search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேஎல் ராகுல்
    X
    கேஎல் ராகுல்

    மோசமான சாதனை படைத்த ராகுல்- நேற்றைய போட்டியின் ஒரு அலசல்

    ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியும் குஜராத் அணியும் மோதிய ஆட்டம் குறித்த சில தகவலை காண்போம்.
    ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ-குஜராத் மோதின. இதில் கடைசி ஓவரில் குஜராத்  அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

    குஜராத் அணியில் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ வேட் ஏறக்குறைய 11 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் களமிறங்கி உள்ளார். வேட் கடைசியாக 2011-ம் ஆண்டில் டெல்லி அணியிலும் புனே வாரியர்ஸ் அணியிலும் இடம் பிடித்திருந்தார். ஒரு வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு இடையேயான மிக நீண்ட இடைவெளி இதுவாகும். 

    லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் 63 போட்டிகளில் விளையாடி 2500 ரன்களை எடுத்துள்ளார். பேட்டிங்கில் இவரது சராசரி 52.3 ஆகும். தொடர்ச்சியாக நல்ல ஸ்கோர்களை எடுத்த இவர் நேற்றைய ஆட்டத்தின் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளார். 63 போட்டிகளில் விளையாடிய இவர் முதல் முறையாக கோல்டன் டக் முறையில் வெளியேறி உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 2-வது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார்.

    லக்னோ அணியின் புதுமுக இளம் வீரரான பதோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் முதல் ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்த மூன்றாவது இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 22 வயதான பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    நியூசிலாந்து அணி வீரர் பெர்குசன் புயல் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். அவர் ஓவரில் பவுண்டரி சிக்சர் என பறக்க விட்டார். குறிப்பாக 147 வேகத்தில் வீசிய பந்தை பதோனி பவுண்டரியாகவும் 148 வேகத்தில் வீசிய பந்தை சிக்சராக மாற்றினார். இளங்கன்று பயமறியாது என்பது போல பதோனியின் ஆட்டம் இருந்தது. 

    நடந்து முடிந்த 4 போட்டிகளிலுமே டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×