என் மலர்
விளையாட்டு

சென்னை அணி வீரர்கள்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்- சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி வீரர்கள், தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை அணி வீரர் ஜோர்டான் குணமடைந்ததால் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். அவர் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடுகிறார். பஞ்சாப் அணியில் வைபவ் அரோரா, ஜிதேஷ் சர்மா அறிமுகம் ஆகி உள்ளனர்.
அடுத்தடுத்து 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி வீரர்கள், தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
அணிகள் விவரம்:
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்.எஸ்.டோனி (கீப்பர்), ஷிவம் துபே, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி.
பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பனுகா ராஜபக்சே (கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.
Next Story






