என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதின் மார்ச் மாதத்திற்கு பாபர் அசாம் உள்ளிட்ட 3 பேர் பெயரை ஐ.சி.சி. பரிந்துரை செய்திருந்தது.
    துபாய்:

    ஐ.சி.சி. மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, மார்ச் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரெய்க் பிராத்வெயிட், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

    அதேபோல், பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன், லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் பாபர் அசாம் வென்றார். சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்சும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என ஐசிசி அறிவித்துள்ளது.

    குஜராத்துக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற  21-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார். 

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினர். அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது அபிஷேக் சர்மா 42 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 15 ரன்னில் காயமடைந்து வெளியேறினார்.

    கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பூரன் அதிரடியாக ஆடி 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஐதராபாத் அணி பெறும் 2வது வெற்றி ஆகும்.

    குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற  21-வது லீக் ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும்,  வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத்  அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மத்தீவ் வேட் 19 ரன்னிலும், சுப்மன் கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

    சாய் சுதர்சன் 11 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார். எனினும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் விளையாடி 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். மற்றொரு வீரர்  அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார். 

    இறுதியில்  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருகிறது.  


    மூத்தோர் தடகள போட்டியில் சேலம் முதியவர் தங்கம் வென்றார்.
    சேலம்:

    மதுரை நாகமலையில் 29 -வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் 75 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சேலம் பெரமனூரை சேர்ந்த மாணிக்கவாசகம் (வயது 75) என்பவர் கலந்து கொண்டு விளையாடினார். 

    இதில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம், ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அவர் வெள்ளிப் பதக்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் வென்றார்.

     இதைத்தொடர்ந்து வருகிற 27 -ந் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அவர் தகுதி  பெற்றுள்ளார்.
    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணி குஜராத் டைட்டன்ஸ் ஆகும். அந்த அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் (லக்னோ, டெல்லி, பஞ்சாப்) வென்றது. குஜராத் அணி ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் இருக்கிறது. அந்த அணி குஜராத்தின் ஆதிக்கத்தை சமாளிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அஸ்வினின் இந்த முடிவு 20 ஓவர் போட்டியில் சுதந்திரமான முடிவாகும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான இயன்பி‌ஷப் கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 3-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது.

    ஹெட்மயர் 36 பந்தில் 59 ரன்னும் (1 பவுண்டரி, 6 சிக்சர்). படிக்கல் 29 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். ஹோல்டர், கிருஷ்ணப்பா, கவுதம் தலா 2 விக்கெட்டும், அவேஷ்கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் 3 ரன்னில் வெற்றிபெற்றது.

    குயின்டன் டிகாக் 32 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டோனிஸ் 17 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சாஹல் 41 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். போல்ட் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, குல்தீப்சென் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த ஆட்டத்தில் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். ஐ.பி.எல். வரலாற்றில் ஓய்வு முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் ஆவார்.

    அஸ்வின்

    ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அஸ்வின் 18.2-வது ஓவரில் மைதானத்தில் இருந்து ‘ரிட்டயர்ட் அவுட்’ முறையில் வெளியேறினார். அவர் 23 பந்தில் 2 சிக்சருடன் 28 ரன் எடுத்தார். அவரது இடத்தில் ரியான்பராக் வந்து ஹெட்மயருடன் இணைந்தார்.

    அஸ்வின் முதலில் பெவிலியன் திரும்பியதற்கான காரணம் தெரியவில்லை. பின்னர்தான் அவர் ஓய்வு முறையில் வெளியேறிய தகவல் வெளியானது. அஸ்வினின் இந்த அதிரடியான முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அஸ்வின் தொடர்ந்து ரன்களை அதிரடியாக குவிக்க முடியாமல் தடுமாறி வந்தார். மேலும் சோர்ந்து போயும் இருந்தார். பெரிய ஷாட்களை அடிப்பது கஷ்டம் என தெரிந்துதான் அவர் இடத்டதில் ரியான்பராக் களம் இறங்கி உள்ளார்.

    இதுகுறித்து எதிர்முனையில் இருந்த ஹெட்மயர் இன்னிங்ஸ் முடிவுக்கு பிறகு கூறும்போது, “அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

    போட்டி முடிந்த பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனிடம் இது குறித்து கேட்ட போது, “அஸ்வின் சிறந்த கிரிக்கெட் உணர்வு கொண்டவர். சூழ்நிலைகளை நன்றாக கணக்கிடுவார். இந்த போட்டி தொடருக்கு முன்பு ஏதேனும் சூழ்நிலை ஏற்பட்டால் ‘ரிட்டயர்ட் அவுட்’டை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். இது அணியின் முடிவாகும்” என்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான இயன்பி‌ஷப் இதுகுறித்து கூறும்போது, “அஸ்வினின் இந்த முடிவு 20 ஓவர் போட்டியில் சுதந்திரமான முடிவாகும். இந்த போட்டியை நாம் எப்படி கருதுகிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது” என்றார்.

    ஐ.பி.எல். போட்டியில் ரிட்டயர்ட் முறையில் வெளியேறுவது இதுதான் முதல் முறையாகும். அஸ்வின் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்.

    ஆண்கள் பிரிவில் தமிழக அணி 87-69 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 11-வது முறையாக தேசிய சீனியர் போட்டியில் பட்டம் கிடைத்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    ஆண்கள் பிரிவில் தமிழக அணி 87-69 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 11-வது முறையாக தேசிய சீனியர் போட்டியில் பட்டம் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அணியில் அரவிந்த் 25 புள்ளியும், அரவிந்த் குமார் 21 புள்ளியும் ,ஜீவானந்தம் 14 புள்ளியும் , கேப்டன் முயின்பேக் 12 புள்ளியும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அம்ஜோத்சிங் அதிகபட்சமாக 33 புள்ளி எடுத்தார். கர்நாடகா அணி இந்தியன் ரெயில்வேயை தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்தது.

    பெண்கள் பிரிவில் இந்தியன் ரெயில்வே 131-82 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி கேரளாவை வென்று 3-வது இடத்தை பிடித்தது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசுகளை வழங்கினார். முதலிடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.50 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

    இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சந்தர்முபிசர்மா, பொருளாளர் ரகோத்தமன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் ஆதவ் அர்ஜூனா உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேசத்தின் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    போர்ட் எலிசபெத்:

    தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேசவ் மகாராஜ் 84, எல்கர் 70, பவுமா 67, பீட்டர்சன் 64 ரன்கள் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், காலித் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முஷ்பிகுர் ரஹிம் 51 ரன்கள், தமிம் இக்பால் 47 ரன்னும் எடுத்தனர் .

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர், ஹார்மர் தலா 3 விக்கெட்டும், ஆலிவர், மகாராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    236 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    வங்காளதேசம் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 413 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது .
    லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தானின் சாஹல் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.
    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
     
    லக்னோ அணி சார்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி கட்டத்தில் போராடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான் சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 6வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் சாஹல்.

    இந்தப் பட்டியலில் பிராவோ (173), மலிங்கா (170), அமித் மிஸ்ரா (166), பியூஷ் சாவ்லா (157), ஹர்பஜன் சிங் (150) என முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

    லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தானின் சாஹல் 4 விக்கெட்டும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    மும்பை:

    ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் அதிரடியாக ஆடி 36 பந்தில் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படிக்கல்  29 ரன், அஸ்வின் 28 ரன்னில் அவுட்டானார்.

    லக்னோ அணி சார்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே கேப்டன் கே எல் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த பந்தில் கிருஷ்ணப்பா கவுதம் டக் அவுட்டானார். ஹோல்டர் 8 ரன்னிலும், தீபக் ஹூடா 25 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் குயிண்டன் டி காக் நிதானமாக ஆடினார். அவர் 39 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 22 ரன்னிலும், சமீரா 13 ரன்னிலும் அவுட்டாகினர். 

    கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் போராடினார். 4 சிக்சர் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், லக்னோ அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.

    ராஜஸ்தான் சார்பில் சாஹல் 4 விக்கெட்டும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 65 ரன்களை குவித்தார்
    மும்பை:

    ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது.

    டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது . அந்த அணியின் தொடக்க வீரர் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் படிக்கல்  29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

    தொடர்ந்து  சாம்சன் ,வான்டெர் டுசன் ஆகியோரும் அடுத்தடுத்து அவுட்டானதால், ராஜஸ்தான் 12 ஓவர்களில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    எனினும், ஹெட்மயர் அதிரடியாக விளையாடி, ஒரு பவுண்டரி 6 சிக்சர்கள் உள்பட 36 பந்துகளில் 50 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  அஸ்வின் 28 ரன்கள் எடுத்தார். 

    20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடி வருகிறது.





    முதலில் விளையாடிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டி தொடரில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர்  ப்ரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். கேப்டன் ரிஷப் பண்ட்  27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  

    அக்சர் படேல் 22 ரன்களும்,  ஷர்துல் தாக்கூர் 29 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நின்றனர். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது இதையடுத்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கி விளையாடியது. துவக்க வீரர் ரகானே 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர் 18 ரன்னுடன் வெளியேறினார்.

    அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 54 ரன்கள் குவித்தார். நிதிஷ் ராணா 30 ரன்கள் அடித்தார்.  கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதையடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், கலீல் அகமது 3 விக்கெட்களும், ஷர்துல் தாக்கல் 2 விக்கெட்களையும் லலித் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

    ×