search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லக்னோவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல்
    X
    லக்னோவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல்

    லக்னோவுடன் இன்று மோதல்- சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை பெறுமா?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதுமுக அணியான லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப் படுகிறது.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 6 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை தங்களது முதல் ஆட் டங்களில் வெற்றி பெற்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் தோற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை தங்களது முதல் ஆட்டத்தில் தோற்றன.

    ஐ.பி.எல். போட்டியின் 7-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே. அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 131 ரன்னை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதுமுக அணியான லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப் படுகிறது.

    கடந்த ஆட்டத்தில் டோனி மட்டுமே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். கேப்டன் ஜடேஜா உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    விசா பிரச்சினையால் மொய்ன் அலி தாமதமாக இந்தியா வந்ததால் முதல் போட்டியில் ஆடவில்லை. ஆல்ரவுண்டரான அவர் சென்னை அணியில் இணைந்து இருப்பது கூடுதல் பலமாகும். சான்ட்னெருக்கு பதிலாக மொய்ன்அலி இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுவார்.

    இதேபோல லக்னோ அணியும் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் கடுமையாக போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டன் டி காக் சிறந்த அதிரடி தொடக்க வீரர்கள் ஆவார்கள். ஆயுஷ் பதோனி கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இருந்தார்.

    இரு அணி வீரர்களும் முதல் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம் வருமாறு:-

    சென்னை : ஜடேஜா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, உத்தப்பா, மொய்ன்அலி, அம்பத்தி ராயுடு, டோனி, ஷிவம் துபே, பிராவோ, ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.

    லக்னோ : லோகேஷ் ராகுல் (கேப்டன்), குயின்டன்- டி-காக், லீவிஸ், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, குணால் பாண்ட்யா, ஆண்ட்ரூ டை அல்லது மொஹின் கான், சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ்கான். 

    Next Story
    ×