிகாட்டுதல் வித்தியாசப்பட்டால் அரசு அறிவித்துள்ள நடைமுறைக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பயிற்சி பெறும் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கொரோனா வைரசின் பாதிப்பு மற்றும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக விளக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பயிற்சி மையத்தின் நுழைவு வாயிலில் இருந்தே கடைப்பிடிக்கப்பட வேண்டும். குத்துச்சண்டையில் பார்ட்னருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும், தொடர் ஓட்டத்தில் ‘பேட்டனை’ மற்ற வீரருடன் மாற்றவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய நிலையில் வீரர்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்வதுடன், அது குறித்த அறிக்கையை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அனைத்து வீரர்களும், ஊழியர்களும் ஆரோக்ய சேது செயலியை முறையாக பயன்படுத்த வேண்டியது கட்டாயம். வீரர்கள் தங்களது தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது’ என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.