என் மலர்
விளையாட்டு
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார்.
மும்பை:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. எம்.எஸ்.டோனி 50 ரன்னும், உத்தப்பா 28 ரன்னும், ஜடேஜா 26 ரன்னும் எடுத்தனர். டோனி 38 பந்துகளில் அரை சதத்தை பதிவுசெய்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
கொல்கத்தா சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 16 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராணா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரகானே 44 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், சாம் பில்லிங்ஸ் பொறுப்புடன் ஆடினர். சாம் பில்லிங்ஸ் 25 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவுசெய்தது.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சக வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அல்லது இந்தோனேசிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டியுடன் பிரனோய் மோதுவார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனோய் (வயது 29) ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தல் பிரனோய், இந்தோனேசிய வீரர் சினிசுகா கின்டிங்கை 21-19 19-21 21-18 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார்.
2017ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் வெற்றி பெற்ற பிரனோய், அதன்பின்னர் இந்த போட்டியில்தான் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சக வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அல்லது இந்தோனேசிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதுவார்.

இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபநிதா கேட்டோங்கை 18-21, 21-15, 19-21 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை பூசனனுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார் சிந்து.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி வீரராக களமிறங்கிய டோனி, அதிரடியாக ஆடி 50 ரன்கள் விளாசினார்.
மும்பை:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை அணியில், கான்வே, பிராவோ, மில்னே, சான்ட்னர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இணைந்திருந்தனர்.

துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, கான்வே 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு 15 ரன்களிலும், ஷிவம் துபே 3 ரன்னிலும் வெளியேற, 61 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சிஎஸ்கே.
அதன்பின்னர் கேப்டன் ஜடேஜா, கீப்பர் டோனி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ஸ்கோர் 19வது ஓவரில் 100 ரன்னை தொட்டது.
குறிப்பாக டோனியின் அதிரடி ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது. 38 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
அதன்பின்னர், கடைசி பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 26 ரன்களுடனும், டோனி 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட் எடுத்தார். வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
ஜடேஜா தலைமையிலான சென்னை அணியில் கான்வே, பிராவோ, மில்னே, சான்ட்னர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆனதால், பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாகி இருக்கிறார். சென்னை அணியில் கான்வே, பிராவோ, மில்னே, சான்ட்னர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா அணியில் பில்லிங்ஸ், ரஸ்ஸல், நரைன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள், ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி, ஒரு வீரராக களமிறங்குகிறார்.
பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளது.
மும்பை:
பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு (2023) நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு உள்ளது.
இந்த தகவலை அதன் தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்கலி தெரிவித்து உள்ளார்.
மகளிர் ஐ.பி.எல். காட்சி போட்டிகள் 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. கடந்த ஆண்டு பெண்களுக்கு காட்சி போட்டி நடைபெறவில்லை. தற்போது இந்த ஆண்டு மீண்டும் ஐ.பி.எல். காட்சி போட்டி நடத்தப்படுகிறது.
ஐ.பி.எல். பிளே ஆப் நடைபெறும் தினத்தில் 4 காட்சி போட்டிகள் நடக்கிறது. புனேயில் இந்த ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, அடுத்த ஆண்டு நடைபெறும் பெண்கள் ஐ.பி.எல். போட்டியில் 5 முதல் 6 அணிகள் பங்கேற்கலாம் என்றார்.
இதையும் படியுங்கள்...எம்.எஸ்.டோனி ஏன் பதவி விலகினார்? - சிஎஸ்கே அணியின் சிஇஓ விளக்கம்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கிறிஸ்ட்சர்ச்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகள் உள்ளன.
இன்று நடந்த 26-வது ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை சுசிபேட்ஸ் 126 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நிதா தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
266 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 194 ரன்னில் 9 விக்கெட் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஹன்னா ரோவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படியுங்கள்...சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து, பிரனோய் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஜோஷ்வா சில்வா அரை சதமடித்தார்.
கிரெனடா:
வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷகிப் 49 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 31 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட், கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜான் ஜப்பெல் 35 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஷ்வா சில்வா 54 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டோன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
மும்பை:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏ பிரிவிலும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாகி இருக்கிறார். ஆனாலும், ஒரு வீரராக டோனி நீடிப்பது சென்னை அணிக்கு பலமாகும்.
கடந்த சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, வெய்ன் பிராவோ, அம்பதி ராயுடு, உத்தப்பா ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆண்ட்ரு ரஸ்செல், ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா மிரட்டுவார்கள். பந்து வீச்சில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, டிம் சவுத்தி, ஷிவம் மாவி ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.
சமபலம் மிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் சென்னையும், 8-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதையும் படியுங்கள்...சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து, பிரனோய் அரையிறுதிக்கு முன்னேற்றம்
கேப்டன் என்ற முறையில் சி.எஸ்.கே. மீது அக்கறை கொண்டுள்ள டோனி, அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார் என சி.எஸ்.கே. சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
புதுடெல்லி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி திடீரென விலகினார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் அளித்த பேட்டி வருமாறு:
எம். எஸ்.டோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார். தொடர்ந்து அப்படியே இருப்பார்.
கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இது சரியான நேரம் அவர் உணர்ந்ததால் அதை செய்துள்ளார். இந்த முடிவை எடுத்தது அவர்தான்.
டோனியின் முடிவு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இதுதொடர்பாக நாங்கள் க்டந்த ஆண்டே விவாதித்துள்ளோம்.
ஜடேஜாவை அவர் இந்த தொடரில் வழிநடத்துவார். அணிக்கும் ஒரு சீனியர் வீரராக இருந்து வழிநடத்துவார்.
ஐ.பி.எல்.லில் டோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தொடர்ந்து அவர் விளையாடுவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் மிகப்பெரிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி லாகூரில் நடைபெற உள்ளது.
லாகூர்:
ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் சென்று 3 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ராவல்பிண்டி, கராச்சி நகரில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கவாஜா 91, கிரீன்79, அலெக்ஸ் கேரி 67, ஸ்மித் 59 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்துல்லா ஷபிக் 81 ரன், அசார் அலி 78 ரன், கேப்டன் பாபர் அசாம் 67 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினர்.
123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, 2வது இன்னிங்சில் 60 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்து 104 ரன்னில் வெளியேறினார். டேவிட் வார்னர் 51 ரன்னில் அவுட்டானார்.
இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 351 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன் எடுத்தது.
இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் வெற்றி பெற 278 ரன்கள் தேவைப்பட்டது. ஆரம்பம் முதல் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர்.
இதனால், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றுப் போனது இமாம் உல் ஹக் 70 ரன்னும், பாபர் அசாம் 55 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லின் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் .
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது.
ஆட்டநாயகன் விருது பாட் கம்மின்சுக்கும், தொடர் நாயகன் விருது உஸ்மான் கவாஜாவுக்கும் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...ஒருநாள் போட்டி தரவரிசை - இந்திய வீராங்கனை மந்தனா டாப் 10ல் இடம்பிடித்தார்
மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, கனடா வீராங்கனை மிச்செல் லீயை 21-10, 21-19 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.
பாசல்:
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனோய் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் கனடா வீராங்கனை மிச்செல் லீயை 21-10, 21-19 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.
ஆடவர் பிரிவில் பிரனோய், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பருபள்ளி காஷ்யப்பை 21-16, 21-16 என்ற நேர்செட்களில் வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார்.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி.சிந்து அடுத்து நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில், தாய்லாந்தின் சுபநிதா கேட்டோங்கை எதிர்கொள்கிறார்.
ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 தடவையும் மோத வேண்டும்.
ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப்போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தகரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்தது.
இதுவரை 14 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
15-வது ஐ.பி.எல். திருவிழா நாளை (26-ந் தேதி) தொடங்குகிறது. மே 29-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
கொரோனா காரணமாக ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலத்தில் நடத்தப்படுகிறது. மும்பையில் உள்ள வான்கடே , பிராபோர்ன் ஸ்டேடியங்கள், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல், புனேயில் உள்ள எம்.சி.ஏ. ஆகிய 4 மைதானங்களில் போட்டி நடக்கிறது.
இந்த சீசனில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. ஆர்.பி.எஸ்.ஜி. நிறுவனம் லக்னோ நகரை மையமாக கொண்ட அணியை ரூ.7,090 கோடிக்கும் , சி.வி.சி நிறுவனம் அகமதாபாத் அணியை ரூ.5,625 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தன.
இந்த புதிய அணிகள் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இதனால் 2011 ஆண்டு போட்டியை போல இந்த ஐ.பி.எல். தொட ரில் 10 அணிகள் விளையாடுகின்றன.
10 அணிகள் கலந்து கொள்வதால் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை. 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடந்தகால போட்டிகளின் முடிவின்படி அதாவது தரவரிசைப்படி அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-
குரூப் “ஏ”: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் , டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
குரூப் “பி” : நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ( சி.எஸ்.கே.) சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 தடவையும் மோத வேண்டும்.
உதாரணத்திற்கு 2-வது தர வரிசையில் இருக்கும் சி.எஸ்.கே . தனது பிரிவில் உள்ள ஐதராபாத் , பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் தலா 2 முறையும், “ஏ” பிரிவில் உள்ள முதல் வரிசையில் இருக்கும் மும்பையுடன் 2 தடவையும், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகியவற்றுடன் ஒருமுறையும் மோதும். அதன்படி 10 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் விளையாடும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
மே 22 -ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று ஆட்ட விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இறுதிப்போட்டி மே 29 ந் தேதி நடைபெறும்.
மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
58 நாட்கள் லீக் ஆட்டம் நடைபெறும். இதில் 12 நாட்களில் மட்டும் 2 ஆட்டங்கள் நடக்கிறது. மற்ற தினங்களில் ஒரே ஒரு போட்டி நடைபெறும்.
கடந்த ஐ.பி.எல். சீசனிலும் கொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது 25 சதவீத ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐ.பி.எல்.லில் போட்டியிலும் சிறப்பாக விளையாடி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 6-வது பட்டத்துக்காக காத்திருக்கிறது. பெங்களூர், பஞ்சாப், டெல்லி அணிகள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன. 2 புதிய அணிகளும் சவால் விடும் வகையில் விளையாடும். ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






