என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் டெல்லி அணி
    X
    ஐபிஎல் டெல்லி அணி

    ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி

    முதலில் விளையாடிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
    மும்பை:


    ஐ.பி.எல். போட்டி தொடரில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகிறது.

    மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர்  ப்ரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். கேப்டன் ரிஷப் பந்து  27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  

    அக்சர் படேல் 22 ரன்களும்,  ஷர்துல் தாக்கூர் 29 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நின்றனர். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 
    5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது

    இதையடுத்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கி உள்ளது.

    Next Story
    ×