என் மலர்
விளையாட்டு
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் லாதம் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நெதர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றது. டி20 போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடாத நிலையில் போட்டி நடக்கவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அந்த 32 ரன்கள் எடுப்பதற்க்குள் 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. லாதம்-கிராண்ட்ஹோம் சிறிது நேரம் தாக்குப்பித்தனர். 16 ரன்கள் எடுத்த நிலையில் கிராண்ட்ஹோம் அவுட் ஆனார். இதனையடுத்து லாதம்-வுடன் பிரேஷ்வேல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஒரு பக்கம் நிலைத்து ஆடிய லாதம் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக லாதம் 140 ரன்கள் எடுத்த ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. முதல் 2 விக்கெட்டுகள் உடனே சரிந்த நிலையில் விக்ரம்ஜித் சிங்-பாஸ் டி லீடே ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 81 ரன்கள் எடுத்த நிலையில் விக்ரம்ஜித் சிங் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 4-ந் தேதி நடைபெறும்.
இதையும் படியுங்கள்...சாதனை படைத்த ரகானே, உமேஷ் யாதவ்- நேற்றை போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு அலசல்
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி தமிழ்நாட்டில் 4-வது முறையாக நடைபெற இருக்கிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை:
இந்திய கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 10-ந் தேதி வரை 8 நாட்கள் இந்தப் போட்டி நடக்கிறது.
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் 31 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அணி “சி” பிரிவில் இருக்கிறது. உத்தரகாண்ட், டெல்லி, மிசோரம் ஆகியவையும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஏ பிரிவில் பஞ்சாப், குஜராத், கேரளா, தெலுங்கானா அணிகளும், பி பிரிவில் உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், சர்வீசஸ் அணிகளும், டி பிரிவில் மத்திய பிரதேசம், அரியானா மேற்கு வங்காளம், இந்தியன் ரெயில்வே, ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
பெண்கள் பிரிவில் 15 அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழக அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன இந்தியன் ரெயில்வே, டெல்லி, மராட்டியம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
உத்தரபிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம் பி பிரிவிலும் தெலுங்கானா, ஒடிசா, அரியானா, அசாம் சி பிரிவிலும் ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், கர்நாடகா டி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இந்தியா முழுவதும் இருந்து 372 வீரர், வீராங்கனைகள், 50 அதிகாரிகள், 90 பயிற்சியாளர்கள் ஆகியோரை இந்த போட்டியில் காணலாம். 8 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் பதக்கம் வழங்கப்படும். இது தவிர பார்வையாளர்களுக்கு சைக்கிள் பரிசு வழங்கப்படுகிறது.
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி தமிழ்நாட்டில் 4-வது முறையாக நடைபெற இருக்கிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. போட்டியை நடத்தும் மாநிலம் முதல் முறையாக பட்டம் வென்று அப்போது புதிய வரலாறு படைத்தது.
தமிழக அணி இதுவரை 10 முறை தேசிய சீனியர் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. தமிழக பெண்கள் அணி 2 முறை 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளரும், இந்திய கூடைப்பந்து சம்மேளன துணைத் தலைவருமான ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...மியாமி ஓபன் டென்னிஸ்: இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் நவோமி-ஸ்வியாடெக் மோதல்
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் உமேஷ் யாதவ் 2 சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதின. ரசல் அதிரடியில் கொல்கத்தா அணி 14 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வீரர்களின் சாதனைகள் மற்றும் சம்பவங்களை பார்க்கலாம்.
நேற்றைய போட்டியில் ரகானே 12 ரன்னில் அவுட் ஆனார். அவர் 8 ரன்கள் எடுத்த போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 4000 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் அவர் 7-வது இடத்தை பிடித்துள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2 சதங்களுடன் 12-வது இடத்தில் உள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர் பட்டியலில் உமேஷ் யாதவ் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் யூசப் பதான், ரோகித் சர்மா, கெயில் ஆகிய 3 வீரர்கள் உள்ளனர்.

ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த வீரர்களிலும் உமேஷ் யாதவ் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நரேன் 32 விக்கெட்டுகள். 3-வது இடத்தில் சென்னை அணிக்கு எதிராக மலிங்கா 31 விக்கெட்டுகள். 4-வது இடத்தில் மும்பை அணிக்கு எதிராக பிராவோ 31 விக்கெட்டுகள். 5-வது இடத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அமித் மிஸ்ரா 30 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
பஞ்சாப் அணிக்கு எதிராக உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் இதுவே இவரின் சிறந்த பந்து வீச்சு ஆகும். இதன் மூலம் உமேஷ் யாதவ் பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் 71 ரன்கள் குவித்த கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரசல் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி முதல் இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது 5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஷாருக்கான் களமிறங்கினார். அவர் 5 பந்துகள் சந்தித்த நிலையில் சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டை வீழ்த்திய போது கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் ஷாருக்கான் ஸ்டைலில் கைகளை உயர்த்தினார். இந்த ஸ்டைலை பார்த்த ஷாருக்கானின் மகள் சிரித்தப்படி துள்ளிக்குதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் நடுவராக இந்திய பெண் நியமனம்
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதி ஆட்டத்துக்கான போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
கிறைஸ்ட்சர்ச்:
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இறுதி ஆட்டத்துக்கான போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர்கள் குழுவில் இடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமை ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமிக்கு உண்டு. ஏற்கனவே ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் இதே பணியை செய்திருக்கிறார். லாரன் ஆகென்பேக் (தென்ஆப்பிரிக்கா), கிம் காட்டன் (நியூசிலாந்து) கள நடுவர்களாகவும், ஜாக்யூலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) டி.வி. நடுவராகவும் செயல்பட உள்ளனர்.
இதையும் படியுங்கள்...பிராவோ ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை- பதோனி
மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா-ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
மியாமி:
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடம் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் புதிதாக நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 7-5 என்ற நேர்செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) விரட்டியடித்து இறுதிசுற்றை எட்டினார். இறுதிப்போட்டியில் ஒசாகா-ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-7 (7-9), 3-6 என்ற நேர்செட்டில் 10-ம் நிலை வீரரான ஹூபெர்ட் ஹூர்காச்சிடம் (போலந்து) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தொடரில் அரைஇறுதியை எட்டினால் ஜோகோவிச்சை (செர்பியா) பின்னுக்கு தள்ளி மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க முடியும் என்ற நிலையில் இருந்த மெட்விடேவ் இந்த தோல்வியின் மூலம் அந்த பொன்னான வாய்ப்பை நழுவவிட்டார்.
ஐபிஎல் கிரிக்கெடில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ்- ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை:
15-வது ஐ.பி.எல். போட்டி யில் நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இதில் கொல்கத்தா 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய அணிகள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று 2 புள்ளி பெற்றுள்ளன. லக்னோ, பெங்களூர், பஞ்சாப் ஆகியவை ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் (2 போட்டி), மும்பை, ஐதராபாத் (தலா 1 ஆட்டம்) ஆகியவை புள்ளி எதுவும் பெறவில்லை.
8-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்று இருந்தது. இதனால் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், பும்ரா, போல்லார்ட், டைமல் மில்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், படிக்கல், பட்லர், ஹெட்மயர், போல்ட், சாஹல், பிரசித் கிருஷ்ணா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ்- ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. குஜராத் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 5 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையும் தோற்கடித்தன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று அவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.
குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் திவேதியா, ரஷீத்கான், முகமது ஷமி, பெர்குசன், டேவிட் மில்லர், மேத்யூ வேட் போன்ற சிறந்த வீரர்களும், டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்ஷர் படேல், லலித்யாதவ், ஷர்துல் தாகூர் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
தோஹா:
32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர், டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகள் எவை என்பது ஜூன் மாதம் தெரிய வரும்.
இந்நிலையில், இந்த போட்டியில் லீக் சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடந்தது.
அதன்படி, போட்டியில் பங்கேற்கும் அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன.
ஏ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து, பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, தகுதிச்சுற்று அணி, சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து, டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, தகுதிச்சுற்று அணி.
இ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், தகுதிச்சுற்று அணி, எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன், எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் பவுமா, டீன் எல்கர் ஆகியோர் அரை சதமடித்தனர்.
டர்பன்:
வங்காள தேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பவுமா 93 ரன்னும், எல்கர் 67 ரன்னும், சரல் எர்வீ 41 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் காலித் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும், எபாட் ஹொசைன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
ரஸல் தெளிவாக விளையாடியதை பார்த்தவுடன் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடர்ந்து 2வது முறையை வெற்றியை ருசித்துள்ளது.
ஏப்ரல் 6 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்க உள்ளது. இந்நிலையில், நேற்றைய போட்டியின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் கே.கே.ஆர்.கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், தெரிவித்துள்ளதாவது:
அவர் (ரஸல்) மிகவும் தெளிவாக விளையாடுவதை பார்ப்பது மிகவும் நிம்மதியாக இருந்தது. இது அவரது சிறப்பான அதிரடி ஆட்டம். நான் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வயதாகி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அவர் வலுவாகி வருகிறார் என்று நான் சொன்னேன்.
அவர் கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார். நான் செல்லும் போது ஒவ்வொரு முறையும் அவரை ஜிம்மில் பார்க்கிறேன். அணி வெற்றி பெற வேண்டும் என்று வெறியுடன் அவர் இருக்கிறார். சேர்ந்து விளையாடுவதற்கு அவர் ஒரு மிக சிறந்த வீரர். இவ்வாறு ரஸல் குறித்து ஷ்ரேயாஸ் கூறியுள்ளார்.
பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட ஆண்ட்ரே ரஸல், மிக விரைவாக 26 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 137 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பனுகா ராஜபக்சே 31 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ரகானே (12), வெங்கடேஷ் அய்யர் (3) விரைவில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 26 ரன்கள் அடித்து, நம்பிக்கை அளித்தார்.
அதன்பின்னர் சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸல் இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட ரஸ்ஸல், மிக விரைவாக 26 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 15வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரஸல். 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் அடித்த கொல்கத்தா அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஸல் ஆட்டமிழக்காமல் 71 ரன்களும், பில்லிங்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.
இதையும் படியுங்கள்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது உறுதி- ஜாகீர்கான்
பஞ்சாப் கிங்ஸ் அணியில், அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்சே, 9 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 31 ரன்கள் விளாசினார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவர்களில், 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 16 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்சே 9 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 31 ரன்கள் விளாசினார். ரபாடா 16 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன்கள் சேர்த்தார்.
கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். டிம் சவுத்தி 2 விக்கெட், சிவம் மவி, சுனில் நரைன், ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
காயத்தில் இருந்து மீண்ட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குவார் என ஜாகீர்கான் உறுதிப்படுத்தி உள்ளார்.
மும்பை:
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனையும், வழக்கம்போலவே தோல்வியுடன் தான் தொடங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் காயம் ஏற்பட்டது. அதனால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையும் பயிற்சியும் எடுத்து வந்தார்.
காயத்திலிருந்து மீண்டு அண்மையில் மும்பை சென்றடைந்தார். ஆனால் 3 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், அதை முடித்துவிட்டு மும்பை அணியுடன் தற்போது இணைந்து உள்ளார்.
இதனை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜாகீர்கான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்...ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக உமர்குல் நியமனம்






