என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியின் டூ பிளசிஸ், விராட் கோலி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. கேப்டன் டூ பிளசிஸ், 57 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 88 ரன்கள் விளாசினார். விராட் கோலி 41 ரன்கள் அடித்தார்.
     
    206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவான் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், அகர்வால் 32 ரன்னில் அவுட்டானார். ஷிகர் தவான் 43 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய பானுகா ராஜபக்ச 43 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ராஜ் பாவா டக் அவுட்டானார். லிவிங்ஸ்டோன் 19 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் ஒடியன் ஸ்மித், ஷாருக் கான் அதிரடி காட்டினர். இறுதியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    அதிரடியாக ஆடிய கேப்டன் டூ பிளசிஸ், 57 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 88 ரன்கள் விளாசினார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் டூ பிளசிஸ், 57 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 88 ரன்கள் விளாசினார். விராட் கோலி 41 ரன்கள் அடித்தார்.

    பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ராகுல் சாகர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
    104 ரன்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ்- அக்சர் படேல் ஜோடி அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி,  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. 

    அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி, 32 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கவனமாக ஆடிய துவக்க வீரர் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் தனது பங்கிற்கு 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 104 ரன்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ், அக்சர் படேல் இருவரும் அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 

    லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் விளாச, டெல்லி அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்த டெல்லி அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 
    கடைசி ஓவர்களில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 81 ரன் குவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ஸ்கோரை அடைந்தது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன. 

    இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். 

    இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய அல்மோத்பிரீத் சிங்(8), திலக் வர்மா(22), பொல்லார்ட்(3) அடுத்தடுத்து வெளியேறினர். 

    கடைசி ஓவர்களில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி ரன் குவிக்க, மும்பை அணி நல்ல ஸ்கோரை அடைந்தது. இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுக்க, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
    ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதில் 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.
    பாசெல்:

    சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த பூசனனுடன் பலப்பரீட்சை நடத்திய சிந்து, 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.

    ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, இதுவரை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 16 முறை சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். 2019ல் ஹாங்காங் ஓபனில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார். 

    இந்த சீசனில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
    முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    கிறிஸ்ட்சர்ச்:

    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறின. 

    மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. 

    அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது.  தொடக்க வீராங்கனை மந்தனா 71 ரன்னும், கேப்டன் மிதாலிராஜ் 68 ரன்னும், ‌ஷபாலி வர்மா 53 ரன்னும், ஹர்மன் பிரீத் கவுர் 48 ரன்னும் எடுத்தனர். 

    இதையடுத்து 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா பின்னர் விளையாடியது.  50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது.  

    அந்த அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 80 ரன்கள் குவித்தார்.  மற்றொரு வீராங்கனை மிக்னான் டு ப்ரீஸ் 52 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.  

    இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

    முன்னதாக இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்காளதேசம் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது.  பின்னர் ஆடிய வங்காள தேசம் 134 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

    கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 விக்கெட் கைப்பற்றினார்.

    கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்த மலிங்காவை (இலங்கை) சமன் செய்தார். மலிங்கா 122 போட்டியில் 170 விக்கெட்டும், பிராவோ 152 போட்டியில் 170 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
    மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது.

    கிறிஸ்ட்சர்ச்:

    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறின. எஞ்சிய 2 அணிகள் எவை என்பது இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் முடிவில் தெரியவரும்.

    மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது.

    ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது.

    தொடக்க வீராங்கனை மந்தனா 71 ரன்னும், கேப் டன் மிதாலிராஜ் 68 ரன்னும், ‌ஷபாலி வர்மா 53 ரன்னும், ஹர்மன் பிரீத் கவுர் 48 ரன்னும் எடுத்தனர்.

    275 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா ஆடியது.

    மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்காளதேசம் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது.

    பின்னர் ஆடிய வங்காள தேசம் 134 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி 8 புள்ளியுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.

    வீரர்களுக்கு தொழில் நுட்ப திறன் பயிற்சியுடன் மேலும் பல திறன்களை பயிற்சிவித்து பன்முக கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாகும்.


    தமிழகத்தை சேர்ந்தவர் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். கிரிக்கெட் வென்சர்ஸ் நிறுவனரான இவர் ஆன்லைன் மூலம் இளம் வீரர்களின் திறமையை கண்டறிந்து இலவசமாக பயிற்சி அளிக்கிறார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் டில் பயிற்சியாளராக பணியாற்றிய போது தமிழகத்தில் ஏராளமான இளம் வீரர்களிடம் அபார திறமை ஒளிந்து கிடப்பதை அறிய முடிந்தது. இத்தகைய வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்துவதோடு உயர்தர பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ‘ஆன்லைன் டேலண்ட் ஹண்ட்’ என்ற பெயரில் இணைய தளத்தில் வீரர்களின் திறமையை கண்டறியும் திட்டத்தை தொடங்கி உள்ளேன்.

    விளையாட்டோடு எனக்கு உள்ள தொடர்புகளை பயன்படுத்தி இந்த திட்டத்தின் மூலம் தேர்வாகும் இளம் வீரர்களை அவர்களது வயது மற்றும் திறமை அடிப்படையில் சில அணிகளில் சேர்த்து விளையாட வைக்க முடியும் என்பது என்னுடைய எண்ணமாகும்.

    லாப நோக்கமின்றி தொடங்கப்படும் இந்த திட்டத்தில் சேர கிரிக்கெட் வீரர்கள் பணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசமாகும்.

    இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் விதமான வீடியோ பதிவுகளை www.cricitventures.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த வீடியோ பதிவுகளை நானும் எனது பயிற்சியாளர் குழுவினரும் பார்த்து, திறமையான இளம் வீரர்களை கண்டறிவோம்.

    வீரர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப பிரித்து ‘எலைட் குரூப்’ ஒன்று உருவாக்கப்படும்.

    இதில் இடம்பெறும் வீரர்கள் எங்களது மேம்படுத்தப்பட்ட பயிற்சி பெறுவதோடு, ஊக்கத் தொகை உதவியும் கிடைக்கும். இவர்களுக்கு பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சரிய மில்லை. எலைட் குரூப்பில் இடம் பெறாத வீரர்களுக்கு வேறு சில பயிற்சிகள் அளித்து செம்மைப்படுத்தப்படுவர்.

    வீரர்களுக்கு தொழில் நுட்ப திறன் பயிற்சியுடன் மேலும் பல திறன்களை பயிற்சிவித்து பன்முக கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாகும்.

    இவ்வாறு பத்ரிநாத் கூறினார்.

    இறுதி போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோதுகிறார்.
    பாசெல்:

    சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,  இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டியுடன் மோதினார். 

    பாசெல் நகரில் இந்த போட்டி 55 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். எனினும் அடுத்த இரண்டு செட்களையும் 21-7, 21-13 என்ற கணக்கில்  ஜோனதான் கிறிஸ்டி கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனோய்,  இந்தோனேசிய வீரர் சினிசுகா கின்டிங்கை 21-19, 19-21, 21-18  என்ற செட்கணக்கில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

    இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோதுகிறார்.
    மகளிர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

    மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேச அணிகளை வீழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று மோதுகிறது.
     
    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதால் இதில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 
    சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி பந்துவீச்சாளர்களை அணுகும் விதம் தனித்துவமானது என முன்னாள் வீரர் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி விலகியதைத் தொடர்ந்து, சென்னை அணி கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், எம்.எஸ்.டோனி குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அளித்த பேட்டி வருமாறு:

    ஒரு பவுலர் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அடுத்தடுத்து ஓவர்களை வழங்கி அப்போதே அந்த பவுலரை முழுமையாக தோனி பயன்படுத்திவிடுவார்.

    ஆனால், மற்ற கேப்டன்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

    தோனியின் இந்த அணுகுமுறைதான் அவரை சிறப்படையச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
    ×