search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பார்வையாளர்கள் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்தது
    X
    பார்வையாளர்கள் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்தது

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பார்வையாளர்கள் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்தது

    ஐபிஎல் கிரிக்கெட்டின் இந்த சீசனில் முதல் வாரத்தில் பார்வையாளர் எண்ணிக்கை 22.9 கோடியாக இருந்தது. இது கடந்த சீசனைவிட 14 சதவீதம் குறைவாகும்.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று இருக்கும் ஐ.பி.எல். போட்டியை ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். சீசனில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க வாரத்தில் டி.வி. ரேட்டிங் 33 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இப்போட்டி தொடரின் முதல் 8 போட்டிகளில் டி.வி. ரேட்டிங் 2.52 ஆக இருந்தது. கடந்த சீசனில் முதல் 8 போட்டிக்கான டி.வி.ரேட்டிங் 3.75 ஆக இருந்தது. முதல் வாரத்தின் ஒட்டுமொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த சீசனில் 26 கோடியாக இருந்தது. ஆனால் இந்த சீசனில் முதல் வாரத்தில் பார்வையாளர் எண்ணிக்கை 22.9 கோடியாக இருந்தது. இது கடந்த சீசனைவிட 14 சதவீதம் குறைவாகும்.

    கொரோனா காலத்துக்கு முன்பு (2019-ம் ஆண்டு) பார்வையாளர்கள் எண்ணிக்கை 26.8 கோடியாகவும் டி.வி. ரேட்டிங் 3.85 ஆகவும் இருந்தது. இது ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான தொடர்ந்த போட்டி மற்றும் பஞ்சாப்- பெங்களூரு அணி ஞாயிறு மாலை போட்டி ஆகிய இரண்டு போட்டிகள் மட்டுமே தலா 10 கோடிக்கு அதிகமான பயனர்களை பெற்று இருந்தது. இந்த அளவு கடந்த சீசனில் தொடக்க வாரத்தில் 4 போட்டிகளிலும் 2019-ம் ஆண்டில் முதல் 8 போட்டிகளில் ஏழு ஆட்டங்களிலும் இருந்தது.

    2022-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு ஊடரங்கால் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் 10 கோடி பயனர்களை எட்டி இருந்தது. இதுவரை 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் பார்வையாளர் எண்ணிக்கைகள் குறைவாக இருக்கிறது.

    வரும் நாட்களில் போட்டி தொடர் சூடுபிடித்துள்ள பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×