என் மலர்tooltip icon

    விளையாட்டு

    50-வது தேசிய சீனியர் பெண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    50-வது தேசிய சீனியர் பெண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக பெண்கள் அணியை, தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்க செயலாளர் எம்.சிவகுமார் அறிவித்துள்ளார். அணி வருமாறு:-

    ஐஸ்வர்யா, மைதிலி, கே.சங்கவி, டி.ரம்யா, ஏ.மேனகா தேவி, பி.ஸ்வேதா, எம்.தீபிகா, ஏ.அம்சா, ஆர்.உஷா நந்தினி, எஸ்.லட்சுமி, எல்.சசிகலா, எம்.கயல்விழி, எஸ்.ஜோதி, எஸ்.சவுந்தர்யா, என்.முத்துஸ்ரீ அபிராமி, வி.கிருத்திகா, எஸ்.யாழிசை, எம்.ஆர்.ஸ்ரீவர்ஷா.

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா-டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது.
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) ஜோடி 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் முதல் நிலை இணையான குரோஷியாவின் மேட் பாவிக்-நிகோலா மெக்டிக்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

    2010-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் தீபிகா குமாரி முதல்முறையாக அந்த போட்டியை தவறவிடுகிறார்.
    சோனிபட்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய வில்வித்தை அணி தேர்வுக்கான தகுதி சுற்று போட்டிகள் அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள சாய் மையத்தில் நடந்தது. இதில் இறுதி தகுதி சுற்றில் 3 ரவுண்டுகளில் இரண்டில் தோல்வியை சந்தித்த உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ஆசிய போட்டிக்கான இந்திய அணிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். 

    2010-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் தீபிகா குமாரி முதல்முறையாக அந்த போட்டியை தவறவிடுகிறார். ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் அதற்கு முன்பு நடைபெறும் மூன்று உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தருண்தீப் ராய், ஜெயந்தா தலுத்கர், நீரஜ் சவுகான், சச்சின் குப்தா (ஆண்கள் ரிகர்வ் பிரிவு), ரிதி ஹோர், கோமளிகா பாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் (பெண்கள் ரிகர்வ் பிரிவு) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

    உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் ஜூலை மாதத்தில் மீண்டும் ஒரு முறை தகுதி சுற்று போட்டி நடத்தப்படும். அதில் தீபிகா குமாரி மற்றும் அவரது கணவர் அதானு தாஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
    மும்பை:

    லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அபினவ் மனோகர், அவேஷ்கானின் பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து தனது அணியின் வெற்றியை எளிதாக்கினார்.  

    போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்த குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    எதிர்காலத்தில் அபினவ் மனோகரைப் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்படுவீர்கள். அவரது திறமை குறித்து மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒருவர். ராகுல் தெவாடியாவும் உணர்வுபூர்வமானவர். 

    பெரும்பாலும் நான் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வேன், ஏனென்றால் மற்றவர்கள் சுதந்திரமாக விளையாடுவதற்காக, அழுத்தமான சூழலுக்கு எனது அனுபவத்தை பயன்படுத்துவேன். 

    நாங்கள் ஒரு அணியாக இணைந்து வெற்றி பெற விரும்புகிறோம், யாரும் மற்றவர் பங்களிப்பை பறிக்க முடியாது. இது சரியான ஆட்டம். வெற்றியின் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம். 

    ஷமி புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்தினார். அவர் எங்களை ஒரு சிறந்த தொடக்கத்திற்கு கொண்டு வந்தார்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல் கட்டமாக 54 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்.
    புதுடெல்லி:

    கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. 

    2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளன.
     
    இந்நிலையில், தலைநகர் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இரண்டாம் கட்டமாக நேற்று நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

    இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

    லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 55 ரன், ஆயுஷ் பதோனி 54 ரன் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் எடுத்தார். வருண் ஆரோன் 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 4 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 28 பந்தில் ஒரு சிகசர், 5 பவுண்டரி உள்பட 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 30 ரன்னில் வெளியேறினார். 

    குஜராத் அணி ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா அதிரடியாக ஆடினர். மில்லர் 30 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான  ரன்களை எடுத்து ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
    தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் லக்னோ அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்த நிலையில், தீபக் ஹூடா (55 ரன்கள்), ஆயுஷ் பதோனி (54 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    குஜராத் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் எடுத்தார். வருண் ஆரோன் 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.
    சுவிஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார் என முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தனது ஆதிக்கம் மிகுந்த அபார ஆட்டத்தால் சுவிஸ் ஓப்பன் 300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்து விசையாக விளங்க எனது வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பனி துளி காரணமாக 2-வது பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்தது.

    நேற்று 2 ஆட்டங்கள் நடந்தது. முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 206 ரன் இலக்கை எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை தோற்கடித்தது.

    முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. கேப்டன் டு பெலிசிஸ் 57 பந்தில் 88 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), விராட் கோலி 29 பந்தில் 41 ரன்னும் (1பவுண்டரி , 2 சிக்சர் ), தினேஷ் கார்த்திக் 14 பந்தில் 32 ரன்னும் ( 3 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது.

    பனுகா ராஜபக்சே 22 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிகர்தவான் 29 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மயங்க் அகர்வால் 24 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஒடியன் சுமித் 8 பந்தில் 25 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), தமிழக வீரர் ஷாருக்கான் 20 பந்தில் 24 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் கூறியதாவது:-

    வெற்றிக்கான 2 புள்ளிகள் மிகவும் முக்கியமானது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நாங்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம்.

    பனி துளி காரணமாக 2-வது பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    பெங்களூர் அணிக்கு கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் வரை கொடுத்து விட்டோம். எங்கள் வீரர்கள் திறமையை சரியான முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்.

    தோல்வி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் டுபெலிசிஸ் கூறும்போது, “10 ரன் இருக்கும் போது ஒடியன் சுமித் கேட்சை தவறவிட்டோம். அவர் உண்மையிலேயே மிகவும் சிறந்த அதிரடி வீரர் ஆவார். வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது அவசியமாகும். கேட்ச்கள்தான் ஆட்டத்தை வெற்றி பெற வைக்கிறது” என்றார்.

    பஞ்சாப் அணி 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை ஏப்ரல் 1-ந் தேதியும், பெங்களூர் அணி அடுத்த ஆட்டத்தில் 30-ந் தேதி கொல்கத்தாவையும் எதிர்கொள்கிறது. 
    டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

    மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் என்ற முறையில் ரோகித்சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 

    நடப்பு சீசனில் 2-வது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரியில் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
    புதுடெல்லி:

    சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர்.

    இதில், பி.வி.சிந்து, 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இந்நிலையில், பி.வி.சிந்து பெற்ற வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சுவிஸ் ஓபன் 2022ல் வெற்றி பெற்றமைக்காக சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவரது வெற்றிகள் இந்தியாவின் இளைய சமூகத்தினருக்கு ஊக்கம் ஏற்படுத்தும். வருங்காலத்திலும் அவரது முயற்சிகளுக்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஜோஷ்வா சில்வா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    கிரெனடா:

    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனாடாவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷகிப் 49 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 31 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட், கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வா சதமடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டோன், சாகிப் மகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 

    93 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணி 2வது இன்னிங்சில் 120 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கைல் மேயர்ஸ் 5 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது ஜோஷ்வா சில்வாவுக்கும், தொடர் நாயகன் விருது பிராத்வெயிட்டுக்கும் அளிக்கப்பட்டது. 
    ×