என் மலர்
விளையாட்டு
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான அடிப்படை விலை ரூ.32,890 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட உரிமத்தொகையை விட 2 மடங்கு அதிகமாகும்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டி மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இதனால் இந்தப்போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி இருக்கும்.
தற்போது ஐ.பி.எல். போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. இந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூ.16,347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை பெற்று இருந்தது.
அதற்கு முன்பு 2008 முதல் 2017 வரை சோனி நெட்வொர்க் ரூ.8,200 கோடிக்கு பெற்று ஒளிபரப்பு செய்தது. ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு வழங்கும் நடைமுறையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே தொடங்கி விட்டது.
2023-2027 ஆண்டு வரையிலான ஐ.பி.எல். தொடர்களை ஒளிபரப்புவதற்கான உரிமைக்கு கிரிக்கெட் வாரியம் டெண்டர் விடுத்து இருந்தது. டெண்டருக்கான அழைப்பிதழை மே 10-ந் தேதி வரை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் நடைபெறும்.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான அடிப்படை விலை ரூ.32,890 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட உரிமத்தொகையை விட 2 மடங்கு அதிகமாகும்.
அதிக தொகையை குறிப்பிடும் நிறுவனம் ஐ.பி.எல். உரிமத்தை பெறும். இந்த உரிமம் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்டார் மற்றும் டிஸ்னி நிறுவனம் இந்த முறை ஒளிபரப்பு ஏலத்தில் பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமைப்பான வியாகாம், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையை பெற கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள்...பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் புதிய சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று பகல்- இரவாக நடந்தது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்தது.
பென் மெக்டர் மட் 104 ரன்னும், டிரெவிஸ் ஹெட் 89 ரன்னும், லபுஷேன் 59 ரன்னும், ஸ்டோனிஸ் 49 ரன்னும் எடுத்தனர். ஷகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது வாசிம் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
349 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடியது.
அந்த அணி ஒரு ஒவர் எஞ்சிய நிலையில் 349 ரன் இலக்கை எடுத்தது. பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 349 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் பாபர் ஆசம், தொடக்க வீரர் இமாம்- உல்-ஹக் ஆகியோர் சதம் அடித்தனர். பாபர் ஆசம் 83 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), இமாம்-உல்-ஹக் 97 பந்தில் 106 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) பகர் ஜமான் 67 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பாபர் ஆசம் 15-வது சதத்தை பதிவு செய்தார். 83 இன்னிங்சில் இதை எடுத்து சாதனை புரிந்தார். இதற்கு முன்பு ஹாசிம் அம்லா 86 இன்னிங்சில் 15 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
மேலும் பாகிஸ்தான் அணி ரன் இலக்கை எட்டியதிலும் புதிய சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்...சோதனையிலும் சாதனை படைத்த சிஎஸ்கே- நேற்றைய போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு அலசல்
இந்த ஐபிஎல் சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களில் தற்போது லக்னோ அணியின் அதிரடி பேட்ஸ்மேன் லீவிஸ் இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 210 ரன்கள் குவித்தது. இதனை லக்னோ அணி 19.2 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் வீரர்கள் படைத்த சாதனைகள் மற்றும் சம்பவங்கள் குறித்த தகவலை காண்போம்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. சென்னை இதுவரை நடந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததே இல்லை. இந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து சென்னை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் எம்எஸ் டோனி புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். அவர் 15-வது ரன்னை எடுத்த போது அனைத்து வடிவிலான 20 ஓவர் போட்டிகளிலும் சேர்த்து 7 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்து சாதனை புரிந்த 6-வது இந்திய வீரர் டோனி ஆவார்.

விராட் கோலி (10,326 ரன்), ரோகித் சர்மா (9,936 ரன்), ஷிகர் தவான் (8,818 ரன்), ரெய்னா (8,654 ரன்), உத்தப்பா (7,120 ரன்) ஆகியோருடன் டோனி இணைந்தார். டோனி 349 ஆட்டங்களில் 7,001 ரன் எடுத்துள்ளார்.
இந்த போட்டியில் சென்னை அணி வீரர் பிராவோ மிக பெரிய மைக்கல்லை எட்டியுள்ளார். ஐபில் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த மலிங்காவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிராவோ பிடித்துள்ளார். முதல் 5 இடத்தை பிடித்த வீரர்களில் முதல் இடத்தில் பிராவோ 171 விக்கெட்டுகள் 2-வது இடத்தில் மலிங்கா 170 விக்கெட்டுகள். 3-வது இடத்தில் அமித் மிஸ்ரா 166 விக்கெட்டுகள். 4-வது இடத்தில் பியூஸ் சாவ்லா 157 விக்கெட்டுகள். ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. சென்னை அணியினர் தவறவிட்ட கேட்சுகளால் சென்னை அணி தோல்வியை தழுவியது. மேலும் 19-வது ஓவரில் சிவம் துபே 25 ரன்கள் விட்டுக்கொடுத்ததாலும் லக்னோ அணி எளிதாக வெற்றி பெற்றது. என்னதான் தோல்வி அடைந்தாலும் சென்னை அணி வீரர்கள் 2 பேர் சாதனை படைத்துள்ளது ஆறுதலாக உள்ளது.
லக்னோ அணி வீரர் லீவிஸ் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். அவர் 23 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை லீவிஸ் பெறுகிறார்.

லக்னோ அணியின் இளம் வீரரை அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் குட்டி ஏபிடி என புகழாரம் சூட்டியிருந்தார். அதற்கு ஏற்றார்போல் நேற்று பதோனியின் ஆட்டம் இருந்தது. இக்கட்டான சூழலில் குர்ணால் பாண்ட்யாவுக்கு பதிலாக களமிறங்கிய பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தினார். அவர் லீவிஸ்- உடன் சேர்ந்து ஆட்டத்தை முடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார். போட்டியின் போது பதோனி அடித்த ஒரு சிக்சர் சென்னை அணியின் ரசிகை ஒருவரின் தலையை பதம் பார்த்தது.

சிக்சருக்கு வந்த பந்தை அந்த ரசிகை கேட்ச் பிடிக்க முயற்சிக்கும் போது அவரது கையில் பட்டு தலையில் விழும். ஆனால் அந்த ரசிகைக்கு பெரிய அளவில் ஏதும் காயம் ஏற்படவில்லை.
போட்டி முடிந்த பிறகு டோனி மற்றும் கம்பீர் பேசிக் கொண்டிருப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அவர்களுக்கு இடையே ஒரு மோதல் இருப்பது போல அனைவராலும் பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இந்த புகைப்படம் வைரலானது.

டோனி குறித்து கம்பீர் அதிகாமவே கருத்து தெரிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

உள்ளூர் போட்டியின் போது டோனி அணி வெற்றி பெறும். அனைவரும் எதிரணிக்கு கை குலுக்குவது வழக்கம். அப்போது டோனி வரும்போது அதனை கண்டுக்காமல் கம்பீர் செல்வார். இந்த வீடியோவும் அதிகாமவே வைரலானது.
இதையும் படியுங்கள்...கேட்ச்களை தவறவிட்டதால் தோற்றோம்- சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா பாய்ச்சல்
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச்சுகளை தவற விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல் போட்டியில் லக்னோவிடம் வீழ்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாசை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் ஆடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப் புக்கு 210 ரன் குவித்தது.
உத்தப்பா 27 பந்தில் 50 ரன்னும் ( 8 பவுண்டரி , 1 சிக்சர் ), ஷிவம் துபே 30 பந்தில் 49 ரன்னும் (5 பவுண்டரி , 2 சிக்சர் ), மொய்ன் அலி 22 பந்தில் 35 ரன்னும் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அவேஸ்கான், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் 211 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குயின்டன் டி காக் 45 பந்தில் 61 ரன்னும் (9 பவுண்டரி), இவின் லீவிஸ் 23 பந்தில் 55 ரன்னும் ( 6 பவுண்டரி , 3 சிக்சர் ), கேப்டன் லோகேஷ் ராகுல் 26 பந்தில் 40 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர் ) எடுத்தனர். பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டும் , பிராவோ , தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
சென்னை அணி தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்று இருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே. வீரர்களின் பீல்டிங் மோசமாக இருந்தது. பல கேட்ச்சுகளை தவற விட்டனர். குயிண்டன் டி காக் கேட்சை மொய்ன்அலி தவற விட்டார்.
கேட்ச்சுகளை தவற விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-
ராபின் உத்தப்பாவும், ஷிவம்துபேயும் பிரமாதமாக விளையாடினார்கள். எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பீல்டிங்கில் கேட்ச்சுகளை தவற விட்டோம். கேட்ச் பிடித்தால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.
நாங்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். கேட்ச்சுகளை தவற விட்டது. பனி துளி போன்ற காரணங்களால் தோல்வி ஏற்பட்டது.
எங்கள் அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. முதல் 6 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. பந்து வீச்சாளர்கள் திட்டத்தை செயல்படுத்துவது அவசியமாகும்.
இவ்வாறு ஜடேஜா கூறினார்.
சென்னை அணி 3-வது ஆட்டத்தில் பஞ்சாப்கிங்சை ஏப்ரல் 3-ந்தேதி எதிர் கொள்கிறது லக்னோ அணி முதல் வெற்றியை பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்று இருந்தது. லக்னோ 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4-ந்தேதி சந்திக்கிறது.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் - புதிய சாதனை படைத்த பிராவோ
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானம் மற்றும் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானம் ஆகியவற்றில் வருகிற 6-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானம் மற்றும் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானம் ஆகியவற்றில் வருகிற 6-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
இதில் 6 முதல் 23 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.superkingsacademy.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து-அமெரிக்கா, கனடா-ஜிம்பாப்வே, தென் கொரியா-உருகுவே, அர்ஜென்டினா-ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன.
போட்செப்ஸ்ட்ரூம்:
9-வது ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 15 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, ஜிம்பாப்வே, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ‘சி’ பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, தென் கொரியா, உருகுவே, ஆஸ்திரியா, ‘டி’ பிரிவில் ஜெர்மனி, இந்தியா, மலேசியா, வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டிக்கு தகுதி பெற்றிருந்த உக்ரைன் போர் காரணமாக விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து-அமெரிக்கா, கனடா-ஜிம்பாப்வே, தென் கொரியா-உருகுவே, அர்ஜென்டினா-ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன. சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் நாளை வேல்சையும், 3-ந் தேதி ஜெர்மனியையும், 5-ந் தேதி மலேசியாவையும் எதிர்கொள்கிறது.
இதையும் படியுங்கள்...டி20 போட்டியில் 7000 ரன்களை கடந்தார் - எம்.எஸ்.டோனி புதிய சாதனை
ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்கா 2-வது இடத்தில் உள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சென்னை அணியின் பிராவோ ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன்மூலம் 153 இன்னிங்சில் 171 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
இலங்கையின் மலிங்கா 122 இன்னிங்சில் 170 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். 13 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
இதையும் படியுங்கள்...டெல்லி அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் - கலீல் அகமது நம்பிக்கை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் அசத்தல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
லாகூர்:
பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. பென் மெக்டர்மாட் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 89 ரன்னும், லபுஸ்சேன் 59 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹின் அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது வசீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 349 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக ஆடி சதமடித்தனர். இமாம் உல் ஹக் 106 ரன்னிலும், பாபர் அசாம் 114 ரன்னிலும் அவுட்டாகினர். பஹர் சமான் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரிலேயே 4 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற சமனில் உள்ளது.
விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் டி20 போட்டிகளில் 7 ஆயிரம் ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளனர்
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 210 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி 6 பந்துகளில் 1 சிக்சர் உள்பட 16 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் டோனி அனைத்து விதமான டி20 போட்டிகளிலும் சேர்த்து 7 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இந்த சாதனையை படைக்கும் 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பல வீரர்கள் நல்ல பார்மில் உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த அணியின் கேப்டன் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல்.கிரிக்கெட்போட்டியில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டி காக், லீவிஸ் அதிரடி ஆட்டம் காரணமாக லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், இளம் சூழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், சென்னை அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியதை பாராட்டினார். பிஷ்னோய் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் இதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ராகுல் கூறினார்.
இதேபோல் ஆயுஷ் படோனி பேட்டிங் தனித்துவமானது என்றும், அவர் இந்தியாவின் மிகச்சிறந்த கண்டு பிடிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
குயின்டன் டி காக் மற்றும் லூயிஸ் ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதாகவும், இருவரின் வலது மற்றும் இடது கை பேட்டிங் அணிக்கு உதவியதாக இருந்நதாகவும் லக்னோ கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்திருந்தது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் துவக்க வீரர் ராபின் உத்தப்பா அதிபட்சமாக 50 ரன்கள் அடித்தார். ஷிவம் துபே 49 ரன்களும், மொயீன் அலி 35 ரன்களும் எடுத்தனர்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணி வீரர் துவக்க வீரர் குயின்டன் டி காக் 61 ரன்கள் குவித்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்கள் அடித்தார். மணிஷ் பாண்டே 5 ரன்னுக்கும், தீபக் ஹூடா 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், எவின் லூயிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
23 பந்துகளில் 55 ரன்கள் குவித்த அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக களத்தில் இருந்த ஆயுஷ் படோனி 19 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்...டெல்லி அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் - கலீல் அகமது நம்பிக்கை
அதிரடியாக ஆடி லக்னோ பந்துவீச்சாளர்களை திணறடித்த துவக்க வீரர் ராபின் உத்தப்பா, 27 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதம் விளாசினார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் ராபின் உத்தப்பா, அதிரடியாக ஆடி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 27 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதம் விளாசிய உத்தப்பா, ரவி பிஷ்னோய் பந்தில் எல்.பி.டபுள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.

அதிரடியில் மிரட்டிய மொயீன் அலி 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார். அம்பதி ராயுடு 20 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன் அடிக்க, சென்னை அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது.
அதன்பின்னர் ஷிவம் துபேயின் அதிரடி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்ட அவர், 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஜடேஜாவுடன் கைகோர்த்த டோனி முதல் பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஜடேஜா 17 ரன்களில் ஆட்டழந்தார். பிரிட்டோரியஸ் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் டோனியுடன் பிராவோ இணைய, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. டோனி 16 ரன்களுடனும், பிராவோ 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.






