என் மலர்
விளையாட்டு

ரிஷாப் பண்ட்
4 ரன்னில் சதத்தை தவறவிட்ட ரிஷாப் பண்ட்
மொகாலியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 97 பந்தில் 96 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி 43.3 ஓவரில் 170 ரன்கள் எடுத்திருக்கும்போது ரிஷாப் பண்ட் களம் இறங்கினார். இவர் களம் இறங்கிய சிறிது நேரத்தில் ஹனுமா விஹாரி 58 ரன்னில் வெளியேறினார். அதன்பின் களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் 27 ரன்னில் வெளியேறினார்.
6-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்ட் உடன் ஜடேஜா சேர்ந்தார். 73 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார் ரிஷாப் பண்ட். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்கசருக்கும், பவுண்டரிக்கும் என விரட்டினார். இதனால் சதத்தை நோக்கி சென்றா்ர.
கடைசியாக 23 பந்தில் 46 ரன்கள் விளாச, 96 பந்தில் 96 ரன்கள் எட்டினார். இதனால் எப்படியும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லக்மல் பந்தில் க்ளீன் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 97 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 96 ரன்கள் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
ரிஷாப் பண்ட் ஆட்டமிழக்கும் போது இந்தியா 80.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்திருந்தது.
Next Story






