என் மலர்

  விளையாட்டு

  ரோகித் சர்மா - விராட் கோலி
  X
  ரோகித் சர்மா - விராட் கோலி

  ஐசிசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி, ரோகித் சர்மா பின்னடைவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார்.
  டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங், பந்து வீச்சு தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 742 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து 10 இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கவாஜா 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

  டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை

  பந்து வீச்சில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான அஸ்வின் 850 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் பும்ரா 830 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர். 

  ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலி 811 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 791 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்கிறார். 

  ஐசிசி-யின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் தரவரிசை

  ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்களில் இந்திய அணியின் வேகப்பந்து 
  வீச்சாளர் பும்ரா மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் 679 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 733 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்கிறார். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷகீப் அல் ஹசன் 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

  Next Story
  ×