என் மலர்
விளையாட்டு
இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று கொடுத்த குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முக்கிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் வரவிருக்கும் குத்துச்சண்டை போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி மே மாதம் 6-ந்தேதி முதல் 21-ந்தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
2022 காமன்வெல்த்த போட்டி ஜூலை 28-ந்தேதி தொடங்குகிறது. ஆசிய போட்டிகள் செப்டம்பர் 10-ந்தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், ஆகிய போட்டிகளில் பங்கேற்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேரி கோம், கூறுகையில் ‘‘நான் இந்த போட்டிகளில் இருந்து விலகி இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறேன். பெரிய தொடர்களில் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமையும். நான் காமன்வெல்த் போட்டிக்கு மட்டும் தயாராக கவனம் செலுத்த இருக்கிறேன்’’ என்றார்.
12 பிரிவுகளுக்கான உலக சாம்பியன்சிப் போட்டிகளுக்கான தகுதி சுற்றுகள் வருகிற திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெறுகிறது. ஆசிய போட்டிக்கான தகுதிச்சுற்றுகளும் இதில் அடங்கும்.
51 கிலோ மற்றும் 69 கிலோ எடை பிரிவில் ஆசிய போட்டிக்கான தகுதிச் சுற்று மார்ச் 11-ந்தேதி முதல் மார்ச் 14-ந்தேதி வரை நடைபெறும் என இந்திய குத்துச்சண்டை பெடரேசன் தெரிவித்துள்ளது.
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை 2-வது இன்னிங்சிலும் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 178 ரன்னில் சுருண்டது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் 4-ந்தேதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய, முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தார்.
பின்னர், இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா ஐந்து விக்கெட் வீழ்த்த இலங்கை அணி 174 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இலங்கை அணியை தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தார்.
2-வது இன்னிங்சிலும் இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் லஹிரு திரிமன்னே ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். திமுத் கருணாரத்னே 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிசாங்கா 7 ரன்னிலும், மேத்யூஸ் 28 ரன்னிலும், டி சில்வா 30 ரன்னிலும் வெளியேறினர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்தார்.
முதல் இன்னிங்சில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 2-வது இன்னிங்சிலும் அசத்தினார். சுரங்கா லக்மல் (0), எம்புல்டேனியா (2) ஆகியோரை எளிதில் வீழ்த்தினார்.
அரைசதம் அடித்த டிக்வெல்லா கடைசி வரை போராடினாலும், அதற்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போனது. இலங்கை அணி 60 ஓவரில் 178 ரன்கள் எடுத்து ஆல்-அவட் ஆனது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-இன்னிங்சில் டிக்வெல்லா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... இமாம் உல் ஹக், அசார் அலி அபார சதம் - பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவிப்பு
இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட் வீழ்த்த பாகிஸ்தான் வீராங்கனைகள் 43 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 137 ரன்னில் சுருண்டனர்.
நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்திய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 75 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடங்க வீராங்கனை ஷபாலி வர்மா டக்அவுட்டில் வெளியேறினார். 3-வது வீரராக களம் இறங்கிய தீப்தி ஷர்மா 40 ரன்கள் விளாசினார். கேப்டன் மிதாலி ராஜ் (9), ஹர்மன்ப்ரீத் கவுர் (5), ரிச்சா கோஷ் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா ஒரு கட்டத்தில் 114 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
7-வது விக்கெட்டுக்கு ஸ்னே ராணாவுடன், பூஜா வஸ்ட்ராகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. பூஜா 59 பந்தில் 67 ரன்களும், ஸ்னே ராணா ஆட்டமிழக்கால் 48 பந்தில் 53 ரன்களும் சேர்க்க இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் குவித்தது. ஸ்னே- பூஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 43 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் அனது. இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர அணி அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை ஷித்ர அமீன் அதிகபட்சமைாக 30 ரன்கள் சேர்த்தார். இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் 10 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். ஜுலான் கோஸ்வாமி, ஸ்னே ராணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... மொகாலி டெஸ்ட் - கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ரவீந்திர ஜடேஜா
அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, பதும் நிசங்காவின் விக்கெட்டை அஸ்வின் சாய்த்தார். இதன் மூலம் டெஸ்டில் தனது 434 விக்கெட்டை அவர் கைப்பற்றி உள்ளார்.
இதன் மூலம் கபில்தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். தமது 85 டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்களையும், 7 முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்...
ஆறு உலக கோப்பையில் பங்கேற்று இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை
இதன் மூலம் அதிக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாவேத் மியாண்டட் ஆகியோருடன் மிதாலி ராஜ் இணைந்துள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது 6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
39 வயதான மிதாலி ராஜ், 2000 ஆம் ஆண்டில் தனது முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
இதை தொடர்ந்து 2005, 2009, 2013, 2017 மற்றும் தற்போது நடைபெறும் 2022 உலக கோப்பை என மொத்தம் 6 உலக கோப்பை போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.
இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 6 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதேபோல் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டட்டும் 6 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த சாதனை பட்டியலில் தற்போது இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் இணைந்துள்ளார்.
175 ரன்கள் குவித்து பேட்டிங்கில் அசத்திய ஜடேஜா, பந்து வீச்சிலும் ஐந்து விக்கெட் வீழ்த்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்களும், ரிஷாப் பண்ட் 96 ரன்களும் விளாசி இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. நிசாங்கா 26 ரன்களுடனும், அசலாங்கா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நிசாங்கா ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட மறுபக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால் இலங்கை அணி 174 ரன்னில் சுருண்டது. நிசாங்கா மட்டும் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அஸ்வின், பும்ரா தலா 2 விக்கெட்டும், முகமது ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்தியா பாலோ-ஆன் கொடுத்ததால் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்... அரசு மரியாதையுடன் வார்னேவின் இறுதிச்சடங்கு நடைபெறும் - ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு
ஸ்னே- பூஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்து இந்தியா 244 ரன்கள் சேர்க்க முக்கிய காரணமாக அமைந்தது.
நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 75 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடங்க வீராங்கனை ஷபாலி வர்மா டக்அவுட்டில் வெளியேறினார். 3-வது வீரராக களம் இறங்கிய தீப்தி ஷர்மா 40 ரன்க்ள விளாசினார்.
கேப்டன் மிதாலி ராஜ் (9), ஹர்மன்ப்ரீத் கவுர் (5), ரிச்சா கோஷ் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா ஒரு கட்டத்தில் 114 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
7-வது விக்கெட்டுக்கு ஸ்னே ராணாவுடன், பூஜா வஸ்ட்ராகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. பூஜா 59 பந்தில் 67 ரன்களும், ஸ்னே ராணா ஆட்டமிழக்கால் 48 பந்தில் 53 ரன்களும் சேர்க்க இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் குவித்தது.

ஸ்னே- பூஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் பேட்டிங் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சிறந்த கிரிக்கெட் ஜாம்பவானை உலகம் இழந்துவிட்டது- வார்னே மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக், அசார் அலி ஜோடி 208 ரன்களை சேர்த்துள்ளது.
ராவல்பிண்டி:
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா, இமாம் உல் ஹக் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. அப்துல்லா 44 ரன்களில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து இமாம் உல் ஹக் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அசத்தலாக விளையாடியது. இமாம் உல் ஹக் சதமடித்து அசத்தினார். அவர் 157 ரன்னில் வெளியேறினார்.
அதன்பின், அசார் அலியுடன் பாபர் அசாம் இணைந்தார். இந்த ஜோடியும் 100 ரன்களை சேர்த்த நிலையில், பாபர் அசாம் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய அசார் அலி 185 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முகமது ரிஸ்வான் 29 ரன்னுடனும், இப்திகார் அகமது 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 3 சிக்சர், 17 பவுண்டரி உள்பட 175 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
மொகாலி:
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 96 ரன்னும், அஸ்வின் 61 ரன்னும், அனுமான் விஹாரி 58 ரன்னும் எடுத்தனர். 100-வது டெஸ்டில் ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 45 ரன் எடுத்தார்.
7-வது வீரராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 175 ரன் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், 1986-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 7-வது வீரராக களமிறங்கி 163 ரன் எடுத்த கபில்தேவ் சாதனையை ஜடேஜா நேற்று முறியடித்தார்.
மேலும், ரவீந்திர ஜடேஜா ரிஷப் பண்ட், அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோருடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் மூன்று 100 ரன் பார்ட்னர்ஷிப்களில் அங்கம் வகித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்...மொகாலி டெஸ்ட்- 2ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள்
போரில் உக்ரைன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சில ரஷிய டென்னிஸ் வீரர்கள் சிரித்ததாக உக்ரைனில் பிறந்த வீராங்கனை கூறி உள்ளார்.
போரில் உக்ரைன் மகக்ள் சந்திக்கும் துயரங்களை சில ரஷிய டென்னிஸ் வீரர்கள் கேலி செய்வதாக உக்ரைனில் பிறந்த டென்னிஸ் வீராங்கனை எவா லிஸ் குற்றம்சாட்டினார்.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஜெர்மனிக்காக விளையாடி வருகிறார் எவா லிஸ். இந்நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் பங்கேற்ற ரஷிய வீரர்கள் சிலர், உக்ரைன் மக்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், போரில் உக்ரைன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சிரித்ததாகவும் கூறி உள்ளார்.
தனது சொந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போட்டியின் போது தனது நாட்டு கொடியின் வண்ணங்களை அணிய தேர்ந்தெடுத்தபோது, தன்னை மிகவும் இழிவாக பார்த்ததாக எவா லிஸ் கூறினார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ரஷிய அணிகளை தடை செய்வதற்கான முடிவை எவா லிஸ் ஆதரிக்கிறார். அதேசமயம், தனிநபர்கள் போட்டிகளில் பங்கேற்பதை தடை செய்யக்கூடாது என்கிறார்.
இதையும் படியுங்கள்... நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உக்ரைன் அதிபர்
இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
மொகாலி:
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 2ம் நாளான இன்று, 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 175 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கருணாரத்ன 28 ரன்கள், லகிரு திரிமன்னே 17 ரன்கள், மேத்யூஸ் 22 ரன்கள், தனஞ்செய டி சில்வா 1 ரன் எடுத்தனர். பதும் நிசங்கா 26 ரன்களுடனும், அசலங்கா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி, இந்தியாவை விட 466 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹெய்ன்ஸ் சதம் அடித்தார்.
ஹாமில்டன்:
12-வது பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி ஆடியது. தொடக்க வீராங்கனை ஹெய்ன்ஸ் 130 ரன்களும் கேப்டன் லனிங் 86 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 310 ரன்கள் குவித்தது. 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்கமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் 4-வது பந்தில் லாரன் வின்ஃபீல்ட் ஹில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த டாமி பியூமண்ட்- நைட் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய பியூமண்ட் அரை சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 74 ரன்கள் எடுத்த போது வெளியேறினார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய நடாலி ஸ்கிவர் 109 ரன்களை கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்...வார்னே உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு- தெண்டுல்கர், ரிச்சர்ட்ஸ் இரங்கல்






