என் மலர்
விளையாட்டு
முதலில் விளையாடிய டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்திருந்தது.
மும்பை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 15-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா தொடக்கம் முதலே பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் கிருஷ்ணப்பா கெளதம் பந்துவீச்சில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
அவரை தொடர்ந்து பவல் 3 ரன்களிலும் வார்னர் 4 ரன்களிலும் வெளியேற டெல்லி அணி தடுமாற தொடங்கியது. அதன்பிறகு அணியின் கேப்டன் பண்ட் உடன் சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பண்ட் 39 ரன்களுடனும் சர்ப்ராஸ் கான் 36 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் - கேப்டன் கே எல் ராகுல் களமிறங்கினர்.
அதிரடியாக தொடங்கிய குவின்டன் டி காக் 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். கே எல் ராகுல் 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 11 ரன் அடித்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த குணால் பாண்ட்யா, ஆயுஷ் படோனி ஜோடி லக்னோ அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. 19.4 ஓவர் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
குணால் பாண்ட்யா 19 ரன்களுடனும், படோனி 10 ரன்னுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 15-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீசுவதாக அறிவித்தது.
லக்னோ அணியில் மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் ஆடுகிறார். டெல்லி அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வார்னர், நோர்க்கியா, சப்ராஷ் கான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லி அணி வீரர்கள்:-
1. பிரித்வி ஷா 2. டேவிட் வார்னர் 3. ரிஷப் பண்ட் 4. பவுல் 5. சர்பராஸ் கான் 6. லலீத் யாதவ் 7. அக்சர் படேல் 8. சர்துல் தாகூர் 9. குல்தீப் யாதவ் 10. ரோர்க்கியா 11. முஷ்பீர் ரகுமான்
லக்னோ அணி வீரர்கள்:
1. கேஎல் ராகுல் 2. குயின்டன் டி காக் 3. எவின் லூயிஸ் 4. தீபக் ஹூடா 5. ஆயுஷ் பதோனி 6. குர்ணால் பாண்ட்யா 7.ஜேசன் ஹோல்டர் 8.கிருஷ்ணப்ப கவுதம் 9. ஆண்ட்ரூ டை 10. ரவி பிஷ்னோய் 11. ஆவேஷ் கான்
பஞ்சாப்பில் முன்விரோதம் காரணமாக கபடி வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டியாலா:
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தவுன்கலான் பகுதியை சேர்ந்தவர் தர்மீந்தர் சிங். சிறந்த கபடி வீரரான இவர் கபடி கிளப் தலைவராக இருந்து வந்தார். கபடி போட்டிகளையும் நடத்தி வந்தார். இந்தநிலையில் பாட்டியாலா பல்கலைக்கழக வளாகத்தில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் திடீர் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் முன்பு ஒரு பிரிவினரை அழைத்து தர்மீந்தர்சிங் பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் தர்மீந்தர்சிங்கை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேர் மீ து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டெல்லியை தோற்கடித்து லக்னோ ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் (5 விக்கெட் ) தோற்றது. அதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 12 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
டெல்லியை தோற்கடித்து லக்னோ ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் கேப்டன் ராகுல், குயின்டன் டி காக், லீவிஸ், தீபக் ஹூடா, பதோனி, ஹோல்டர், அவேஷ் கான், பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
டெல்லி அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2 வது ஆட்டத்தில் 14 ரன்னில் குஜராத்திடம் தோற்றது. லக்னோவை தோற்கடித்து2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.
டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, லலித் யாதவ் , போவெல், அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ஏற்கனவே முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. 40 ஆயிரம் டன் டீசலை சமீபத்தில் கப்பல் மூலம் அனுப்பியது. இதேபோல அரிசியும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் உதவிகளை வழங்கிய இந்திய அரசுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதிருப்தி அளிக்கிறது. இது மாதிரியான சூழ்நிலையில் மக்கள் இருப்பது துரதிருஷ்டவசமானது.
இந்தியாவை எப்போதும் ஒரு அண்டை வீட்டாராக உங்களுக்கு தெரியும். எங்கள் நாட்டுக்கு அடுத்த பெரிய சகோதரர் எங்களுக்கு உதவுகிறார்.
நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு உதவும் இந்திய அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் (மோடி) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி உள்ளவராக இருக்கிறோம்.

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. சில நேரங்களில் 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. இலங்கை மக்களுக்கு இது மிகவும் கடினமான சூழ்நிலையாகும். இதனால்தான் மக்கள் வெளியே வந்து போராடுகிறார்கள்.
நிலைமையை சரியாக கையாளாவிட்டால் பேரழிவு ஏற்படும். இந்த விஷயங்கள் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. டீசல், எரிவாயு மற்றும் பால் பவுடருக்கு 3 முதல் 4 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு ஜெயசூர்யா கூறி உள்ளார்.
ஏற்கனவே முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இதையும் படியுங்கள்...இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்- கோத்தபய ராஜபக்சே திட்டவட்ட அறிவிப்பு
கடந்த ஆண்டை போலவே அணியின் முக்கிய இடத்தை பிடித்திருப்பது அதிர்ஷ்டம்தான் என கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி கொல்கத்தா அணி 3-வது வெற்றியை பெற்றது.
புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தாவுக்கு 162 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), பொல்லார்ட் 5 பந்தில் 22 ரன்னும் (3 சிக்சர்) எடுத்தனர். கம்மின்ஸ் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 24 பந்து எஞ்சி இருந்த நிலையில் 162 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கம்மின்ஸ் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 15 பந்தில் 56 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 4 பவுண்டரியும், 6 சிக்சர்களும் அடங்கும். வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 50 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.
கம்மின்ஸ் 14 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் எடுத்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்து முதல் இடத்தில் இருந்த லோகேஷ் ராகுல் சாதனையை சமன் செய்தார். ராகுல் 2018-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது டெல்லிக்கு எதிராக 14 பந்தில் அரை சதம் அடித்தார்.
தற்போது ஐ.பி.எல். போட்டியில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த சாதனை வீரர்களில் கம்மின்ஸ், ராகுல் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக யூசுப் பதான், சுனில் நரீன் 15 பந்தில் அரை சதம் அடித்து இருந்தனர்.
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது குறித்து கம்மின்ஸ் கூறியதாவது:-
இந்த சீசனில் நான் பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே அதிரடியான விளையாடியது ஆச்சரியமானது. பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்தவுடன் இந்த ஆட்டம் இருந்தது. என்னால் அதிகமாக யோசிக்க கூட முடியவில்லை. உண்மையிலேயே எனது ஆட்டம் திருப்தி அளிக்கிறது.
நான் அடித்த பந்துகள் பறந்தன. எனது ஷாட்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. புதிய சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டை போலவே அணியின் முக்கிய இடத்தை பிடித்திருப்பது அதிர்ஷ்டம்தான். ஒட்டுமொத்தத்தில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொல்கத்தா அணி 3-வது வெற்றியை பெற்று 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.
அந்த அணி 5-வது ஆட்டத்தில் டெல்லியை வருகிற 10-ந் தேதி சந்திக்கிறது.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 4-வது போட்டியில் பெங்களூருவை 9-ந் தேதி எதிர் கொள்கிறது.
முதலில் விளையாடிய மும்பை அணி சூர்யகுமார், பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தால் 161 ரன்களை எடுத்திருந்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது.
கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷண் 15 ரன்னிலும், பிரிவிஸ் 29 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் மும்பை அணி 55 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்துள்ளது. திலக் வர்மா 38 ரன்னுடனும், பொல்லார்டு 5 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ரகானே 7 ரன்னுடன் வெளியேற, மற்றொரு துவக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேப்டன் சிரேயாஸ் அய்யர், ஷியாம் பில்லிங்ஸ், நிதிஷ் ரானா, ரஸ்ஸல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வெங்கடேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்த பேட் கம்மின்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தினார். 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 போர்களை அடித்த அவர்
56 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்...
கொரியா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு தகுதி
ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதின் மார்ச் மாதத்திற்கு பாபர் அசாம் உள்ளிட்ட 3 பேர் பெயரை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.
துபாய்:
ஐ.சி.சி. மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, மார்ச் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர்களின் பெயரை ஐசிசி தற்போது பரிந்துரைத்துள்ளது.
இதில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரெய்க் பிராத்வெயிட், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன் , லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த 3 பேரில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெல்லப் போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பையின் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷண் 15 ரன்னிலும், பிரிவிஸ் 29 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் மும்பை அணி 55 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்துள்ளது. திலக் வர்மா 38 ரன்னுடனும், பொல்லார்டு 5 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான இன்று இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் தனது முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் லாரன்லாமுடன் மோதினார். இதில் பி.வி. சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பி.வி.சிந்து 2-வது சுற்றில் ஜப்பானின் ஓஹோரியுடன் மோதுகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் முதல் சுற்று ஆட்டத்தில் மலேசியாவின் டேரன் லியூவுடன் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 22-20, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் இஸ்ரேல் வீரர் மிஷா ஷிலபெர்மனுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
இதையும் படியுங்கள்...ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து விளையாடினேன்- தினேஷ் கார்த்திக்
கொல்கத்தா அணியுடனான இன்றைய ஆட்டத்தில் மும்பை தோற்றால் வரும் போட்டிகளில் நெருக்கடியுடன் களம் இறங்கும் சூழல் உண்டாகும்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் பும்ரா, முருகன் அஸ்வின், மில்ஸ் ஆகியோர் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் மும்பை தோற்றால் வரும் போட்டிகளில் நெருக்கடியுடன் களம் இறங்கும் சூழல் உண்டாகும்.
கொல்கத்தா அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றியை பெற்றது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது பேட்டிங்கில் ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா, ஆந்த்ரே ரஸ்சல் ஆகியோரும் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், சுனில் நவீன், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் உள்ளனர்.
20 ஓவர் கிரிக்கெட்டில் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அது இல்லையென்றால் ஷாட்டை மாற்றும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
மும்பை:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 55 ரன் எடுத்தது. அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. 87 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.
அதன்பின் தினேஷ் கார்த்திக் - ஷபாஸ் அகமது ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெங்களூரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்னும் ஷபாஸ் அகமது 26 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது.
அவர் கூறும்போது, நான் பயிற்சி செய்த விதம் வித்தியாசமானது. நான் இன்னும் எதையும் செய்யவில்லை என்று எனக்குள் சொல்லி கொண்டேன். எனக்கு ஒரு குறிக்கோள் உள்ளது. நான் எதையாவது சாதிக்க விரும்புகிறேன். எங்களுக்கு ஒரு ஓவரில் 12 ரன் தேவைப்பட்டது.
அதனால் என்ன செய்வது என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் அமைதியாக இருந்து உங்கள் ஆட்டத்தை உணர்ந்து விளையாட வேண்டும். அதைத்தான் செய்தேன்.
20 ஓவர் கிரிக்கெட்டில் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அது இல்லையென்றால் ஷாட்டை மாற்றும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு அணி கேப்டன் டுபெலிசிஸ் கூறும்போது, ‘தினேஷ் கார்த்திக் போன்ற வீரர் இருக்கும்போது ஆட்டத்தை எங்கிருந்து நீங்கள் பெற முடியும். 19-வது ஓவர் வரை நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன்.
பின்னர் ஜோஸ் பட்லர் சில ஷாட்டை அடித்தார். எங்களுக்கு தேவையான தொடக்கத்தை பெறவில்லை. சாஹல் நன்றாக பந்து வீசினார். ஆனால் ஆட்டத்தை எங்கிருந்தும் எடுத்து சென்று வெற்றிபெற வைக்கும் வீரர்களை நாங்கள் பெற்று இருக்கிறோம்.
ஷபாஸ் அகமது ஒரு ஒல்லியான நபர். ஆனால் அவர் பந்தை நீண்ட தூரம் அடித்தார். மேலும் அவர் தெளிவான விளையாட்டு திட்டத்தை பெற்றுள்ளார். ஷபாஸ் அகமது பந்து வீச்சிலும் ஒரு பெரிய பங்களிப்பை அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு 2-வது வெற்றி (3ஆட்டம்) பெற்றது. ராஜஸ்தான் முதல் தோல்வியை (3 ஆட்டம்) சந்தித்தது.






