என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஹாமிலடன்:

    நியூசிலாந்து-நெதர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 333 ரன்கள் எடுத்தது. வில் யங் 120 ரன்களும் கப்தில் 106 ரன்களும் எடுத்திருந்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியினர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஸ்டீபன் மைபர்க் மட்டுமே சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 42.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த போட்டியுடன் நியூசிலாந்து அணி வீரர் ரோஸ் டெய்லர் ஓய்வு பெறுகிறார். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வில் யங் தேர்வு செய்யப்பட்டார்.

    தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி 90-50 என்ற புள்ளிக்கணக்கில் மிசோரமை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
    சென்னை:

    தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் ஆக மொத்தம் 31 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

    தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. உத்தரகாண்ட், டெல்லி, மிசோரம் ஆகியவை அந்த பிரிவில் உள்ளன. தமிழக பெண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியன் ரெயில்வே, டெல்லி, மராட்டியம் ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்டது. இதில் தமிழ்நாடு 85-47 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. தமிழக பெண்கள் அணி முதல் ஆட்டத்தில் 62-100 என்ற புள்ளி கணக்கில் பலம் வாய்ந்த இந்தியன் ரெயில்வேயிடம் தோற்றது.

    தமிழக அணி 2-வது ஆட்டத்தில் மிசோரமை இன்று எதிர்கொண்டது. இதில் தமிழ்நாடு 90-50 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் 98-50 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் கேரளா 56-32 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்தது.

    தமிழக பெண்கள் அணி 2-வது ஆட்டத்தில் டெல்லியை இன்று மாலை 5.30 மணிக்கு எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் தோற்ற தமிழக மகளிர் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    இன்று நடைபெறும் மற்ற ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் சர்வீசஸ்- ராஜஸ்தான், இந்தியன் ரெயில்லே- அரியானா, உத்தரபிரதேசம்- கர்நாடகா, மேற்கு வங்காளம்-மத்திய பிரதேசம், குஜராத்- தெலுங்கானா, அணிகள் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் நடைபெறும் மற்ற ஆட்டங்களில் கர்நாடகா-பஞ்சாப், அரியானா-தெலுங்கானா, ரெயில்வே-மராட்டியம், ஒடிசா-அசாம், ராஜஸ்தான்-மேற்கு வங்காளம் அணிகள் மோதுகின்றன. 

    நெதர்லாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியோடு நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
    ஹாமில்டன்:

    நெதர்லாந்து அணியினர் 3 ஒருநாள் போட்டி ஒரு டி20 போட்டி விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. டி20 போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இந்த போட்டி நியூசிலாந்து அணி வீரரான ரோஸ் டெய்லருக்கு கடைசி போட்டியாகும். இந்த தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னாதாக நியூசிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலித்தது. நியூசிலாந்து அணி வீரர்களுடன் டெய்லரின் குழந்தைகளும் அதில் இடம்பெற்றனர். அப்போது டெய்லர் கண் கலங்கியபடி பாடினார். பாடல் முடிந்தது அவரது மகளுக்கு முத்தம் கொடுத்தப்படி செல்வார். 

    Ross Taylor is about to play his final international game of cricket for New Zealand.

    கடைசி போட்டியில் விளையாடும் ரோஸ் டெய்லருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி, சங்ககாரா, ஜோரூட், கேன் வில்லியம்சன், மெக்கல்லம், டேனியல் விக்டோரி, ஆரோன் பிஞ்ச் உள்ளிட்ட நியூசிலாந்து அணி வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. கப்தில், வில் யங் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இவர்கள் இருவரும் விளையாடிய போது கடைசி போட்டியில் ரோஸ் டெய்லருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காதது போல இருந்தது. 

    டெய்லர்

    39-வது ஓவரில் கப்தில் அவுட் ஆனதால் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது. அவர் களத்திற்கு வரும் போது சுற்றி இருந்த ரசிகர்கள் எழும்பி நின்று கைதட்டி அவரை வரவேற்றனர். களத்தில் இருந்து நெதர்லாந்து அணி வீரர்கள் அவரை கவுரவிக்கும் வகையில் அனைத்து வீரர்களும் அவரை வரிசையாக நின்று வரவேற்றனர். அதற்கு நன்றி சொல்லும் விதமாக டெய்லர் நெதர்லாந்து கேப்டனான பீட்டர் சீலரிடம் கைகுலுக்கினார்.
    இதனையடுத்து களமிறங்கிய டெய்லர் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதில் ஒரு சிக்சர் அடங்கும். அவர் 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8602 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 21 சதம் 51 அரை சதம் அடங்கும். 

    உலகின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஸ்டைலில் ஆஸ்திரேலியா வீரர் பந்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ஆஸ்திரேலியாவில் ஷெஃபீல்ட் ஷீல்டு என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு ஆஸ்திரேலியா -விக்டோரியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற விக்டோரியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    முதல் இன்னிங்சில் மேற்கு ஆஸ்திரேலியா அணி 386 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய விக்டோரியா 306 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் மேற்கு ஆஸ்திரேலியா அணி 400 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்சில் விக்டோரியா அணியை சேர்ந்த நிக் மேடின்சன் 160-வது ஓவரை வீசினார். 



    அவர் வீசிய ஸ்டைல், இந்திய பந்து வீச்சாளர் பும்ரா மாதிரி இருந்தது. அப்போது மற்ற வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவரது பந்து வீச்சை பார்த்து சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜபக்சவை எம்எஸ் டோனி ரன் அவுட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 180 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி ராஜபக்சேவை ரன் அவுட் செய்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. 

    பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது 2-வது ஓவரில் இந்த ரன் அவுட் செய்யப்பட்டது. 2-வது ஓவரை ஜோர்டன் வீசினார். முதல் பந்தை சிக்சர் அடித்த ராஜபக்ச 2-வது பந்தை 1 ரன் எடுக்க முயற்சித்தார். முதலில் தவான் ஓடி வந்தார். ஜோர்டன் வருவதை பார்த்து அவர் பின்னாடி சென்று விட்டார். தவான் அழைத்தவுடன் ராஜபக்ச பாதி வரை வந்து பின்னர் பேட்டிங் செய்த இடத்திற்கு ஓடினார். அப்போது ஜோர்டன் நேரடியாக ஸ்டெம்பை அடிக்க முயற்சித்தார். ஆனால் ஸ்டெம்பில் படவில்லை. ஸ்டெம்பில் படாமல் வந்த பந்தை கீப்பர் டோனி ஓடி வந்து டைவ் அடித்து ரன் அவுட் செய்தார். 



    இவ்வாறு ரன் அவுட் செய்தது தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ரன் அவுட்டை நினைவுப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. 1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜாண்டி ரோட்ஸ், இன்சமாமை அவுட் செய்வார். அவர் காற்றில் பறந்த படி அந்த ரன் அவுட்டை செய்தார். அன்று முதல் இன்று வரை அந்த ரன் அவுட் பேசப்படுகிறது.

    நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் கப்தில் மற்றும் வில் யங் சதம் அடித்துள்ளனர்.
    ஹாமில்டன்: 

    நெதர்லாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டன் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்தில்-நிகோலஸ் களமிறங்கினர். 

    நிகோலஸ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வில் யங் கப்திலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் நெதர்லாந்து அணியின் பவுலர்களை அருமையாக எதிர் கொண்டு விளையாடினார். மார்டின் கப்தில் சிக்சர் அடித்தே சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச போட்டியில் அவரது 17-வது சதம் இதுவாகும். 106 ரன்கள் எடுத்து அவர் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கப்தில்-வில் யங் ஜோடி 203 ரன்கள் சேர்த்தனர்.

    அடுத்து வந்த டெய்லர் 14 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் சிக்சர் மூலம் சதம் அடித்தார். இந்த தொடரில் இவரது 2-வது சதம் இதுவாகும். 5 ஒருநாள் போட்டியில் விளையாடி 2 சதங்கள் அடித்துள்ளார். 120 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்த வெளியேற 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் குவித்தது.

    நெதர்லாந்து தரப்பில் பிரெட் கிளாசென்,லோகன் வான் பீக், கிளேட்டன் ஃபிலாய்ட், ஆர்யன் தத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 334 ரன்கள் எடுத்தால் என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கும். 

    ஐபிஎல் போட்டியில் கிடைக்கும் பணத்தை வைத்து எனது பெற்றோருக்காக வீடு வாங்குவதே எனது லட்சியம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் திலக் வர்மா கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் மூன்று அணிகள் மட்டும் இன்னும் புள்ளி கணக்கை தொடங்காமல் உள்ளது. சென்னை (3), மும்பை (2), ஐதராபாத் (1) ஆகிய போட்டிகளில் விளையாடி தோல்வியே அடைந்துள்ளது. 

    மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரண்டு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது.

    மும்பை அணி தோல்வியை தழுவினாலும் இளம் வீரரான திலக் வர்மாவின் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முதல் போட்டியில் 22 ரன்களும் 2-வது போட்டியில் 5 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் ஏலத்தின் போது அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 1.7 கோடிக்கு வாங்கியது. ஏலத்திற்கு ஏற்றது போல அவரது ஆட்டம் சிறப்பானதாக இருந்தது.

    இந்நிலையில் அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சொந்தமாக வீடு இல்லை என்றும் திலக் வர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தந்தையின் குறைந்த சம்பளத்தில் தான் எனது கிரிக்கெட் செலவையும் சகோதரனின் படிப்பு செலவையும் பார்த்துக் கொண்டார். 

    எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இந்த ஐபிஎல் மூலம் சம்பாதித்து எனது பெற்றோருக்காக வீடு வாங்குவதே எனது குறிக்கோளாக கொண்டுள்ளேன். ஐபில் ஏலத்தின் போது எனது குடும்பத்தினரும் மற்றும் பயிற்சியாளரும் உணர்ச்சிவசப்பட்டனர். 

    ஐபிஎல் ஏலம் நடந்து கொண்டிருக்கும் போது எனது பயிற்சியாளர் வீடியோ காலில் இருந்தார். நான் அதிகமாக ஏலம் போகும் போது பயிற்சியாளர் கண்ணீர் சிந்தினார். உடனே எனது பெற்றோருக்கு போன் செய்து விவரத்தை கூறியபோது அவர்களும் அழுதனர். எனது தாய் பேச வார்த்தைகள் இல்லை என என்னிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    இவ்வாறு திலக் வர்மா கூறினார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது.
    மும்பை:

    பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்  ரவீந்திர ஜடேஜா, பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம் என்றும், தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த வீரர் என்றும், அவருக்கு நம்பிக்கை அளித்தால் சிறப்பாக செயல்படுவார் என்றும் கூறினார். 

    சிவம் துபே சிறப்பாக பேட்டிங் செய்கிறார், அவரை சிறந்த மனநிலையில் வைத்திருக்க வேண்டியது முக்கியம் என்று தாம் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

    தோல்வியில் இருந்து மீண்டும் வருவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.
    இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்
    மும்பை:

    15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 

    இதில் பங்கேற்றதன் மூலம் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.  

    நேற்றைய போட்டி அவர் விளையாடிய 350வது டி20 போட்டி ஆகும். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 372 டி20 போட்டிகளில் விளையாடி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார். 

    336 டி20 போட்டிகளில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னா இந்த பட்டியிலில் 3வது இடத்தில் உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்  கேப்டனாக இருந்த தோனி, இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு,கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 180 ரன்கள் அடித்திருந்தது
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்து வீச்சை தேர்வு செய்தார். 

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரர் கேப்டன் மயங்க் அகர்வால் 4  ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் களமிறங்கிய பனுகா ராஜபக்சே 9 ரன்னில் வெளியேறினார். 

    இதையடுத்து ஷிகர் தவான்-லிவிங்ஸ்டன் ஜோடி, சென்னை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டது. லிவிங்ஸ்டன், 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.  தவான் 33 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 26 ரன்னுடன் வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.

    சென்னை அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், பிரிட்டோரியஸ் தலா 2  விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. 

    துவக்க வீரர்கள் ராபின் உத்தப்பா 13 ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிபட்சமாக சிவம் துபே 57 ரன்கள் குவித்தார். சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

    சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளதால் ரசிகர்கள் வேதனையடைந்தனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன்கள் குவித்தார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின், துவக்க வீராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 4  ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் இணைந்த பனுகா ராஜபக்சே 9 ரன்னில் வெளியேறினார். 

    பனுகா ராஜபக்சே ரன் அவுட் ஆனதால் உற்சாகமடைந்த சென்னை வீரர்கள்

    இதையடுத்து ஷிகர் தவான்-லிவிங்ஸ்டன் ஜோடி, சென்னை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அணியின் ஸ்கோர் 109 ஆக இருந்தபோது, ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அவர் 33 ரன்கள் சேர்த்திருந்தார். மறுமுனையில் அரை சதம் கடந்து முன்னேறிய லிவிங்ஸ்டன், 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் குவித்தனர்.

    அதன்பின்னர் ஜிதேஷ் சர்மா 26 ரன், ஷாரூக் கான் 6 ரன், ஓடியன் ஸ்மித் 3 ரன், ராகுல் சாகர் 12 ரன் எடுக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. காகிசோ ரபாடா 12 ரன்னுடனும், வைபஸ் அரோரா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், பிரிட்டோரியஸ் தலா 2  விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

    சென்னை அணி இதுவரை  விளையாடிய  2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்றைய ஆட்டம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் ஆகும்.
    அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி வீரர்கள், தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை அணி வீரர் ஜோர்டான் குணமடைந்ததால் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். அவர் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடுகிறார். பஞ்சாப் அணியில் வைபவ் அரோரா, ஜிதேஷ் சர்மா அறிமுகம் ஆகி உள்ளனர்.

    அடுத்தடுத்து 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி வீரர்கள், தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    அணிகள் விவரம்:

    சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்.எஸ்.டோனி (கீப்பர்), ஷிவம் துபே, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி.

    பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பனுகா ராஜபக்சே (கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.
    ×