என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜோஸ் பட்லர் 28 பந்தில் 35 ரன்களும், தேவ் தத் படிக்கல் 29 பந்தில் 41 ரன்களும், ஹெட்மையர் 13 பந்தில் 32 ரன்களும் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேயில் நடைபெற்று இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே பட்லர் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால், புவி அதை நோ-பாலாக வீச பட்லர் டக்அவுட்டில் இருந்து தப்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்தில் 35 ரன்களும், ஜெய்ஸ்வால் 26 பந்தில் 20 ரன்களும் அடித்தனர்.

    சஞ்சு சாம்சன்

    அதன்பின் வந்த சாம்சன் 27 பந்தில் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 29 பந்தில் 41 ரன்களும் அடிக்க ராஜஸ்தான் ஸ்கோர் 200 ரன்னைத் தாண்டுவது உறுதியானது. ஹெட்மையர் 13 பந்தில் 32 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 210 ரன்கள் குவித்தது. 

    பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்து வருகிறது.
    கேமரூன் கிரீன 30 பந்தில் 40 ரன்களும், பென் மெக்டெர்மோட் 70 பந்தில் 55 ரன்களும் அடிக்க, டிரவிட் ஹெட் 72 பந்தில் 101 ரன்கள் குவித்தார்.
    பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-0 எனக் கைப்பற்றியது.

    இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கடாஃபியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 பந்தில் 12 பவுணடரி, 3 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஆரோன் பிஞ்ச் 23 ரன்னில் ஏமாற்றம் அடைந்தாலும், பென் மெக்டெர்மோட் 70 பந்தில் 55 ரன்கள் அடித்தார். கேமரூன் கிரீன் 30 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.

    பாகிஸ்தான் தரப்பில் ஹரிஷ் ராஃவ், ஜஹித் மெஹ்மூத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 314 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
    புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேயில் நடைபெற்ற இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆடுகளத்தில் புற்கள் குறைவாக உள்ளது. பனி முக்கிய பங்கு வகிக்கும். அதை நாங்கள் பயன்படுத்த முயற்சி செய்வோம் என கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

    எங்கள் அணிக்கு இன்று சிறப்பான நாள். ஏழு வீரர்கள் அறிமுகமாகிறார்கள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    ராஜஸதான் ராயல்ஸ் அணி:

    1. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2. ஜோஸ் பட்லர், 3. தேவ்தத் படிக்கல், 4. சஞ்சு சாம்சன், 5. ஷிம்ரன் ஹெட்மையர், 6. ரியான் பராக், 7. அஸ்வின், 8. நாதன் கவுல்டர் நைல், 9. சாஹல், 10. டிரென்ட் பவுல்ட், 11. பிரசித் கிருஷ்ணா.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

    1. அபிஷேக் ஷர்மா, 2. ராகுல் திரிபாதி, 3. கேன் வில்லியம்சன், 4. நிக்கோலஸ் பூரன், 5. எய்டன் மார்கிராம், 6. அப்துல் சமாத், 7. வாஷிங்டன் சுந்தர், 8. ஷெபெர்ட், 9. புவி, 10. டி. நடராஜன், 11. உம்ரான் மாலிக்.
    ஐசிசி பெண்கள் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், கோசுவாமி இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளனர்.

    பெண்கள் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்த மிதாலி ராஜ், ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்ஸ் மற்றும் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 686 புள்ளிகளுடன் 6 இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கோசுவாமி இரண்டு இடங்கள் முன்னேறி 663 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார். தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 669 புள்ளிகளுடன் 10 இடத்தை பிடித்துள்ளார்.

    ஐசிசி பெண்கள் ஒருநாள் போட்டி தரவரிசை

    தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் லாரா வால்வார்ட் இரண்டு இடங்கள் முன்னேறி, ஆஸ்திரேலிய ஜோடியான மெக் லனிங் மற்றும் பெத் மூனியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பிரெண்டன் வில்சன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. 

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பிரெண்டன் வில்சன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக விக்கெட் கீப்பர் ஜோஷ் விலகி உள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக உள்ளது.

    ஏற்கனவே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டியில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார்.
    ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டு ஆடி வருகிறார். லக்னோ அணி முதல் ஆட்டத்திலேயே குஜராத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

    கேஎல் ராகுல் கேப்டன் பதவியில் இப்படி ஒரு கெட்ட நேரமா? என அனைவரும் சிந்திக்கும் வகையில் அவரது கேப்டன் பதவியின் ராசி அவரை துரத்தி வருகிறது.

    கேஎல் ராகுல் கேப்டன் பதவியை ஏற்று முதல் போட்டி தோல்வியாகவே உள்ளது. 2010-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக ராகுல் பதவியேற்றார். அவர் தலைமையிலான பஞ்சாப் அணி முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. 

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடத நிலையில் பொறுப்பு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார்.

    கேஎல் ராகுல் பொறுப்பேற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனையடுத்து ஒருநாள் போட்டியிலும் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டியில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். 

    தற்போது லக்னோவுக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்ட முதல் போட்டியிலும் அவர் தோல்வியையே கண்டுள்ளார். 

    முதல் போட்டியில் தோல்வி அவரை விடாது துரத்தி கொண்டே இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 10 வருடங்களாக முதல் போட்டியில் தோல்வி அடைவது போல கேஎல் ராகுலின் கேப்டன் பதவி அவரை துரத்தி வருகிறது.

    ஐபிஎல் ஏலத்தில் 3 வருடங்கள் ஏலம் போகாத நிலையில் ஏலம் எடுத்த லக்னோ அணிக்கு நன்றி உள்ளவனான இருப்பேன் என இளம் வீரர் பதோனி தெரிவித்துள்ளார்.
    குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த இளம் வீரர் பதோனி தனக்கு ஆதரவளித்த கவுதம் காம்பீருக்கு நன்றி தெரிவித்தார்.

    இது குறித்து பதோனி கூறியதாவது:-

    கம்பீர் எனக்கு நிறைய ஆதரவளித்தார். எனது இயல்பான விளையாட்டை விளையாடுமாறும் நீங்கள் நல்ல ஸ்கோரை எடுப்பீர்கள் எனவும் அவர் கூறியதாக போட்டி முடிந்த பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார். 

    மேலும் அவர் என்னிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டியதில்லை. அதற்கு மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினார்.

    3 ஆண்டுகளாக இவரை எந்த அணியும் ஏலம் எடுக்காத நிலையில் தற்போது தொடக்க விலையான 20 லட்சத்திற்கு லக்னோ அணி பதோனியை ஏலம் எடுத்தது. 

    நான் இரண்டு முதல் மூன்று அணிகளுக்கான சோதனைகளுக்குச் சென்றுள்ளேன், ஆனால் இறுதியில் யாரும் என்னை ஏலத்தில் எடுக்கவில்லை. எனவே, என்னை எடுத்ததற்காக லக்னோவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று பதோனி கூறினார். 

    கடந்த மூன்று வருடங்கள் போராட்டமாகத்தான் இருந்தது. டெல்லி அணியிலும் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சீசனில் மட்டுமே விளையாடி ஒரே ஒரு முறை பேட்டிங் செய்தேன். எனது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளேன். நான் அதிக ஷாட்களை பழகி ஆடி வருகிறேன். இது எனக்கு மிகவும் உதவியது என்று அவர் கூறினார்.

    ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியும் குஜராத் அணியும் மோதிய ஆட்டம் குறித்த சில தகவலை காண்போம்.
    ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ-குஜராத் மோதின. இதில் கடைசி ஓவரில் குஜராத்  அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

    குஜராத் அணியில் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ வேட் ஏறக்குறைய 11 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் களமிறங்கி உள்ளார். வேட் கடைசியாக 2011-ம் ஆண்டில் டெல்லி அணியிலும் புனே வாரியர்ஸ் அணியிலும் இடம் பிடித்திருந்தார். ஒரு வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு இடையேயான மிக நீண்ட இடைவெளி இதுவாகும். 

    லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் 63 போட்டிகளில் விளையாடி 2500 ரன்களை எடுத்துள்ளார். பேட்டிங்கில் இவரது சராசரி 52.3 ஆகும். தொடர்ச்சியாக நல்ல ஸ்கோர்களை எடுத்த இவர் நேற்றைய ஆட்டத்தின் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளார். 63 போட்டிகளில் விளையாடிய இவர் முதல் முறையாக கோல்டன் டக் முறையில் வெளியேறி உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 2-வது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார்.

    லக்னோ அணியின் புதுமுக இளம் வீரரான பதோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் முதல் ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்த மூன்றாவது இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 22 வயதான பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    நியூசிலாந்து அணி வீரர் பெர்குசன் புயல் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். அவர் ஓவரில் பவுண்டரி சிக்சர் என பறக்க விட்டார். குறிப்பாக 147 வேகத்தில் வீசிய பந்தை பதோனி பவுண்டரியாகவும் 148 வேகத்தில் வீசிய பந்தை சிக்சராக மாற்றினார். இளங்கன்று பயமறியாது என்பது போல பதோனியின் ஆட்டம் இருந்தது. 

    நடந்து முடிந்த 4 போட்டிகளிலுமே டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கை தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளையாட்டு வீரர்கள் தொடர்பாக பாஜக உறுப்பினர் ஹேமாமாலினி கேள்வி எழுப்பினார். 

    இதற்கு பதில் அளித்த மத்திய விளையாட்டுத் துறை இணை மந்திரி நிசித் பிரமானிக், விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, ஒரு மாநிலம், ஒரே விளையாட்டு கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியதாக கூறினார். 

    எனினும் இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கை குறித்து மத்திய அரசு உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கும் என்றும் இணை மந்திரி நிசித் பிரமானிக் குறிப்பிட்டார்.

    ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
    புனே:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியில் கிளைன் பிலிப்ஸ், நிகோலஸ் பூரன், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, ரவிகுமார் சமார்த் ஆகியோர் பேட்டிங்கில் பிரகாசிக்ககூடியவர்கள். வேகப்பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர்குமார், ‘யார்க்கர்’ வீசுவதில் கில்லாடியான டி.நடராஜன், இளம் அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் எதிரணிக்கு சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். சஞ்சு சாம்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வேகப்பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனியும், சுழற்பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹலும் உள்ளனர். 

    இரண்டு அணிகளும் போட்டியை வெற்றியுடன் தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 8-ல் ஐதராபாத்தும், 7-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போரட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீரரான பதோனி அரை சதம் அடித்ததன் மூலம் முதல் ஐபிஎல் போட்டியிலேயே 50 ரன்களுக்கு மேல் குவித்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
    மும்பை வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இளம் வீரரான பதோனி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    22 வயதான பதோனி முதல் ஐபிஎல் போட்டியிலேயே அரை சதம் அடித்த மூன்றாவது இந்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 

    முதல் வீரராக டெல்லி அணியில் இடம் பிடித்த கோசுவாமி 19 வயதில் அரை சதம் அடித்தார். 2-வதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்த படிக்கல் 20 வயதில் அரை சதம் அடித்தார். 3-வதாக பதோனி 22 வயதில் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 

    ஐபில் முதல் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர்கள் விபரம்

    முதல் ஐபிஎல் போட்டியிலேயே 50 ரன்களுக்கு மேல் குவித்தவர்களின் பட்டியல்:-

    வீரர்பெயர்

    எடுத்தரன்

    அணி

    ஆண்டு

    மெக்கல்லம்

    158

    கொல்கத்தா

    2008

    மைக்ஹசி

    116

    சென்னை

    2008

    மார்ஸ்

    84

    பஞ்சாப்

    2008

    ஸ்மித்   

    71

    ராஜஸ்தான்

    2008

    ஹோப்ஸ்

    71

    பஞ்சாப்

    2008

    அஸ்னோத்கர்

    60

    ராஜஸ்தான்

    2008

    ஷா

    58

    கொல்கத்தா

    2010

    கம்பீர் 

    58

    டெல்லி

    2008

    படிக்கல்

    56

    பெங்களூர்

    2020

    ராயுடு

    55

    மும்பை

    2010

    சங்ககரா

    54

    பஞ்சாப்

    2008

    கோலிங்வுட்

    54

    டெல்லி

    2010

    வித்யுத்           

    54

    சென்னை

    2008

    பில்லிங்ஸ்

    54

    டெல்லி

    2016

    பதோனி

    54

    லக்னோ

    2022

    ஷிகர்தவான்

    52

    டெல்லி

    2008

    கோசுவாமி  

    52

    பெங்களூர்

    2008

    வார்னர்         

    51

    டெல்லி

    2009

    லீவி

    50

    மும்பை

    2012

    கேதர் ஜாதவ்

    50

    டெல்லி

    2010


    மகளிர் உலகக்கோப்பை போட்டிக்கான அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை மோதுகிறது.
    வெலிங்டன்:

    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் ‘லீக்‘ முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (30-ந்தேதி) நடக்கிறது. இதில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    ×