search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பும்ராவை காப்பி அடித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்
    X
    பும்ராவை காப்பி அடித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்

    பும்ராவை காப்பி அடித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ

    உலகின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஸ்டைலில் ஆஸ்திரேலியா வீரர் பந்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ஆஸ்திரேலியாவில் ஷெஃபீல்ட் ஷீல்டு என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு ஆஸ்திரேலியா -விக்டோரியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற விக்டோரியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    முதல் இன்னிங்சில் மேற்கு ஆஸ்திரேலியா அணி 386 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய விக்டோரியா 306 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் மேற்கு ஆஸ்திரேலியா அணி 400 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்சில் விக்டோரியா அணியை சேர்ந்த நிக் மேடின்சன் 160-வது ஓவரை வீசினார். 



    அவர் வீசிய ஸ்டைல், இந்திய பந்து வீச்சாளர் பும்ரா மாதிரி இருந்தது. அப்போது மற்ற வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவரது பந்து வீச்சை பார்த்து சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×