என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அரை சதமடித்த சூர்யகுமாரை பாராட்டும் திலக் வர்மா
    X
    அரை சதமடித்த சூர்யகுமாரை பாராட்டும் திலக் வர்மா

    சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு அதிரடி - கொல்கத்தாவுக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

    கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பையின் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷண் 15 ரன்னிலும், பிரிவிஸ் 29 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் மும்பை அணி 55 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்துள்ளது. திலக் வர்மா 38 ரன்னுடனும், பொல்லார்டு 5 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    Next Story
    ×