என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் ராகுல் திவேதியா கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

    மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது.

    லிவிங்ஸ்டோன் 27 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்) தவான் 30 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட்டும், நல்காண்டே 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ராகுல் திவேதியா ஆட்டத்தின் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்து குஜராத்தை வெற்றி பெற வைத்தார். சுப்மன்கில் 59 பந்தில் 96 ரன்னும் (11 பவுண்டரி, 1சிக்சர்) தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 30 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 18 பந்தில் 27 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.

    குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அந்த அணி மட்டும் தான் இதுவரை தோல்வி அடையவில்லை. வெற்றி குறித்து குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    ஆட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததால் நான் நடுநிலையாகி விட்டேன். ராகுல் திவேதியாவுக்கு எனது வாழ்த்துக்கள். நெருக்கடியில் அவர் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்தது பாராட்டத்தக்கது. சுப்மன்கில் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருக்கு சாய் சுதர்சன் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரது பொறுப்பான பேட்டிங்கால் தான் எங்களால் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து வர முடிந்தது.

    பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று இன்னும் புள்ளிகள் எதுவும் பெறாமல் உள்ளது.

    சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும் தோற்றது.

    சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு ஐதராபாத்தை தோற்கடித்து முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி முதல் 2 ஆட்டங்களிலும் (ராஜஸ்தான், லக்னோ) தோற்று இருந்தது.

    இரு அணிகளும் இதுவரை 16 போட்டியில் மோதியுள்ளன. இதில் சென்னை 12-ல், ஐதராபாத் 4-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஆர்.சி.பி. 2 வெற்றி ,ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மும்பையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் சென்னையை போலவே முதல் 3 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூருவை தோற்கடித்து முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர், பீட்டர்சன், பவுமா ஆகியோர் அரை சதமடித்தனர்.
    போர்ட் எலிசபெத்:

    வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், எர்வி களமிறங்கினர். எர்வி 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய பீட்டர்சன் டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். எல்கர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின், களமிறங்கிய பவுமா சிறப்பாக விளையாடினார். பீட்டர்சன் 64 ரன்களிலும் பவுமா 67 ரன்களிலும் வெளியேறினர்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. 

    வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டும், காலித் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    பாபர் மற்றும் விராட் இதுவரை அந்தந்த நாடுகளுக்கான கிரிக்கெட் வீரர்களாக மிகவும் வெற்றிகரமான பதவிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    லாகூர்:

    இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடட் முன்னாள் மேனேஜர் சர் அலெக்ஸ் பெர்குசன், சாம்பியன்ஸ் லீக் வெல்ல தனக்கு ஜினெடின் ஜிடேன் மற்றும் 10 மரத்துண்டுகள் போதும் என கூறியிருந்தார்.

    பெர்குசன் சொன்னதையே மாற்றிய  பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப், பாபர் அசாம், விராட் கோலி மற்றும் 9 மரத்துண்டுகள் போதும் என தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி, பாபர் அசாம் என இருவரும் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர்கள், வெற்றிகரமான பேட்ஸ்மேன்கள்.

    2011-ல் எம்.எஸ்.டோனியின் கீழ் உலக கோப்பை வென்ற அணியில் விராட் கோலி முக்கியமாக இருந்தார் கோலி. ஆனால் பாபர் அசாம் உலக கோப்பை வெற்றியை இன்னும் சுவைக்கவில்லை.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் கூறுகையில், பாபர் அசாம், விராட் கோலி மற்றும் ஒன்பது மரத்துண்டுகளை என்னிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு உலக கோப்பையை வெல்வேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 59 பந்தில் 96 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்தார்.
    அடுத்து ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், நல்கண்டே 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 7 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பஞ்சாப் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    சாய் சுதர்சனுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தார் ஷுப்மான் கில். ஷுப்மான் கில் 59 பந்துகளில் ஒரு சிக்சர், 11 பவுண்டரி உள்பட 96 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாண்ட்யா 28 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் திவாட்டியா 2 சிக்சர்களை விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.

    இறுதியில், குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. குஜராத் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும்.
    குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டன் 4 சிக்சர்கள் விளாசி அரை சதம் அடித்து அசத்தினார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து குஜராத் அணி களமிறங்கியது.

    பஞ்சாப் கேப்டன் வழங்கம் போல உடனே (5)பெவிலியன் திரும்பினார். அடுத்த புதிதாக பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோவ் களமிறங்கினார். அவரும் ஜொலிக்கவில்லை 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக தொடக்க ஆட்டக்காரர் தவான் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    35 ரன்கள் எடுத்த நிலையில் தவான் வெளியேறினார். ஒரு பக்கம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த அவர் ரஷித்கான் பந்தில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த சர்மா அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 2 சிக்சர் அடங்கும்.

    தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கும். குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜாராத் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் 16-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    பஞ்சாப் அணியில் ராஜபக்‌ஷேவுக்கு பதிலாக பேர்ஸ்ரோவ் இணைந்துள்ளார். குஜராத் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

    பஞ்சாப் அணி

    மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பார்ஸ்டோவ் (கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.

    குஜராத் அணி

    1.ஹர்திக் பாண்ட்யா 2. ராகுல் திவேதியா 3. ரஷீத்கான் 4. முகமது ‌ஷமி 5.பெர்குசன் 6.டேவிட் மில்லர் 7.மேத்யூ வேட் 8. சுப்மன்கில் 9. சாய் சுதர்சன் 10. அபிநவ் மனோகர் 11. தர்ஷன் நல்கண்டே

    ஐபிஎல் கிரிக்கெட்டின் இந்த சீசனில் முதல் வாரத்தில் பார்வையாளர் எண்ணிக்கை 22.9 கோடியாக இருந்தது. இது கடந்த சீசனைவிட 14 சதவீதம் குறைவாகும்.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று இருக்கும் ஐ.பி.எல். போட்டியை ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். சீசனில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க வாரத்தில் டி.வி. ரேட்டிங் 33 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இப்போட்டி தொடரின் முதல் 8 போட்டிகளில் டி.வி. ரேட்டிங் 2.52 ஆக இருந்தது. கடந்த சீசனில் முதல் 8 போட்டிக்கான டி.வி.ரேட்டிங் 3.75 ஆக இருந்தது. முதல் வாரத்தின் ஒட்டுமொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த சீசனில் 26 கோடியாக இருந்தது. ஆனால் இந்த சீசனில் முதல் வாரத்தில் பார்வையாளர் எண்ணிக்கை 22.9 கோடியாக இருந்தது. இது கடந்த சீசனைவிட 14 சதவீதம் குறைவாகும்.

    கொரோனா காலத்துக்கு முன்பு (2019-ம் ஆண்டு) பார்வையாளர்கள் எண்ணிக்கை 26.8 கோடியாகவும் டி.வி. ரேட்டிங் 3.85 ஆகவும் இருந்தது. இது ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான தொடர்ந்த போட்டி மற்றும் பஞ்சாப்- பெங்களூரு அணி ஞாயிறு மாலை போட்டி ஆகிய இரண்டு போட்டிகள் மட்டுமே தலா 10 கோடிக்கு அதிகமான பயனர்களை பெற்று இருந்தது. இந்த அளவு கடந்த சீசனில் தொடக்க வாரத்தில் 4 போட்டிகளிலும் 2019-ம் ஆண்டில் முதல் 8 போட்டிகளில் ஏழு ஆட்டங்களிலும் இருந்தது.

    2022-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு ஊடரங்கால் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் 10 கோடி பயனர்களை எட்டி இருந்தது. இதுவரை 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் பார்வையாளர் எண்ணிக்கைகள் குறைவாக இருக்கிறது.

    வரும் நாட்களில் போட்டி தொடர் சூடுபிடித்துள்ள பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளனர்.
    சன்சியோன்:

    கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை கால் இறுதி ஆட்டங்கள் நடந்தது. இதன் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து- தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பான் மோதினர். முதல் செட்டை பி.வி.சிந்து 21-10 என்ற புள்ளி கணக்கில் எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டிலும் பி.வி.சிந்து கையே ஓங்கியது. அந்த செட்டை அவர் 21-16 என்ற கணக்கில் தனதாக்கினார். இதன் மூலம் 21-10, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த்-கொரிய வீரர் வான்ஹோ மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 21-12, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஆட்டத்தின் கடைசி பந்துவரை நாங்கள் 100 சதவீத செயல்பாட்டை அளிக்க விரும்பினோம் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீழ்த்தியது. 

    முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. பிரித்விஷா 61 ரன்னும் ரி‌ஷப்பண்ட் 39 ரன்னும், சர்ப்ராஸ் கான் 36 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய லக்னோ 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிகாக் 80 ரன் எடுத்தார்.

    டெல்லி அணியில் தொடக்க வீரர் டேவிட்வார்னர் ரன் எடுக்க திணறினாலும் பிரித்விஷா அதிரடியாக விளையாடினார்.

    அதனால் முதல் விக்கெட்டுக்கு 67 ரன் (7.3) சேர்த்தது. பிரித்விஷா அவுட் ஆன பிறகு ரன் வேகம் குறைந்தது. லக்னோ அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு டெல்லி, அணியை கட்டுப்படுத்தினர்.

    அதிரடி வீரர் ரி‌ஷப் பண்ட் 36 பந்தில் 39 ரன்னே எடுத்தார். தொடக்கத்தில் டெல்லி 180 ரன் வரை எடுப்பது போல் தெரிந்தது. ஆனால் அதை தவறவிட்டு விட்டனர்.

    வெற்றி குறித்து லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறும்போது, நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன். ஆனால் பவர் பிளேவில் கூடுதலாக உழைக்க வேண்டும்.

    பவர் பிளேக்கு பிறகு பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். பனி தாக்கத்தை மனதில் கொண்டு அணிகள் விளையாடுகின்றன. அதன் காரணமாக அனைவரும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கிறார்கள். கடைசி ஆட்டத்தில் இங்கு அதிக பனி இல்லை. இதனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. இன்று (நேற்று) நிறைய பனி இருந்தது என்றார்.

    டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப் பண்ட் கூறியதாவது:-

    பனி தாக்கம் இருக்கும்போது நீங்கள் குறை கூற முடியாது. ஆனால் நாங்கள் 10 முதல் 15 ரன் வரை குறைவாக எடுத்து விட்டோம். பவர் பிளேவியில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை சேர்த்தோம் என்று நினைக்கிறேன்.

    ஆனால் மிடில் ஓவர்களில் ஆட்டம் மாறியது. ஆட்டத்தின் கடைசி பந்துவரை நாங்கள் 100 சதவீத செயல்பாட்டை அளிக்க விரும்பினோம் என்றார். லக்னோ அணி 3-வது வெற்றியை (4 ஆட்டம்) பெற்றது. டெல்லி 2-வது தோல்வியை (3 ஆட்டம்) சந்தித்தது.

    லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதால் டெல்லி கேப்டன் ரி‌ஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதால் டெல்லி கேப்டன் ரி‌ஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி மெதுவாக ஓவர் வீதத்தை பராமரிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    ஐ.பி.எல். நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் டெல்லி அணியின் முதல் தவறாக இருப்பதால் கேப்டன் ரி‌ஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
    லாகூர்:

    அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகளில் சதம் அடித்தார். 

    மூன்றாவது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். 
     
    இந்நிலையில், ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஆல் டைம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியலில் பாபர் அசாம் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 16வது இடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். 

    இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன்  விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்திலும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகீர் அப்பாஸ் 2வது இடத்திலும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் 3வது இடத்திலும் உள்ளனர். 

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×