என் மலர்
விளையாட்டு

வெற்றி மகிழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனைகள்
கடைசி ஓவரில் 3 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து - த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க முடியாமல் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது.
மவுண்ட் மவுன்கானு:
12-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி விளையாடியது. தொடக்க வீராங்கனை ஹேலே மாத்யூஸ் அபாரமாக விளையாடி 119 ரன் எடுத்தார். கேப்டன் டெய்லர் 30, எஸ் கேம்பல்லே 20, சேடியன் நேசன் 36 ரன்களும் எடுக்க அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகப்பட்சமாக தஹுஹு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு 3 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. எளிதான முறையில் வெற்றி பெரும் என அனைவரும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 50-வது ஓவரையும் அவரது முதல் ஓவரையும் டியான்ட்ரா டாட்டின் வீசினார்.
முதல் பந்தில் ஒரு ரன் விட்டு கொடுத்த அவர் 2-வது பந்தில் கேட்டி மார்ட்டினை எல்.பி.டபுள்யூ. முறையில் விக்கெட் எடுத்தார். 3-வது பந்தில் 1 ரன் எடுக்க நியூசிலாந்து அணிக்கு 3 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்து அசத்தினார். இதனால் 2 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்ற போது ரன் அவுட் முறையில் ஜோனஸ் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதையும் படியுங்கள்....பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு கொரோனா பாதிப்பு
Next Story






