என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி 170 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி சதமடித்து, 170 ரன்கள் குவித்தார். ஹெய்ன்ஸ் 68 ரன்னிலும், பெத் மூனி 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நடாலி சீவர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 121 பந்துகளில் ஒரு சிக்சர், 15 பவுண்டரி உள்பட 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 
    சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வெல்வதோடு முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற நிலையுடன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும்.
    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

    சி.எஸ்.கே. அணி 3-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை இன்று எதிர்கொள்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    சி.எஸ்.கே. அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் 2 ஆட்டத்திலும் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ததாலே தோல்வியை தழுவியது. லக்னோவுக்கு எதிராக 210 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனது பரிதாபமே. இதற்கு பனித்துளிகள் காரணமாகும்.

    இந்த ஐ.பி.எல். சீசனில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுப்படி 2-வது பேட்டிங் செய்யும் அணியே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. 10 ஆட்டத்தில் 7-ல் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றியை ருசித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணியே 3-ல் வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. டாசில் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்கிறது.

    பனித்துளியால் 2-வதாக பந்து வீசுவது சவாலாக இருக்கிறது. இதனால் முதலாவதாக பந்து வீச்சை செய்கிறது. சென்னை அணி 2 ஆட்டத்திலும் டாசில் தோற்று இருந்தது.

    முதல் 2 ஆட்டத்தில் தோற்றுள்ளதால் சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா நெருக்கடியில் உள்ளார். தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நிலையில் சி.எஸ்.கே. உள்ளது. உத்தப்பா, மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    சென்னை அணியின் பந்து வீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிது. இதை சரி செய்வது அவசியமாகும். முன்னணி வேகப்பந்து வீரரான தீபக் சாஹர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    பஞ்சாப் அணி சி.எஸ்.கே.-வை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிதர் தவான், பனுகா ராஜபக்சே, ஒடியன் சுமித், ரடோ, லிவ்விங்ஸ்டோன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் இன்று மோதுவது 26-வது போட்டியாகும். இதுவரை நடந்த 25 போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் 15-ல், பஞ்சாப்கிங்ஸ் 10-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணிகளும் வெற்றிக்காக போராடுகிறார்கள் என்பதால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.

    ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி முதல் மற்றும் 2-வது விக்கெட்டுக்கு 150க்கும் மேற்பட்ட ரன்கள் ஜோடி சேர்த்து அசத்தினார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான அலீசா ஹீலியும், ஹெய்னசும் சிறப்பாக ஆடினர்.

    ஹெய்ன்ஸ் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பெத் மூனி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மறுபுறம் தூணாக நின்று பொறுப்புடன் விளையாடிய அலீசா ஹீலி சதமடித்து அசத்தினார். அவர் 138 பந்தில் 26 பவுண்டரி உள்பட 170 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்து திணறிய நிலையில், தனி ஒருவனாகப் போராடி அதிரடி ஆட்டம் ஆடி சதமடித்தார் கேப்டன் டாம் லாதம்.
    ஹாமில்டன்:

    நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லாதம் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    அடுத்து ஆடிய நெதர்லாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், பிறந்தநாள் அன்று அதிக ரன்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை டாம் லாதம் படைத்துள்ளார். இவர் 140 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் சச்சினின் 24 ஆண்டு கால சாதனையை டாம் லாதம் முறியடித்துள்ளார்.

    இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 1998ம் ஆண்டு தனது பிறந்தநாளில் 134 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    டர்பன்:

    வங்காள தேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. 

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பவுமா 93 ரன்னும், 
    எல்கர் 67 ரன்னும், சரல் எர்வீ 41 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் காலித் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும், எபாட் ஹொசைன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 2-ம் நாள் முடிவில் வங்காளதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முது ஹசன் ஜாய் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மஹ்முது ஹசன் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு லிட்டன் தாஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். லிட்டன் தாஸ் 41 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ், மஹ்முத் ஹசன் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 82 ரன்கல் சேர்த்தது.

    இறுதியில், வங்காளதேசம் அணி 115.5 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மஹ்முது ஹசன் 137 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர் 4 விக்கெட், வில்லியம்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 69 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
    3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதமடித்தார்
    லாகூர்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்று இருந்தன. 

    இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், பந்துவீச்சை தேர்வுசெய்தார். 

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் உள்பட தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.  

    ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 67 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் கேரி 56 ரன்கள் அடித்தார்.41.5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 210  ரன்களுக்கு ஆட்டமிழந்தது .

    இதனை தொடர்ந்து 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 37.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

    பாகிஸ்தான்  கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் குறித்தார்.  இமாம் உல் ஹக் 87 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான்  அணி கைப்பற்றியது.
    குஜராத் அணியின் துவக்க வீரர் ஷுப்மான் கில் 46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்தார்.

    புனே:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் புனேயில் இன்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

    இதனையடுத்து களம் இறங்கிய குஜராத் துவக்க வீரர் மேத்யூ வேட், ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து முன்னேறினார். 

    மறுமுனையில் விஜய் சங்கர் 13 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள் சேர்த்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    ராகுல் தெவாட்டியா 14 ரன்களிலும், அபினவ் மனோகர் ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. 

    டெல்லி தரப்பில் முஷ்பிகுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார். கலீல் அகமது 2  விக்கெட், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தனர். 

    இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா 10 ரன்களுடனும்,  டிம் சீபர்ட் 3 ரன்களுடன் வெளியேறினர். 

    அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 43 ரன்கள் அடித்தார். அந்த அணி 20  ஓவர்கள் முடிவில்  9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.  அந்த அணி சார்பில் லோக்கி பெர்குசன் அதிகபட்சமாக 4 விக்கெட்களையும் முகமது சமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.  
    குஜராத் அணியின் துவக்க வீரர் ஷுப்மான் கில் 46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்தார்.
    புனே:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் புனேயில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச முடிவு செய்தது. இதனால் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் மேத்யூ வேட், ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து முன்னேறினார். 

    மறுமுனையில் விஜய் சங்கர் 13 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள் சேர்த்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    ராகுல் தெவாட்டியா 14 ரன்களிலும், அபினவ் மனோகர் ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. டேவிட் மில்லர் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    டெல்லி தரப்பில் முஷ்பிகுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார். கலீல் அகமது 2  விக்கெட், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.
    194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களே எடுத்தது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 100 ரன்கள் விளாசினார். மும்பை அணி தரப்பில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 

    இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

    மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 61 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 54 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் தரப்பில் நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
    மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பட்லர் ஐபிஎல் தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். டாஸ் வென்ற ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் களமிறங்கி ஆடினர். 2-வது ஓவரில் ஜேஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் 4-வது ஓவரை பாசில் தம்பி வீசினார். அந்த ஓவரில் 3 சிக்சர் மட்டும் 2 பவுண்டரிகளை விளாசினார் பட்லர். 

    ராஜஸ்தான் அணி 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் படிக்கல் 7 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து பட்லருடன் சாம்சன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். சாம்சன் 30 ரன்கள் எடுத்திருந்த போது பொல்லார்ட் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

    அடுத்து வந்த ஹெட்மயர் அவரது பங்குக்கு 3 சிக்சர் 3 பவுண்டரிகளை விளாசிய அவர் 35 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்தில் வெளியேறினார். ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய பட்லர் ஐபிஎல்-ல் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 100 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்ட் ஆனார். 100 ரன்கள் அடித்ததன் மூலம் ஆரஞ்சு தொப்பியை பட்லர் தன்வசமாக்கினார்.

    அடுத்த வந்த வீரர்கள் அஸ்வின் 1, சைனி 2, பராக் 5 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது.

    மும்பை அணி தரப்பில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கும்.

    மும்பை அணிக்கு எதிரான 2-வது லீக் ஆட்டத்தில் ரிஷப்பின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. லீக் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 106 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து. இதனால் டெல்லி தோல்வியடைந்து விடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரிஷப்பின் கேப்டன்ஷிப் பெரிதும் பேசப்பட்டது.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி போல செயல்படுகிறார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

    ரிஷப் பண்ட் அழுத்ததில் விளையாடும் வீரர் அல்ல. அவர் எப்போதும் இயல்பான விளையாட்டை விளையாடக்கூடியவர். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி கொள்வார். தொடர்ந்து சிறப்பாக ஆடக்கூடியது அவ்வளவு எளிதல்ல. 

    அவரது சாமர்த்தியமான கேப்டன்ஷிப் எனக்கும் பிடிக்கும். குல்தீப் யாதவை சரியாக பயன்படுத்தியதுடன் சூழ்நிலைக்கு ஏற்ப பந்து வீச்சை மாற்றி அமைத்தார். அதே சமயம் அவர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவது போல விளையாடுகிறார். எனவே இன்னும் அதிகமான விஷங்களை கற்றுக்கொள்வார்.

    அவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியுடன் ஒப்பிடலாம். ரிஷப்பிடம் எனக்கு பிடித்தது. டோனியை போலவே அதிகமாக சிந்தித்து செயல்படுவார். ஆட்டத்திற்கு முன் அவரது பயிற்சி மற்றும் பணி நெறிமுறைகள் பெரும்பாலும் டோனியை போல் இருக்கும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமார் யாதவ் இடம்பெறவில்லை.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இந்த போட்டியில் இடம் பிடிப்பார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் அவர் இந்த போட்டியில் ஆடவில்லை.

    இந்த ஐபிஎல் சீசனில் 8 ஆட்டங்கள் நடந்துள்ளது. இதில் 7 ஆட்டங்களில் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மும்பை அணியின் இடம் பிடித்துள்ள வீரர்கள்:-

    1. ரோகித் சர்மா 2. இஷான் கிஷன் 3. அன்மோல்பிரீத் சிங் 4. திலக் வர்மா 5. பொல்லார்ட் 6. டிம் டேவிட் 7. டேனியல் 8. முருகன் அஸ்வின் 9. பும்ரா 10. மில்ஸ் 11. பாசில் தம்பி

    ராஜஸ்தான் அணியின் இடம் பிடித்துள்ள வீரர்கள்

    ராஜஸ்தான் அணி வீரர்கள்

    1. ஜோஸ் பட்லர் 2. ஜோஸ்வால் 3. சஞ்சு சாம்சன் 4. படிக்கல் 5. ஹெட்மயர் 6. ரியான் பராக் 7. அஸ்வின் 8. பொல்ட் 9. சைனி 10. பிரதிஷ் கிருஷ்ணா 11. சாஹல்

    ×