search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய வீரர் அஸ்வின்
    X
    இந்திய வீரர் அஸ்வின்

    டெஸ்ட் கிரிக்கெட்: கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்

    அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
    மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, பதும் நிசங்காவின் விக்கெட்டை அஸ்வின் சாய்த்தார். இதன் மூலம் டெஸ்டில் தனது 434 விக்கெட்டை அவர் கைப்பற்றி உள்ளார்.

    இதன் மூலம் கபில்தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். தமது 85 டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் 30 முறை  5 விக்கெட்களையும், 7 முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில்  அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

    Next Story
    ×