என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கப்தில் - வில் யங்
    X
    கப்தில் - வில் யங்

    சிக்சர் மூலம் சதம் விளாசிய 2 வீரர்கள் - நெதர்லாந்துக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து

    நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் கப்தில் மற்றும் வில் யங் சதம் அடித்துள்ளனர்.
    ஹாமில்டன்: 

    நெதர்லாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டன் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்தில்-நிகோலஸ் களமிறங்கினர். 

    நிகோலஸ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வில் யங் கப்திலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் நெதர்லாந்து அணியின் பவுலர்களை அருமையாக எதிர் கொண்டு விளையாடினார். மார்டின் கப்தில் சிக்சர் அடித்தே சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச போட்டியில் அவரது 17-வது சதம் இதுவாகும். 106 ரன்கள் எடுத்து அவர் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கப்தில்-வில் யங் ஜோடி 203 ரன்கள் சேர்த்தனர்.

    அடுத்து வந்த டெய்லர் 14 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் சிக்சர் மூலம் சதம் அடித்தார். இந்த தொடரில் இவரது 2-வது சதம் இதுவாகும். 5 ஒருநாள் போட்டியில் விளையாடி 2 சதங்கள் அடித்துள்ளார். 120 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்த வெளியேற 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் குவித்தது.

    நெதர்லாந்து தரப்பில் பிரெட் கிளாசென்,லோகன் வான் பீக், கிளேட்டன் ஃபிலாய்ட், ஆர்யன் தத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 334 ரன்கள் எடுத்தால் என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கும். 

    Next Story
    ×