என் மலர்
விளையாட்டு
முதலில் விளையாடிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மும்பை:
ஐ.பி.எல். போட்டி தொடரில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகிறது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர் ப்ரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். கேப்டன் ரிஷப் பந்து 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அக்சர் படேல் 22 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 29 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நின்றனர். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்
5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது
இதையடுத்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... தோல்விக்காக தன்னை தானே குற்றம் சாட்டிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா
சேலத்தில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது.
சேலம்:
சேலம் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 20 மாவட் டங்களைச் சேர்ந்த வீரர்கள 159 பேர், வீராங்கனைகள் 57 பேர் என மொத்தம் 246 பேர் கலந்துகொண்டனர்.
இதில் 20 வயதுக்குட்பட்ட வர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசு பெறும் ஆண், பெண்களுக்கு பேட்டரி ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அணி வீரர்கள்:
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது
கொல்கத்தா அணி வீரர்கள்
ரகானே, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பேட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 18-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேலின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக கடைசி ஓவரில் அவர் துல்லியமாக பந்து வீசினார். சூர்ய குமாரை வைத்து ரன்கள் எடுக்க முடியாமல் திணற வைத்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்த ஹர்சல் படேலுக்கு ஒரு துக்க செய்தி வந்தது. அவரது சகோதரி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர் பயோ-பப்பில் இருந்து வெளியேறினார். அவர் வீரர்கள் செல்லும் பேருந்தில் செல்லாமல் தனியாக புறப்பட்டார் என ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
12-ந் தேதி சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வந்துள்ளது.
இதையும் படியுங்கள்...தோல்விக்காக தன்னை தானே குற்றம் சாட்டிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா
தேசிய சீனியர் கூடைப்பந்து அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 93-70 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சென்னை:
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 93-70 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தமிழ்நாடு அணியில் கேப்டன் முயின்பேக் 26 புள்ளியும், அரவிந்த், ஜீவானந்தம் தலா 15 புள்ளியும், அரவிந்த் குமார் 14 புள்ளியும் எடுத்தனர்.
தமிழக அணி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் பஞ்சாபை எதிர்கொள்கிறது.
பஞ்சாபை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அணி இதுவரை 10 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. தற்போது 11-வது தடவையாக தேசிய சீனியர் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
தமிழக அணி முதல் சுற்று லீக்கில் டெல்லி, மிசோரம், உத்தரகாண்டையும், 2-வது சுற்று லீக்கில் அரியானா, ரெயில்வேயையும், கால் இறுதியில் கேரளாவையும் வீழ்த்தி இருந்தது. தோல்வி எதையும் சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
இதனால் சாம்பியன் பட்டத்தை வெல்ல தமிழ்நாடு-பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவலாம். இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில் தமிழ்நாடு 4-ல், பஞ்சாப் 2-ல் வெற்றி பெற்றுள்ளன.
தமிழகப் பெண்கள் அணி அரைஇறுதியில் ரெயில்வேயிடம் தோற்றது. மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியன் ரெயில்வே-தெலுங்கானா அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் 15-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றது. டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை வென்றது. அதை தொடர்ந்து குஜராத், லக்னோவிடம் தோற்றது. ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. 3-வது வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது.
லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்றது. அதைத் தொடர்ந்து சென்னை, ஐதராபாத், டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. ராஜஸ்தானை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் லக்னோ உள்ளது.
இந்த ஆடுகளத்தில் 150 ரன் போதுமானது இல்லை என்று கண்டிப்பாக தெரியும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
புனே:
ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் 4-வது தோல்வியை தழுவின.
மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. சி.எஸ்.கே. தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது.
புனேயில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 37 பந்தில் 68 ரன் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ரோகித்சர்மா 15 பந்தில் 26 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ஹசரங்கா, ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அனுஜ் ராவத் 47 பந்தில் 66 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 36 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்காக கேப்டன் ரோகித்சர்மா தன்னை தானே குற்றம் சாட்டிக்கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்களிடம் இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் சிறந்த 2 பேரை தேர்ந்து எடுத்தோம். நான் முடிந்தவரை பேட் செய்ய விரும்பினேன். ஆனால் தவறான நேரத்தில் வெளியேறி விட்டேன். நாங்கள் 50 ரன் வரை பார்ட்னர்ஷிப்பில் இருந்தோம். ஆனால் தவறான மோதலில் நான் அவுட் ஆனது எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது.
இந்த ஆடுகளத்தில் 150 ரன் போதுமானது இல்லை என்று கண்டிப்பாக தெரியும். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியதால்தான் இந்த ரன் வந்தது 151 ரன்னை வைத்து பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பார்வையாளர்கள் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்தது
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர், பீட்டர்சன், பவுமா மற்றும் கேசவ் மகாராஜா ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.
போர்ட் எலிசபெத்:
தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், எர்வி களமிறங்கினர். எர்வி 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து இறங்கிய பீட்டர்சன் டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். எல்கர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய பவுமா சிறப்பாக விளையாடினார். பீட்டர்சன் 64 ரன்களிலும் பவுமா 67 ரன்களிலும் வெளியேறினர்.
முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கேசவ் மகாராஜா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 84 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், காலித் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் பொறுப்புடன் ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 33 ரன் எடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 3 விக்கெட்டும், ஆலிவர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களுரு அணியின் அனுஜ் ராவத், விராட் கோலி ஆகியோர் 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.
புனே:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.
இஷாந்த் கிஷன் 26 ரன், கேப்டன் ரோகித் சர்மா 26 ரன்னும் எடுத்தனர்.
அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 37 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 68 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா, ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. கேப்டன் டூ பிளசிஸ், அனுஜ் ராவத் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் டூ பிளசிஸ் 16 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து, அனுஜ் ராவத்துடன் விராட் கோலி இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. அனுஜ் ராவத் 66 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி 48 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூரு அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னையை தொடர்ந்து, மும்பை அணியும் தொடர்ச்சியாக 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது
முதலில் விளையாடிய மும்பை அணியில் சூரியகுமார் யாதவ் 68 ரன்களை குவித்தார்.
புனே:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர் இஷாந்த் கிஷன் 26 ரன்னுக்கு அவுட்டானார். கேப்டன் ரோகித் சர்மாவும் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியில் இடம் பெற்ற வாஷிங்டன் சுந்தர், நடராஜன் சிறப்பாக பந்து வீசி உள்ளனர்.
சென்னை அணிக்கு எதிரான 17-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களான உத்தப்பா-ருதுராஜ் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். உத்தப்பா 11 பந்தில் 15 ரன்னிலும் ருதுராஜ் 13 பந்தில் 16 ரன்னிலும் வெளியேறினர்.
ருதுராஜ் ஆட்டம் இந்த சீசனில் மிகவும் சொதப்பலாகவே உள்ளது. இதனையடுத்து மொயின் அலி-ராயுடு ஜோடி பவுண்டரி சிக்சர்களுடன் ரன்களை உயர்த்தினர். சென்னை அணி 98 ரன்கள் இருக்கும் போது அம்பதி ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆனார். சென்னை அடுத்த 10 (108) ரன்கள் எடுப்பதற்குள் மொயின் அலி அவுட் ஆனார்.

அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சிவம் துபே 3, டோனி 3, ஜடேஜா 23 ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இதனால் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கும்.
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சென்னை அணி வீரர்கள்
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா(கேட்ச்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி(வ), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி
ஐதராபாத் அணி வீரர்கள்
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(c), ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்






