search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நிசித் பிரமானிக், மக்களவை (கோப்பு படம்)
    X
    நிசித் பிரமானிக், மக்களவை (கோப்பு படம்)

    ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கையை ஏற்றுக் கொள்வது குறித்த ஆலோசனை- மத்திய அரசு தகவல்

    ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கை தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளையாட்டு வீரர்கள் தொடர்பாக பாஜக உறுப்பினர் ஹேமாமாலினி கேள்வி எழுப்பினார். 

    இதற்கு பதில் அளித்த மத்திய விளையாட்டுத் துறை இணை மந்திரி நிசித் பிரமானிக், விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, ஒரு மாநிலம், ஒரே விளையாட்டு கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியதாக கூறினார். 

    எனினும் இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கை குறித்து மத்திய அரசு உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கும் என்றும் இணை மந்திரி நிசித் பிரமானிக் குறிப்பிட்டார்.

    Next Story
    ×