என் மலர்
விளையாட்டு
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது.
மவுன்ட் மாங்கானு:
நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெறுகிறது.
அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது.
இதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதையும் படியுங்கள்...பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு கொரோனா பாதிப்பு
ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனில் ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
சிட்னி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (52) நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் ஐசிசி முன்னாள் தலைவருமான சரத் பவார், சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான ஆதித்ய தாக்கரே, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், விராட் கோலி, மக்கள் நீதி
மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஷேன் வார்னேவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களுள் அவரும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பையில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக தமிழக வீரர் சித்தார்த் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
கவுகாத்தி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கவுகாத்தியில் நடந்த ‘எப்’ பிரிவு ஆட்டத்தில் தமிழக அணி ஜார்க்கண்ட் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 285 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாபா இந்திரஜித் நிலைத்து நின்று விளையாடி சதமடித்தார். சாய்கிஷோர் 81 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜார்க்கண்ட் அணி சார்பில் ராகுல் சுக்லா, சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அங்குல் ராய் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிழக அணி அசத்தலாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உட்கார்ஷ் சிங் 52 ரன்னும், கேப்டன் சவுரப் திவாரி 58 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 226 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தமிழகம் சார்பில் சித்தார்த் 4 விக்கெட்டும், ஷாருக் கான் 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 59 ரன்கள் முன்னிலையுடன் தமிழகம் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. 2ம் நாள் முடிவில் தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
களத்தில் சிறந்த வீரராகவும், வாழ்க்கையில் சிறந்த மனிதராகவும் திகழ்ந்த ஷேன் வார்னே மறைவை ஏற்க முடியவில்லை என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஷேன் வார்னே மறைவு அதிர்ச்சி அளிக்கிறது, மிகச்சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரை உலகம் இழந்துவிட்டது என தேசியவாத காங்கிரஸ் தலைவரும் ஐசிசி முன்னாள் தலைவருமான சரத் பவார் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜாம்பவான் ஷேன் வார்னே மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது பந்துவீச்சைப் பார்த்த நம் தலைமுறைக்கு “சுழல்” என்றால் என்னவென்று தெரியும், ஏனென்றால் களத்தில் அவரது ஆட்டம் அபாரமாக இருக்கும்’ என சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான ஆதித்ய தாக்கரே கூறி உள்ளார்.
‘ஷேன் வார்னே உண்மையிலேயே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவான். சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிற சிறந்த பேட்ஸ்மேன்களுடனான போட்டியின்போது அவரது மாயாஜால பந்துவீச்சை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாது. ஆழ்ந்த இரங்கல்கள்’ என மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்.

வாழ்க்கை மிகவும் நிலையற்றது மற்றும் கணிக்க முடியாதது என விராட் கோலி கூறி உள்ளார். களத்தில் சிறந்த வீரராகவும், வாழ்க்கையில் சிறந்த மனிதராகவும் திகழ்ந்த ஷேன் வார்னே மறைவை ஏற்க முடியவில்லை என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். ஷேன் வார்னே நமக்களித்த தருணங்கள் நினைவில் சுழல்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தவர் ஷேன் வார்னே. ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் தொடர்களில் ஷேன் வார்னே 55 போட்டிகளில் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்.
விராட் கோலி 100-வது டெஸ்டில் அரைசதத்தை தவறவிட, ரோகித் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால்- கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 52 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹனுமா விஹாரி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 33 ரன்னில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு ஹனுமா விஹாரி உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை 2 விக்கெட் இழப்பிறகு 109 ரன்கள் எடுத்திருந்தது. விஹாரி 30 ரன்களுடனும், விராட் கோலி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப்பின் தொடர்ந்து இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். ஹனுமா விஹாரி அரைசதம் அடித்த நிலையில், விராட் கோலி 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரிஷாப் பண்ட் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 27 ரன்னில் வெளியேறினார். ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்ததும், ரிஷாப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷாப் பண்ட் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். முதல்நாள் ஆட்டம் முடியும் வரை இந்த ஜோடி ஆட்டமிழக்கால் இருந்தது.
இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மொகாலியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 97 பந்தில் 96 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி 43.3 ஓவரில் 170 ரன்கள் எடுத்திருக்கும்போது ரிஷாப் பண்ட் களம் இறங்கினார். இவர் களம் இறங்கிய சிறிது நேரத்தில் ஹனுமா விஹாரி 58 ரன்னில் வெளியேறினார். அதன்பின் களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் 27 ரன்னில் வெளியேறினார்.
6-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்ட் உடன் ஜடேஜா சேர்ந்தார். 73 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார் ரிஷாப் பண்ட். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்கசருக்கும், பவுண்டரிக்கும் என விரட்டினார். இதனால் சதத்தை நோக்கி சென்றா்ர.
கடைசியாக 23 பந்தில் 46 ரன்கள் விளாச, 96 பந்தில் 96 ரன்கள் எட்டினார். இதனால் எப்படியும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லக்மல் பந்தில் க்ளீன் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 97 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 96 ரன்கள் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
ரிஷாப் பண்ட் ஆட்டமிழக்கும் போது இந்தியா 80.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்திருந்தது.
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க முடியாமல் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது.
மவுண்ட் மவுன்கானு:
12-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி விளையாடியது. தொடக்க வீராங்கனை ஹேலே மாத்யூஸ் அபாரமாக விளையாடி 119 ரன் எடுத்தார். கேப்டன் டெய்லர் 30, எஸ் கேம்பல்லே 20, சேடியன் நேசன் 36 ரன்களும் எடுக்க அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகப்பட்சமாக தஹுஹு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு 3 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. எளிதான முறையில் வெற்றி பெரும் என அனைவரும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 50-வது ஓவரையும் அவரது முதல் ஓவரையும் டியான்ட்ரா டாட்டின் வீசினார்.
முதல் பந்தில் ஒரு ரன் விட்டு கொடுத்த அவர் 2-வது பந்தில் கேட்டி மார்ட்டினை எல்.பி.டபுள்யூ. முறையில் விக்கெட் எடுத்தார். 3-வது பந்தில் 1 ரன் எடுக்க நியூசிலாந்து அணிக்கு 3 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்து அசத்தினார். இதனால் 2 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்ற போது ரன் அவுட் முறையில் ஜோனஸ் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதையும் படியுங்கள்....பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு கொரோனா பாதிப்பு
மொகாலியில் நடைபெற்று வரும் இலங்கை எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடித்திருந்தனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி மயங்க் அகர்வால்- ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 52 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 28 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹனுமா விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மயங்க் அகர்வால் 33 ரன்னில் வெளியேறினார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்று 180 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு ஹனுமா விஹாரி உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் ஆகும். 100-வது டெஸ்டில் சதம் விளாசி, 2019-ம் ஆண்டில் இருந்து சதமடிக்காத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 76 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். இதன்மூலம் 100-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அரைசதம் அடித்த ஹனுமா விஹாரி 58 ரன்னில் வெளியேறினார்.
தற்போது இந்தியா 57 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரிஷாப் பண்ட் 17 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரஞ்சி கோப்பையில் பாபா இந்திரஜித் அசத்தல் சதம் - முதல் நாள் முடிவில் தமிழகம் 256/7
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக பாகிஸ்தானில் பயணம் செய்து ஆடுவதால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரையும் விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இறுதியாக உணவு இடைவேளைக்கு 2 ஓவர் இருந்த நிலையில் அப்துல்லா ஷபீக் நாதன் லயன் பந்து வீச்சில் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.
சிறப்பாக விளையாடிய இமாம் அரை சதம் அடித்தார். 12-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இமாம்க்கு இது 4-வது அரை சதம் ஆகும். பாகிஸ்தான் அணி உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. இமாம் 57 ரன்னிலும் அசார் அலி 0 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ராட்மார்ஷ் இன்று மரணம் அடைந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74 ஆகும். கடந்த வாரம் மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ராட் மார்ஷ் ஒருவராவார். 1970 முதல் 1984 வரை 96 டெஸ்டில் விளையாடி உள்ளார். 355 விக்கெட்டுகள் விழுவதற்கு (கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்) இவர் காரணமாக இருந்தார். 74 வயதான அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருந்தார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
மவுண்ட் மவுன்கானு:
ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளன.
கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் மகளிர் உலக கோப்பை போட்டி நடந்தது. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 4 தடவையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலக கோப்பையை வென்று உள்ளன.
12-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கியது.
இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.
ரவுண்ட் ராபின் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இன்றைய தொடக்க ஆட் டத்தில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. இதனால் நியூசிலாந்துக்கு 260 ரன் இலக்காக இருந்தது.
வெஸ்ட்இண்டீஸ் தொடக்க வீராங்கனை ஹேலே மாத்யூஸ் அபாரமாக விளையாடி அவர் 119 ரன் எடுத்தார்.






