என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான 50 ஓவர் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் டெல்லி அணியில் இணைய உள்ளார்.
    பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை வென்றதையடுத்து ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார்.

    ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷை டெல்லி அணி 6.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அவருக்கு சர்வதேச போட்டி இருப்பதால் முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத நிலை ஏற்பட்டது. 

    இந்நிலையில் மிட்செல் மார்ஷ் டெல்லி அணியுடன் இணைவார். டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட்டாக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தற்போதைய நியூ சவுத் வேல்ஸ் அணியின் பிசியோதெரப்பியுமான பேட் பர்காட் தனிமைப்படுத்தும் காலத்தில் மிட்செல் மார்ஷ் காயத்தில் இருந்து மீள்வதை நிர்வகித்து கொள்வார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியின் இரண்டாவது பகுதியில் மிட்செல் மார்ஷ் விளையாட வாய்ப்பு உள்ளது.

    பாகிஸ்தான் தொடரில் விளையாடதது மிகுந்த வருத்தமாக உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் அடுத்த தொடருக்காக எதிர் நோக்கி உள்ளேன் என மிட்செல் மார்ஷ் கூறினார்.

    ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய மிக சிறந்த வீரராக மிட்செல் மார்ஷ் வலம் வருகிறார். கடைசியாக நடந்த டி20 உலகக்கோப்பையை வென்றதில் இவரின் பங்கு அதிகமாகவே இருந்தது. இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மார்ஷ் 77 ரன்கள் எடுத்தது வெற்றிக்கு வித்திட்டது.

    டெல்லி அணி முதல் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதாக ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் அணி மோதியது. இதில் ராஜஸ்தான் அணி 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 55 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 149 ரன்கள் எடுத்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

    ஐதராபாத் தரப்பில் மார்க்ராம் 57 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஏ டிவிசன் கைப்பந்து லீக் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி தோல்வி எதையும் சந்திக்காமல் 7 வெற்றியுடன் 21 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து ‘லீக்’ போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

    நேற்று நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் எஸ்.ஆர்.எம். அணி 22-25, 25-15, 25-22, 26-24 என்ற கணக்கில் சுங்க இலாகாவையும், ஐ.ஓ.பி. 25-23, 25-22, 25-16 என்ற கணக்கில் இந்தியன் வங்கியையும் தோற்கடித்தன.

    எஸ்.ஆர்.எம். அணி தோல்வி எதையும் சந்திக்காமல் 7 வெற்றியுடன் 21 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஐ.ஓ.பி. 6 வெற்றி, 1 தோல்வியுடன் 18 புள்ளியுடன் 2-வது இடத்தை பிடித்தது. தமிழ்நாடு போலீஸ், சுங்க இலாகா, இந்தியன் வங்கி, டி.ஜி. வைஷ்ணவா, செயிண்ட் ஜோசப்ஸ், லயோலா முறையே 3 முதல் 8-வது இடங்களை பிடித்தன.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க சேர்மன் எஸ்.என்.ஜெயமுருகன் தலைமை தாங்கினார். வருமானவரி கூடுதல் இயக்குனர்கள் பி.திவாகர், பி.எஸ்.சிவசங்கரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.ஆர்.எம் அணிக்கு ஆச்சி கோப்பையுடன் ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு ரோமா கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. ரோமா குழும நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ.ராஜன், ஜி.பி.ஆர். மெட்டல்ஸ் நிறுவன இயக்குனர் விக்ரம், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன், செயல் துணைத்தலைவர் பி.ஜெகதீசன்,பொருளாளர் ஏ.பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    உலகத்தில் உள்ள எந்த மைதானமாக இருந்தாலும் சஞ்சு சாம்சனால் சிக்சர் விளாச முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.
    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 5 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். இதில் இந்நிலையில் சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.

    சஞ்சு சாம்சன் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாம்சனின் ஆட்டம் அருமையாக இருந்தது. உலகத்தில் உள்ள எந்த மைதானமாக இருந்தாலும் அவரால் சிக்சர் அடிக்க முடியும். மேலும் அவரது ஷாட் தேர்வு மிகவும்  சிறப்பாக இருந்தது.

    சாம்சன் கூடுதலாக 5 ஓவர் களத்தில் இருந்திருந்தால் ராஜஸ்தான் அணி 230 ரன்கள் வரைக்கு எடுத்திருக்க முடியும். சாம்சன் - படிக்கல் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தது. பட்லர், ஹெட்மையர் ஆகியோரின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

    ராஜஸ்தான் அணி ஏப்ரல் 2-ந் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது.

    ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது. ராஜஸ்தான் அணியில் 3 விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தினர்.

    ஐபிஎல் ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 6.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ராஜஸ்தான் அணிக்கான முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாஹல் அசத்தி உள்ளார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஓய்வு அறைக்கு சென்று கொண்டிருக்கும் போது அணியின் பீல்டிங் பயிற்சியாளர் சாஹலை கிண்டல் செய்திருப்பார். அந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அதில் பயிற்சியாளர் சஹாலை பார்த்து 10 ரூபாய்க்கு பெப்சி யூசி பாய் செக்ஸி என கிண்டலாக பேசியிருப்பார். அதற்கு சாஹல் சிரித்து கொண்டே செல்வார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
    புனே:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 3 நாட்கள் நடந்த 4 ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணி அதாவது சேசிங் செய்த அணி வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதிய நேற்றைய ஆட்டத்தில் தான் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றியை பெற்றுள்ளது.

    புனேயில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது.

    கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) , படிக்கல்‌ 29 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 13 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நடராஜன், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஷெப்பர்டு தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 61 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மார்க்ராம் அதிகபட்சமாக 41 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி 2 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 14 பந்தில் 40 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டும் , போல்ட் , பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    நாங்கள் நினைத்ததை விட இந்த ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பிச்சுக்கு ஏற்ற வகையில் வேகப்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    நீண்ட கால இலக்கு எதுவும் இல்லை. இயன்ற அளவுக்கு அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். அணியின் உரிமையாளர்கள் எங்களை நம்புகிறார்கள். நாங்களும் அதற்கு ஏற்ற வகையில் திறமையை வெளிப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “தொடக்கத்தில் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். கடைசியில் ரன்களை கொடுத்து நெருக்கடிக்கு ஆளானோம். பேட்டிங்கில் நாங்கள் கற்க வேண்டி உள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்கள் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார்.

    ராஜஸ்தான் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 2-ந் தேதியும், ஐதராபாத் அணி லக்னோவை 4-ந் தேதியும் எதிர் கொள்கின்றன.

    ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்த்து 20 சிக்சர்கள் பறக்கவிட்டனர். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டும் 14 சிக்சர்கள் அடித்துள்ளனர். அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன்  5 சிக்சர்கள் விளாசினார்.

    இரு அணிகளின் பவுண்டரி (28) மற்றும் சிக்சர்(20) மூலம் அடித்த ரன்கள் 232 ஆகும். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் பவர் பிளேயில் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனை ஐதராபாத் அணி படைத்துள்ளது. பவர் பிளேயில் 14 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

    இந்த போட்டியில் 2 முறை விக்கெட்டில் இருந்து தப்பிய ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடந்துள்ளார். ராஜஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டி20 போட்டியில் சாஹல் 250 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    விக்கெட்டை வீழ்த்திய போது அவரது பெண் தோழியை நோக்கி சாஹல் முத்தத்தை பறக்கவிடுவார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் பாணியில் தற்போது சாஹலும் முத்ததை பறக்கவிட்டிருக்கிறார்.

    சாஹலின் பெண் தோழி

    இந்த போட்டியில் 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர். வாஷிங்டன் சுந்தர், நடராஜன், அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 3 பேரும் பந்து வீச்சில் அதிக தாக்கம் செலுத்தவில்லை. வாஷிங்டன் சுந்தர் மட்டும் பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார்.

    ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டில் ரசிகர்கள் அதிக பேருக்கு சந்தேகம் இருந்திருக்கும். பிரதிஷ் கிருஷ்ணா வீசிய பந்தில் வில்லியம்சன் பேட்டில் உரசி கீப்பரிடம் சென்றது. அதனை பிடிக்க தவறி அவரது கையில் பட்டு வெளியேறிய பந்தை சிலிப்பில் இருந்த படிக்கல் கேட்ச் பிடிப்பார். அதில் அந்த பந்து தரையில் படுவது போலவும் இருக்கும் விரலில் படுவது போலவும் இருக்கும். இதனை 3-வது அம்பயர் பார்த்து உடனே தனது முடிவை தெரிவிப்பார். இது ரசிகர்களிடையே கேள்வி கூறியாகவே உள்ளது.

    ராஜஸ்தான் அணி வீரர்கள் படிக்கல்-சாம்சன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தனர். ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர்-ஷெப்பர்ட் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். 

    நேற்றைய போட்டியின் முக்கிய நிகழ்வாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவானும் ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் எப்போதும் முதல் அரசர் என எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.  அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது படம் வைக்கபட்டிருந்தாக அணி நிர்வாகம் தெரிவித்தது.

    பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    வெலிங்டன்:

    பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதின. மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.

    தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார். இதனையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த 

    45 ஓவரில் 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க வீராங்கனை டியான்ட்ரா டாட்டின்(34), ஹேலி மேத்யூஸ்(34), டெய்லர் (48) ஆகியோர் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை எடுத்தனர். 

    அடுத்து வந்த வீராங்கனை சொற்ப ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    நாளை மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏப்ரல் 3 தேதி நடக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடம் பலபரீட்சை நடத்தும்.

    ஆஸ்திரேலிய அரசு சார்பில் வார்னேவுக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்ற போது கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் தனியார் விமானத்தில் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் இறுதிசடங்குகளை செய்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் அவருக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் தான் வார்னே தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இலவசமாக 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தேவை அதிகமாக இருந்ததால் மேலும் 15 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள், வார்னே குடும்பத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.

    வார்னேவுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வீடியோ பதிவு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ‘மற்ற சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருந்து வார்னே மிகவும் வித்தியாசமானவர். விக்கெட் வீழ்த்தினாலும், வீழ்த்தாவிட்டாலும் ஒவ்வொரு பந்து வீசும் போது, கடுமையான போட்டியாளராகவே இருப்பார். அவரை மிகவும் தவற விடுகிறேன். கடந்த ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு லண்டன் சென்ற போது அவரை சந்தித்தேன். இருவரும் கோல்ப் விளையாடினோம். ரொம்ப ஜாலியாக, நகைச்சுவையாக பேசினார். அவர் பக்கத்தில் இருக்கும் போது சலிப்பே இருக்காது. இது தான் அவருடன் எனது கடைசி சந்திப்பு’ என்று தெண்டுல்கர் குறிப்பிட்டார்.

    மகளிர் உலகக்கோப்பை அரைஇறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார்.
    வெலிங்டன்:

    12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் ‘லீக்‘ முடி வில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் வெலிங்டனில் இன்று நடந்தது.

    இதில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.

    தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார். 93-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 4-வது சதமாகும். அலிஷா ஹீலி 107 பந்தில் 129 ரன்னும் (17 பவுண்டரி, 1 சிக்சர்), மற்றொரு தொடக்க வீராங்கனை ராச்செல் கொய்னெஸ் 85 ரன்னும், மூனி 43 ரன்னும் எடுத்தனர்.

    45 ஓவரில் 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.

    ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கடந்த 2009-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்பிளேயில் குறைந்த ரன்கள் அடித்திருந்தது.
    புனே:

    ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 5-வது ஆட்டம் புனேயில் நேற்று நடைபெற்றது.
     
    முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதல் திணறியது. கேன் வில்லியம்சன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோர் டக் அவுட்டாகினர். இதனால் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இது ஐ.பி.எல். சீசனில் பவர் பிளேயில் மிகவும் குறைந்த ஸ்கோர் இதுவாகும். 

    முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கெதிராக ராஜஸ்தான் அணி பவர்பிளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது.

    பவர்பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த அணிகளின் விவரம்:

    2022 - ஐதராபாத் - 14/3, எதிரணி - ராஜஸ்தான்
    2009 - ராஜஸ்தான்-14/2, எதிரணி - ஆர்சிபி
    2011 - சென்னை -15/2, எதிரணி - கொல்கத்தா
    2015 - சென்னை - 16/1, எதிரணி - டெல்லி
    2019 - சென்னை -16/1, எதிரணி- ஆர்சிபி 

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 101 ரன் மற்றும் 2 விக்கெட் எடுத்ததால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    லாகூர்:

    ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது.
    தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 101 ரன்னில் அவுட்டானார். பென் மெக்ட்அர்மாட் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கிரீன் அதிரடியாக ஆடி 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப், ஜாஹித் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து சதமடித்தார். அவர் 103 ரன்னில் அவுட்டானார். அவருக்கு கேப்டன் பாபர் அசாம் ஒத்துழைப்பு தந்து அரை சதமடித்து, 57 ரன்னில் வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில்  ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 45.2 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்வெப்சன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ×