என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2021-ல் நடக்கவில்லை என்றால், டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர்
Byமாலை மலர்21 May 2020 9:26 AM GMT (Updated: 21 May 2020 9:26 AM GMT)
அடுத்த ஆண்டிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் ரத்து செய்யப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் போட்டி ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாமஸ் பேக் கூறுகையில் ‘‘ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021-ல் கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அல்லது 5 ஆயிரம் பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது. விளையாட்டு வீரர்களை நிச்சயமற்ற நிலையில் வைத்திருக்க முடியாது.
மாறுபட்ட சூழ்நிலைகள் உள்ளன. அதை அடையாளம் காண்பது மிகவும் எளிது அல்ல. உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 23 -ந்தேதிக்குள் எப்படி இயங்கப்போகிறது என்பது குறித்து தெளிவான பார்வை கிடைத்த பின்னர்தான், பொருத்தமான முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
Next Story
×