என் மலர்
விளையாட்டு
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் என வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 3 ஆண்டும் பிளேஆப் சுற்றில் இடம் பெற்றது. ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. ஐபிஎல் கோப்பையை இதுவரை ராஜஸ்தான், ஐதராபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகிய அணிகள் மட்டுமே வென்றுள்ளது. இந்த சீசனில் டெல்லி அணி கோப்பையை கைப்பற்றும் என கலீல் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 4 சீசனில் சன்ரைசரஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய கலீல் அகமதுவை ஏலத்தின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5.25 கோடிக்கு வாங்கியது.
டெல்லி அணிக்கான முதல் போட்டியில் கலீல் அகமது மும்பை அணிக்கு எதிராக விளையாடினார். அந்த போட்டியில் கலீல் அகமது 4 ஓவர்களை வீசி 27 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலீல் அகமது கூறியதாவது:-
ரிஷப் பண்ட் ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான அவரின் திட்டம் பந்து வீசுவதில் எனக்கு உதவியாக உள்ளது.
ரிஷப் பண்டை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாக தெரியும். அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான். இரண்டு பேரும் ஒன்றாகதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினோம். அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் வீரர் ஆவார். உங்கள் கேப்டனை நீங்கள் அறிந்தால் அவருடன் பல திட்டங்களை சிறப்பாக திட்டமிடலாம். ரிஷப் பண்ட்-வுடன் மீண்டும் இணைவதில் உற்சாகமாக இருக்கிறேன்.
இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரிஷப் திறமையான கேப்டன் மற்றும் டெல்லி அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...நெய்மர் பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆர்சிபி வீரர் ஹசரங்கா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான்:
ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை பறிக்கொடுத்த பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரையாவது வெல்லும் என்ற முனைப்புடன் விளையாடும்.
11 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம்:-
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஹேட், பென் மெக்டெர்மொட், மார்னஸ் லாபுசென், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்வெப்சன்
11 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் விவரம்:-
ஃபகார் சமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது வாசிம், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஜாஹித் மஹ்மூத்.
கொல்கத்தா அணிக்கு எதிராக ஒவ்வோரு விக்கெட்டை வீழ்த்திய போது களத்தில் வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் ஹசரங்கா விளக்கம் அளித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 4 ஓவரில் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஹசரங்கா ஒவ்வோரு விக்கெட்டுகளை வீழ்த்திய போது புதுவிதமான முறையில் தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இது ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது.
கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் முறை குறித்து ஹசரங்கா கூறியதாவது:-
நான் பிரேசில் மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மனி வீரர்களின் தீவிர ரசிகன். அவர்களது கொண்டாடும் விதத்தை அடிக்கடி பின்பற்றுவேன். எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர் நெய்மர். அவரது ஹேங் லூஸ் கொண்டாட்டத்தைதான் கொல்கத்தா அணிக்கு எதிராக நான் பின்பற்றினேன்.
போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தேன். பனி பொழிவில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் விளையாடச் செல்லும்போது எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் செல்வேன். அதனால்தான் நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...தினேஷ் கார்த்திக்கை டோனியுடம் ஒப்பிட்ட ஆர்சிபி கேப்டன் டு பிளிஸ்சிஸ்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கிறிஸ்டசர்ச்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது.
இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
தென்ஆப்பிரிக்கா ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது.
தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஷப்னம் இஸ்மாயில் 3 விக்கெட்டும், மாரிஹன் காப், மசாபாத கிளாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
294 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடியது. 38 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிக்னான் டு ப்ரீஸ் 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனால் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் ஏப்ரல் 3-ம் தேதி மோத உள்ளது.
இதையும் படியுங்கள்...தினேஷ் கார்த்திக்கை டோனியுடம் ஒப்பிட்ட ஆர்சிபி கேப்டன் டு பிளிஸ்சிஸ்
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசியில் நேரத்தில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் டோனியுடன் டு பிளிஸ்சிஸ் ஒப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் இறுதி கட்டத்தில் உதவியது. இலக்கை எட்டும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்த அவர் கூலாகவும் அமைதியாகவும் விளையாடினார். கடைசி 5 ஓவரில் எம்.எஸ்.டோனி எப்படி விளையாடுவரோ அதுபோல தினேஷ் கார்த்திக் கூலாக விளையாடினார்.
மேலும் கொல்கத்தா அணி வீரர்களின் பேட்டிங் வரிசையை சிதைத்த பந்து வீச்சாளர்கள் ஹர்சல் படேல் மற்றும் ஹசரங்காவுக்கு பாராட்டுக்கள். இது நல்ல வெற்றி. குறைந்த இலக்கை எட்டும் போது நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். எளிதாக நினைத்து விட்டு விட கூடாது. கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.
இவ்வாறு டு பிளிஸ்சிஸ் கூறினார்.
மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்து அசத்தினார்.
கிறிஸ்டசர்ச்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது.
இதன் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கி லாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகியவை தகுதி பெற்று இருந்தன. இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. நேற்று நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 157 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது அரை இறுதி ஆட்டம் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
தென்ஆப்பிரிக்கா ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது.
தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்தார். 92-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 2-வது செஞ்சுரியாகும். டேனிவியாட் 129 ரன்னும், ஷோபியா துங்லே 60 ரன்னும் எடுத்தனர். ஷப்னம் இஸ்மாயில் 3 விக்கெட்டும், மாரிஹன் காப், மசாபாத கிளாஸ் தலா 2 விக்கெட்டும் வழங்கினார்கள்.
294 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 மெய்டன் வீசியதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் வீசிய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
நேற்றைய போட்டியில் சில சுவாரஷ்யமான சம்பவங்களும் வீரர்களின் சாதனைகளும் அரங்கேறி உள்ளது.
சென்னை ரசிகர்களின் பாசத்தை காட்டும் விதமாக நேற்றைய போட்டியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர்-கொல்கத்தா போட்டியில் சென்னை ரசிகர்கள் காட்சி அளித்தனர்.

அவர்கள் ஒரு பேனரை கையில் ஏந்தி வைத்திருந்தனர். அதில் நாங்கள் சென்னை ரசிகர்கள் ஆனால் பாப் டு பிளிஸ்சிஸ்-க்காக வந்திருக்கிறோம் என எழுத்தப்பட்டிருந்தது. இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் பெங்களூர் அணி ரசிகர் ஒருவர் நாளை தேர்வு உள்ள நிலையில் விராட் கோலியை பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் கையில் ஒரு பேனரை வைத்திருந்தார்.

அதில் நாளை எனக்கு தேர்வு ஆனால் கிங் கோலி பார்ப்பதுதான் முக்கியம் என எழுத்தப்பட்டிருந்தது. இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 2 மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் வீசிய இரண்டாவது பவுலர் ஹர்ஷல் ஆவார். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு பெங்களூரு அணியின் முகமது சிராஜ் இதே கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 மெய்டன் வீசியிருந்தார்.
2 போட்டியில் விளையாடிய பெங்களூர் அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 4 சிக்சர் 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பாப் முதல் இடத்தில் உள்ளதையடுத்து அவரிடம் ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டது.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இதே அணியை சேர்ந்த ஹசரங்கா 5 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதனையடுத்து அவரிடம் பர்பில் நிற தொப்பி வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...லக்னோவுடன் இன்று மோதல்- சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை பெறுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதுமுக அணியான லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப் படுகிறது.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 6 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை தங்களது முதல் ஆட் டங்களில் வெற்றி பெற்றன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் தோற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை தங்களது முதல் ஆட்டத்தில் தோற்றன.
ஐ.பி.எல். போட்டியின் 7-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே. அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 131 ரன்னை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதுமுக அணியான லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப் படுகிறது.
கடந்த ஆட்டத்தில் டோனி மட்டுமே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். கேப்டன் ஜடேஜா உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
விசா பிரச்சினையால் மொய்ன் அலி தாமதமாக இந்தியா வந்ததால் முதல் போட்டியில் ஆடவில்லை. ஆல்ரவுண்டரான அவர் சென்னை அணியில் இணைந்து இருப்பது கூடுதல் பலமாகும். சான்ட்னெருக்கு பதிலாக மொய்ன்அலி இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுவார்.
இதேபோல லக்னோ அணியும் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் கடுமையாக போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டன் டி காக் சிறந்த அதிரடி தொடக்க வீரர்கள் ஆவார்கள். ஆயுஷ் பதோனி கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இருந்தார்.
இரு அணி வீரர்களும் முதல் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம் வருமாறு:-
சென்னை : ஜடேஜா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, உத்தப்பா, மொய்ன்அலி, அம்பத்தி ராயுடு, டோனி, ஷிவம் துபே, பிராவோ, ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.
லக்னோ : லோகேஷ் ராகுல் (கேப்டன்), குயின்டன்- டி-காக், லீவிஸ், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, குணால் பாண்ட்யா, ஆண்ட்ரூ டை அல்லது மொஹின் கான், சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ்கான்.
இதையும் படியுங்கள்...இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலக வேண்டும் - மைக்கேல் வாகன்
ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார். ரவிச்சந்திர அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின் 2-வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 4-வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்...ஐசிசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி, ரோகித் சர்மா பின்னடைவு
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் டேவிட் வில்லி, ரூதர்போர்டு ஜோடி 4வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் 25 ரன்னும், உமேஷ் யாதவ் 18 ரன்னும் எடுத்தனர்.
பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்தில் பெங்களூரு
அணியும் தடுமாறியது. கேப்டன் டூ பிளசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத் டக் அவுட்டானார். விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார். டேவிட் வில்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு, ஷாபாஸ் அகமது பொறுப்புடன் விளையாடினர். ரூதர்போர்டு 28 ரன்னிலும், ஷாபாஸ் அகமது 27 ரன்னிலும் அவுட்டானார்.
இறுதியில், பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து, முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
கொல்கத்தா அணியில் அதிகட்பட்சமாக ஆண்ட்ரே ரஸல், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன்கள் சேர்த்தார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
போட்டியின் துவக்கம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய கொல்கத்தா அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. 10 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களே சேர்த்திருந்தது. அதன்பின்னர் சற்று நேரம் அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸல், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சவுத்தி 1 ரன், உமேஷ் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி தரப்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இழந்ததையடுத்து ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
ஜோரூ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஐந்து டி20 போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இதனையடுத்து டெஸ்ட் தொடர் நடந்தது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் நீடிக்க கூடாது என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த வாரம் என்னிடம் வந்து ஆலோசனை கேட்டால் நேர்மையான முறையில் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறுவேன். அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினால் இங்கிலாந்து அணி மோசனமான நிலைக்கு தள்ளப்படும் என நான் நினைக்கவில்லை. இங்கிலாந்து அணி அதிக ரன்களை குவிக்கும் ஒரு மூத்த வீரரை பெறும். மேலும் அவர் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு முன் உதாரணமாக திகழ்வார் என மைக்கேல் வாகன் கூறினார்.
ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27-ல் வெற்றியும் 26 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. வெற்றியின் சராசரி 42.18 ஆகும்.
இதையும் படியுங்கள்...வெற்றியின் மூலம் வார்னேவுக்கு மரியாதை செலுத்திய ராஜஸ்தான்- நேற்றைய போட்டி ஒரு அலசல்






