என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல்.தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    சூரத் :

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கியுள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள லால்பாய் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டோனி, அம்பதி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ந் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
    பெங்களூர்:

    10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது.

    போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த சீசனில் புதியதாக களம் இறங்கும் லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுலும், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கடந்த சீசன்களில் வீராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் பெங்களூர் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அணியில் ஒரு வீரராக அவர் தொடருகிறார்.

    பெங்களூர் அணியின் புதிய கேப்டன் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பெங்களூர் அணி நிர்வாகம்தான் இன்னும் கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார் என்பது வருகிற 12-ந் தேதி மாலை அறிவிக்கப்படுகிறது.

    அப்போது அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாப் டுபெலிசிசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    அவர் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப் படவுள்ளார்.

    பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்தி ரேலியா ஆல்-ரவுண்டர் மேக்ஸ் வெல்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அணி நிர்வாகம், டுபெலிசிசை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ந் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.


    டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்கள் எடுத்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
    புதுடெல்லி:

    இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் கபில்தேவின் 434 விக்கெட் என்ற சாதனையை முறியடித்தார். அவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அஸ்வின் 85 போட்டிகளில் 436 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    இந்நிலையில், தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    இந்திய அணியில் சமீப காலமாக அஸ்வினுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார். 

    அவருக்கு தொடர்ந்து அணியில் இடம்கொடுத்திருந்தால் எப்போதோ 434 விக்கெட் என்ற இலக்கைக் கடந்திருப்பார். 

    அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக என்னிடம் இருந்த 2வது இடத்தை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

    அஸ்வின் வியக்கத்தக்க வீரர். சிறந்த புத்தசாலித்தன்மான பந்து வீச்சாளர். அடுத்து அவர் 500 விக்கெட் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதனை அடைய முயற்சி செய்து கட்டாயம் சாதிப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அதையும் தாண்டி அஸ்வின் அசத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சனே, ஸ்மித் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது.
    ராவல்பிண்டி:

    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னிலும், இமாம் உல்  ஹக் 157 ரன்னிலும் வெளியேறினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். வார்னர் 68 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 97 ரன்னிலும் வெளியேறினர். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. லபுஸ்சனே 69 ரன்னுடனும், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்னுடமும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 
    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லபுஸ்சனே 90 ரன்னில் வெளியேறினார். ஸ்மித் 78 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 48 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 449 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் 12 ரன்னுடனும், பாட் கம்மின்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி சார்பில் நவ்மான் அலி 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இன்னும் ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வராத நிலையில், போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கடைசி நாளான இன்று 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா ஜோடி தங்கம் வென்று அசத்தியது.
    கெய்ரோ:

    எகிப்தின் கெய்ரோ நகரில் உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்றனர். கடைசி நாளான இன்று 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா ஜோடி தங்கம் வென்று அசத்தியது. தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இவர்கள் இருவரும் 17-7 என தாய்லாந்து ஜோடியை வென்றனர். 

    25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டர் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி, ஜெர்மனியிடம் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கம் வென்றது. 

    வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணி

    இதன்மூலம் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் நார்வே அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பிரான்ஸ் அணி 3 தங்கம் உள்ளிட்ட 20 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்தது.

    இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 22 நாடுகள் பதக்கங்கள் வென்றுள்ளன. 
    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் சேலம், கோவை மாவட்ட அணிகள் முதலிடம் பெற்றன.
    திருச்செங்கோடு:

    பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ்நாடு கூடைப் பந்து கழகம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில்  திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மண்டல அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றன. 

    இந்தப் போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட கூடைப்பந்து வீரர்-&வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். 

    இதன் இறுதிப் போட்டிகள் நேற்று இரவு நடைபெற்றன.  இதில் ஆண்கள் பிரிவில் ஈரோடு-சேலம் அணிகள் மோதியதில் 49-65 என்ற புள்ளி கணக்கில் சேலம் மாவட்ட அணியினர் வெற்றி பெற்றனர். நாமக்கல் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணியினர் 3 மற்றும் 4-ம் இடங்களைப் பிடித்தனர்.

    இதேபோல மகளிர் பிரி வில் கோவை-ஈரோடு அணிகள் மோதியதில் 76-க்கு 34 என்ற புள்ளி கணக்கில் கோவை மாவட்ட அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றது.  வெற்றி பெற்ற, ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் சான்றிதழ்கள், சுழல் கோப்பைகள் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.

      மின்னொளியில் நடைபெற்ற இந்த கூடைப்பந்து போட்டியை  நாமக்கல், ஈரோடு,  சேலம் மாவட்ட பொதுமக்கள், விளையாட்டு ரசிகர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.


    இலங்கைக்கு எதிரான 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 436 விக்கெட்டுகளுடன் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார் அஸ்வின்.
    இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது.

    முதல் இன்னிங்சில் 175 ரன்கள் விளாசிய ஜடேஜா, 5 விக்கெட்டுகளும் சாய்த்தார். 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 2 விக்கட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெடும் வீழ்த்தினார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆறு விக்கெட்டுடன் 436 விக்கெட்டுகள் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கபில்தேவ் 434 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் இருந்தார்.

    மொகாலி டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா, ஜயந்த் யாதவ் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்திருந்தனர். பொதுவாக 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடம் பிடிக்கும்போது அவருக்கு போதுமான அளவு தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு கிடைக்காது.

    மொகாலி டெஸ்டின்போது கேப்டன் ரோகித் சர்மா ஜயந்த் யாதவுக்கு கூடுதலாக ஓவர் வழங்க வேண்டும் என விரும்பினார். இதுகுறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். அப்போது ஜடேஜா முதலில் தன்னுடைய ஓவரை எடுத்துக் கொள்ளட்டும். தனக்குப் பதிலாக ஒரு முனையில் இருந்து தொடர்ந்து பந்து வீசட்டும் எனத் தெரிவித்தார்.

    அதன்பின் தான் விட்டுக்கொடுத்தேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார். முதலில் பந்து வீச விட்டுக்கொடுத்த ஜடேஜாவின் பெருந்தன்மையை அஸ்வினை வெகுவாக பாராட்டியுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கவாஜா, வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது.
    ராவல்பிண்டி:

    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னிலும், இமாம் உல்  ஹக் 157 ரன்னிலும் வெளியேறினர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் களமிறங்கினர்.

    இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்த நிலையில், வார்னர் 68 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவாஜா 97 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய லபுஸ்சனே, ஸ்மித் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். லபுஸ்சனே அரை சதமடித்தார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. லபுஸ்சனே 69 ரன்னுடனும், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போதைய நிலையில் பாகிஸ்தான் அணி 205 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    இந்திய வெற்றிக்கு காரணமான ஜடேஜாவுக்கு சச்சின், வாசிம் ஜாபர் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    மொகாலி:

    இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார் ரவீந்திர ஜடேஜா. 

    இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175  (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார்.

    ஜடேஜா பந்துவீச்சிலும் அசத்தினார். இலங்கையின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன், ஒரே டெஸ்டில் 150-க்கும் அதிகமான ரன்களை குவித்ததுடன், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.

    முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தும், பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் அபாரமாக செயல்பட்ட ஜடேஜாவுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இதேபோல், சச்சின் டெண்டுல்கர், வாசிம் ஜாபர் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணி 38 சதவீத வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது.
    துபாய்:

    இந்தியா, இலங்கை  அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகான  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.

    இதில் 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் 2-வது இடத்திலும் , 66 சதவீத வெற்றியுடன் இலங்கை 3-வது  இடத்திலும், 60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி 4-வது  இடத்திலும் உள்ளது.

    இந்தப் பட்டியலில் 54 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது.

    50 மீட்டர் ரைபிள் 3 நிலை கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஷ்ரியங்கா சதாங்கி, அகில் ஷியோரான் ஜோடி வெண்கலம் வென்றது.
    கெய்ரோ:

    எகிப்தின் கெய்ரோ நகரில் உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய அணியினர் சிறப்பாக செயல்படுகின்றனர். 

    அவ்வகையில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில், இந்தியாவின் ராஹி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.  இறுதிச் சுற்றில் இவர்கள் 17-13 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் அணியை வென்றனர். இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. 

    50 மீட்டர் ரைபிள் 3 நிலை கலப்பு அணி பிரிவில் பதக்கம் வென்ற ஜோடிகள்

    முன்னதாக, 50 மீட்டர் ரைபிள் 3 நிலை கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஷ்ரியங்கா சதாங்கி, அகில் ஷியோரான் ஜோடி வெண்கலம் வென்றது. ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியா பதக்க சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

    பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 2வது இடத்தில் உள்ளது. கடைசி இரண்டு பதக்கங்களுக்கான போட்டிகள் நாளை நடைபெறுகின்றன. இப்போட்டியில் இந்தியா தங்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐபிஎல் தொடரில் மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், லீக் ஆட்டங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 

    மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 

    சென்னை அணி தனது 2வது ஆட்டத்தில் வரும் 31ஆம் தேதி லக்னோ அணியை எதிர்கொள்கிறது. ஏப்ரல் 3ம் தேதி 3வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடனும், ஏப்ரல் 9ம் தேதி 4வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடனும் விளையாடுகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி சென்னை அணி தனது 5வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

    இதையடுத்து ஏப்ரல் 17ஆம் தேதி குஜராத்துடனும், ஏப்ரல் 21ல் மும்பையுடனும், ஏப்ரல் 25ஆம் தேதி பஞ்சாப் அணியுடனும், மே 1ஆம் தேதி ஐதராபாத் அணியுடனும் மோதுகிறது. 

    மே 4ஆம் தேதி பெங்களூரு அணியுடனும், மே 8ம் தேதி டெல்லி அணியுடனும், மே 12ம் தேதி மும்பையுடனும், மே 15ம் தேதி குஜராத் அணியுடனும் சென்னை அணி மோதுகிறது. மே 20ம் தேதி சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 
    ×