என் மலர்
விளையாட்டு
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் 66 ரன்கள் குவித்தார்.
லாகூர்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது.
இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்த. இதனையடுத்து முதலில் களம் இறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 23 ரன்கள் அடித்தார்.
கேப்டன் பாபர் ஆசம் 46 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் 55 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 26 ரன்களும், ஜோஸ் இங்க்லிஸ் 24 ரன்களும் அடித்தனர்.
அந்த அணி 19.1 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்தது. இதையடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியா வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியின் பட்லரும், ஹெட்மயரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 83 ரன்கள் சேர்த்தனர்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 37 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ஹெட்மயர் இறங்கி, பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பட்லர் அரை சதமடித்து அசத்தினார்
இறுதியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. பட்லர் 70 ரன்னுடனும், ஹெட்மயர் 42 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய பெங்களூரு அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் சபாஸ் அகமது 45 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 44 அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இதையடுத்து அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்...
சிறுவர்களுக்கு ஆட்டோகிராப் போட்ட பந்தை பரிசளித்த ரகானே - வைரலாகும் வீடியோ
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பட்லரும், ஹெட்மயரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 83 ரன்கள் சேர்த்தனர்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 37 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ஹெட்மயர் இறங்கி, பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பட்லர் அரை சதமடித்து அசத்தினார்
இறுதியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. பட்லர் 70 ரன்னுடனும், ஹெட்மயர் 42 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஆர்.சி.பி. அணிக்கெதிராக சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் வகையில் களம் இறங்க இருக்கிறது.
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் 2 வெற்றியுட னும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றி , 1 தோல்வியுடனும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 2 புள்ளி பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 3 தோல்வியுடனும் , மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா 2 தோல்வியுடனும் புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை.
ஐ.பி.எல். தொடரின் 11-வது நாளான இன்று 13 வது லீக் ஆட்டம் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி பெங்களூருவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் மும்பையை 23 ரன் வித்தியாசத்திலும் வென்றது.
அந்த அணியில் கேப்டன் சாம்சன், ஜோஸ் பட்லர், ஹெட்மையர், படிக்கல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா, யசுவேந்திர சாஹல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் பஞ்சாபிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அடுத்து கொல்கத்தாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தானை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.
பெங்களூர் அணியில் கேப்டன் டு பிளிஸ்சிஸ், விராட் கோலி, ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் இன்று மோதுவது 25-வது போட்டியாகும். இதுவரை நடந்த 24 ஆட்டத்தில் பெங்களூரு 12-ல், ராஜஸ்தான் 10-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் முடிவு இல்லை.
இதையும் படியுங்கள்... பும்ராவை காப்பி அடித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அணியை வீழ்த்தி லக்னோ 2வது வெற்றியை பெற்றுள்ளது.
மும்பை:
ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நிலைத்து நின்று ஆடவும், வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பை உருவாக்கவும் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளோம். இன்று (நேற்று) மீண்டும் அதைச் செய்தோம்.
இது போன்ற விளையாட்டுக்களில் வெற்றி பெறுவது மிகுந்த நம்பிக்கையைத் தரும். ஆக்ரோஷமான, ஆனால் ஆபத்து இல்லாத கிரிக்கெட்டை விளையாடி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்க வேண்டும், ஆனால் ஸ்மார்ட் ஷாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆல்-ரவுண்டர் ஹோல்டரின் சேர்க்கை அணிக்கு வலு சேர்த்துள்ளது.
கடந்த 3-4 சீசன்களாக நான் ஹூடாவுடன் விளையாடி வருகிறேன். அவர் தனது வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் அதைப் சிறப்பாக பயன்படுத்துகிறார், இப்போது மிடில் ஆர்டரில் நம்பக்கூடிய ஒருவராக அவர் மாறியிருக்கிறார்.
இவ்வாறு கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
18 படகு போட்டி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசு செலவில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி:
இந்தாண்டு நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2022 உள்ளிட்ட பல்வேறு போட்டிளுக்கான பயிற்சிகள் மற்றும் உத்திகளை வெளிநாட்டு பயணங்கள் மூலம் அறிந்த கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
12 தடகள வீரர்களைக் கொண்ட இந்திய தடகள அணி, இரண்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பணியாளர் உள்ளிட்டோர் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 6 வரை அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங் பகுதிக்கு செல்ல உள்ளனர். இந்தப் பயணத்திற்காக அரசு ரூ. 1.19 கோடியை அனுமதித்துள்ளது.
அதே போன்று 400 மீட்டர் தடகள போட்டி 4 x 100 மீட்டர் போட்டிகளில் பங்கேற்கும் 31 வீரர்கள், 4 பயிற்சியாளர்கள், 5 ஊழியர்கள், ஏப்ரல் 10 முதல் ஜூன் 6 வரை துருக்கி நாட்டின் அண்டாலியா நகரில் பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது பயணத்திற்கு மத்திய அரசு ரூ.1.57 கோடி அனுமதித்துள்ளது.
மேலும் 18 படகு போட்டி வீரர்கள் மற்றும் வீரங்கனைகள் அடங்கிய இந்திய படகோட்டி குழு, அரசின் முழு செலவில் ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி
அனுராக் சிங் தாக்கூர் இதனை தெரிவித்துள்ளார்.
கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்கள் குவித்ததால் லக்னோ அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களம் இறங்கிய லக்னோ அணியில் துவக்க வீரர் கேப்டன் கே.எல்.ராகுல், 68 ரன்கள் குவித்தார். தீபக் ஹூடா 51 ரன்கள் அடித்தார்.
லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.
சன்ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது.
அதிசபட்சமாக அந்த அணியின் ராகுல் திரிபாதி 44 ரன்களும், நிகோலஸ் பூரன் 34 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
லக்னோ அணி சார்பில் அவேஸ்கான் 4 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும், பாண்ட்யா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... சிறுவர்களுக்கு ஆட்டோகிராப் போட்ட பந்தை பரிசளித்த ரகானே - வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்கள் குவித்ததால் லக்னோ அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
லக்னோ அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், ஐதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு, ரன் சேர்த்தார். அதேசமயம் மறுமுனையில் குயின்டன் டி காக், எவின் லெவிஸ் தலா 1 ரன், மணீஷ் பாண்டே 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் தீபக் ஹூடா இணைய, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தனர்.
தீபக் ஹூடா 51 ரன்களிலும், கே.எல்.ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர், குருணால் பாண்டியா 6 ரன்னில் வெளியேறினார். 19 ரன்கள் எடுத்த ஆயுஷ் பதோனி, ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆக, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ஹோல்டர் 8 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
சன்ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.
கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சியின் போது ரகானே கையெழுத்திட்ட பந்தை சிறுவர்களுக்கு பரிசளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சியின் போது ரகானே சிறுவர்களுக்கு பந்தை பரிசாக வழங்கியதை கொல்கத்தா அணியினர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
With 💜 from @ajinkyarahane88! #KnightsInAction presented by @glancescreen | #KKRHaiTaiyaar#IPL2022pic.twitter.com/C06zgQiSrA
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2022
அந்த வீடியோவில் கொல்கத்தா அணியினர் பயிற்சி செய்த போது ரகானே ஒரு பந்தில் அவரது கையெழுத்தை போட்டு அந்த சிறுவர்களிடம் வழங்கினார். பந்தை பெற்ற சிறுவர்களில் ஒருவன் உற்சாகத்துடன் ரகானேவுக்கு நன்றி தெரிவித்தான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...பால் ஆடம்ஸ் சாதனையை முறியடித்த கேசவ் மகாராஜ்
வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பால் ஆடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார்.
டர்பன்:
தென் ஆப்பிரிக்கா அணி வீரரான கேசவ் மகாராஜ். வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் முன்னனி பந்து வீச்சாளர்களில் ஒருவரான பால் ஆடம்ஸ் சாதனையை மகாராஜ் முறியடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களில் 134 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் இருந்த பால் ஆடம்சை பின்னுக்கு தள்ளி 136 விக்கெட்டுகளுடன் கேசவ் மகாராஜ் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஹக் டெய்ஃபீல்ட் 170 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
இதையும் படியுங்கள்...2022 பெண்கள் உலகக்கோப்பை கனவு அணி அறிவிப்பு
வங்காள தேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டர்பன்:
வங்காள தேசம் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றது. ஒருநாள் தொடரை வங்களாதேசம் அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக பவுமா 93 ரன்கள் எடுத்தார். வங்காள தேச அணி தரப்பில் கலீத் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் அணி 298 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா ஆடியது.
இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாது இன்னிங்சை ஆடிய வங்காள தேச அணி கேசவ் மகாராஜ் சுழலில் சிக்கியது. அந்த அணி 19 ஓவர் மட்டுமே விளையாடி 53 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. கேசவ் மகாராஜ் 10 ஓவர் பந்து வீசி 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக கேசவ் மகாராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
ஐசிசி வெளியிட்ட 2022-ம் ஆண்டு பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியில் இந்திய அணியில் ஒருவர் கூட இடம் பெறவில்லை.
12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 7-வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய பெண்கள் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த அணியில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள். வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேச அணி ஒருவரும் இடம் பிடித்தனர். கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் லனிங் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா, பாகிஸ்தான் அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பிடிக்கவில்லை. ஐசிசி-ன் கனவு அணியில் இடம் பிடித்த வீராங்கனைகள் விவரம்:-
1. லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா)
2. அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா)
3. மெக் லானிங் (கேப்டன்) (ஆஸ்திரேலியா)
4. ரேச்சல் ஹெய்ன்ஸ் (ஆஸ்திரேலியா)
5. நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து)
6. பெத் மூனி (ஆஸ்திரேலியா)
7. ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
8. மரிசான் கேப் (தென் ஆப்பிரிக்கா)
9. சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து)
10. ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா)
11. சல்மா காதுன் (வங்காளதேசம்)
12வது வீரர்: சார்லி டீன் (இங்கிலாந்து)
இதையும் படியுங்கள்...ஜாண்டி ரோட்ஸ் மாதிரி ரன் அவுட் செய்த எம்எஸ் டோனி - வைரலாகும் வீடியோ






