என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இஷான் கிஷன்
    X
    இஷான் கிஷன்

    இஷான் கிஷன் அபாரம்: டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற 178 ரன்கள் இலக்கு

    கடைசி ஓவர்களில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 81 ரன் குவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ஸ்கோரை அடைந்தது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன. 

    இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். 

    இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய அல்மோத்பிரீத் சிங்(8), திலக் வர்மா(22), பொல்லார்ட்(3) அடுத்தடுத்து வெளியேறினர். 

    கடைசி ஓவர்களில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி ரன் குவிக்க, மும்பை அணி நல்ல ஸ்கோரை அடைந்தது. இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுக்க, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
    Next Story
    ×