என் மலர்
விளையாட்டு

ரோஸ் டெய்லர்
கடைசி போட்டியில் கண் கலங்கிய ரோஸ் டெய்லர்: வீடியோ
நெதர்லாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியோடு நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஹாமில்டன்:
நெதர்லாந்து அணியினர் 3 ஒருநாள் போட்டி ஒரு டி20 போட்டி விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. டி20 போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இந்த போட்டி நியூசிலாந்து அணி வீரரான ரோஸ் டெய்லருக்கு கடைசி போட்டியாகும். இந்த தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னாதாக நியூசிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலித்தது. நியூசிலாந்து அணி வீரர்களுடன் டெய்லரின் குழந்தைகளும் அதில் இடம்பெற்றனர். அப்போது டெய்லர் கண் கலங்கியபடி பாடினார். பாடல் முடிந்தது அவரது மகளுக்கு முத்தம் கொடுத்தப்படி செல்வார்.
Ross Taylor is about to play his final international game of cricket for New Zealand.
— Spark Sport (@sparknzsport) April 4, 2022
We will miss you Rosco #SparkSport#NZvNEDpic.twitter.com/Y6kmXVHvSH
கடைசி போட்டியில் விளையாடும் ரோஸ் டெய்லருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி, சங்ககாரா, ஜோரூட், கேன் வில்லியம்சன், மெக்கல்லம், டேனியல் விக்டோரி, ஆரோன் பிஞ்ச் உள்ளிட்ட நியூசிலாந்து அணி வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Messages from around the cricketing world for @RossLTaylor ahead of his final match for New Zealand tomorrow at Seddon Park. #ThanksRosco#NZvNEDpic.twitter.com/krmI1aUY2l
— BLACKCAPS (@BLACKCAPS) April 3, 2022
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. கப்தில், வில் யங் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இவர்கள் இருவரும் விளையாடிய போது கடைசி போட்டியில் ரோஸ் டெய்லருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காதது போல இருந்தது.

39-வது ஓவரில் கப்தில் அவுட் ஆனதால் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது. அவர் களத்திற்கு வரும் போது சுற்றி இருந்த ரசிகர்கள் எழும்பி நின்று கைதட்டி அவரை வரவேற்றனர். களத்தில் இருந்து நெதர்லாந்து அணி வீரர்கள் அவரை கவுரவிக்கும் வகையில் அனைத்து வீரர்களும் அவரை வரிசையாக நின்று வரவேற்றனர். அதற்கு நன்றி சொல்லும் விதமாக டெய்லர் நெதர்லாந்து கேப்டனான பீட்டர் சீலரிடம் கைகுலுக்கினார்.
For the last time in International cricket, let's go Ross Taylor. pic.twitter.com/Thq7AO0OWw
— Johns. (@CricCrazyJohns) April 4, 2022
இதனையடுத்து களமிறங்கிய டெய்லர் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதில் ஒரு சிக்சர் அடங்கும். அவர் 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8602 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 21 சதம் 51 அரை சதம் அடங்கும்.
இதையும் படியுங்கள்...பும்ராவை காப்பி அடித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ
Next Story






