என் மலர்
விளையாட்டு

தேவ்தத் படிக்கல்
ஐ.பி.எல். 2022: ஐதராபாத்துக்கு 211 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜோஸ் பட்லர் 28 பந்தில் 35 ரன்களும், தேவ் தத் படிக்கல் 29 பந்தில் 41 ரன்களும், ஹெட்மையர் 13 பந்தில் 32 ரன்களும் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேயில் நடைபெற்று இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே பட்லர் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால், புவி அதை நோ-பாலாக வீச பட்லர் டக்அவுட்டில் இருந்து தப்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்தில் 35 ரன்களும், ஜெய்ஸ்வால் 26 பந்தில் 20 ரன்களும் அடித்தனர்.

அதன்பின் வந்த சாம்சன் 27 பந்தில் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 29 பந்தில் 41 ரன்களும் அடிக்க ராஜஸ்தான் ஸ்கோர் 200 ரன்னைத் தாண்டுவது உறுதியானது. ஹெட்மையர் 13 பந்தில் 32 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 210 ரன்கள் குவித்தது.
பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்து வருகிறது.
Next Story






