search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேஎல் ராகுல்
    X
    கேஎல் ராகுல்

    முதல் கேப்டனும், முதல் தோல்வியும் - ராகுலை சுழற்றி அடிக்கும் கெட்ட நேரம்

    ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டியில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார்.
    ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டு ஆடி வருகிறார். லக்னோ அணி முதல் ஆட்டத்திலேயே குஜராத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

    கேஎல் ராகுல் கேப்டன் பதவியில் இப்படி ஒரு கெட்ட நேரமா? என அனைவரும் சிந்திக்கும் வகையில் அவரது கேப்டன் பதவியின் ராசி அவரை துரத்தி வருகிறது.

    கேஎல் ராகுல் கேப்டன் பதவியை ஏற்று முதல் போட்டி தோல்வியாகவே உள்ளது. 2010-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக ராகுல் பதவியேற்றார். அவர் தலைமையிலான பஞ்சாப் அணி முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. 

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடத நிலையில் பொறுப்பு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார்.

    கேஎல் ராகுல் பொறுப்பேற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனையடுத்து ஒருநாள் போட்டியிலும் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டியில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். 

    தற்போது லக்னோவுக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்ட முதல் போட்டியிலும் அவர் தோல்வியையே கண்டுள்ளார். 

    முதல் போட்டியில் தோல்வி அவரை விடாது துரத்தி கொண்டே இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 10 வருடங்களாக முதல் போட்டியில் தோல்வி அடைவது போல கேஎல் ராகுலின் கேப்டன் பதவி அவரை துரத்தி வருகிறது.

    Next Story
    ×