என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தங்கம் வென்ற ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா
    X
    தங்கம் வென்ற ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா

    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்- 4 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

    கடைசி நாளான இன்று 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா ஜோடி தங்கம் வென்று அசத்தியது.
    கெய்ரோ:

    எகிப்தின் கெய்ரோ நகரில் உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்றனர். கடைசி நாளான இன்று 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா ஜோடி தங்கம் வென்று அசத்தியது. தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இவர்கள் இருவரும் 17-7 என தாய்லாந்து ஜோடியை வென்றனர். 

    25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டர் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி, ஜெர்மனியிடம் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கம் வென்றது. 

    வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணி

    இதன்மூலம் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் நார்வே அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பிரான்ஸ் அணி 3 தங்கம் உள்ளிட்ட 20 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்தது.

    இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 22 நாடுகள் பதக்கங்கள் வென்றுள்ளன. 
    Next Story
    ×