என் மலர்

  நீங்கள் தேடியது "Kyle Mayers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
  • வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்தது.

  செயிண்ட் லூசியா:

  வங்காளதேச அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி முதலில் களமிறங்கிய வங்களாதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. லிட்டன் தாஸ் 53 ரன்னிலும், தமிம் இக்பால் 46 ரன்னிலும் வெளியேறினர்.

  வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

  இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்திருந்தது.

  இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் பிராத்வெய்ட் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கேம்பெல் 45 ரன்னும், பிளாக்வுட் 40 ரன்னும் எடுத்தனர். அடுத்து இறங்கிய கைல் மேயர்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

  இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. கைல் மேயர்ஸ் 126 ரன்னும், ஜோஷ்வா டா சில்வா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

  ×