என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான், அகர்வால் அரை சதம் அடித்து அசத்தினர்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை  தேர்வு செய்தது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் .தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர்.

    அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தது .சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மயங்க் அகர்வால் 52 ரன்களிலும், தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா ,ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
    பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    ஐ.பி.எல். போட்டியில் இன்று நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

    ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி

    பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:

    மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், ஷாருக்கான், ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்
    விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த டோனி வகுத்த திட்டம் குறித்த வீடியோ சமூகவலைதளைங்களில் வைரலாகி வருகிறது.
    மும்பை:

    ஐ.பி.எல் 2022 தொடரில்  நேற்று நடைபெற்ற  22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 216/4 ரன்கள் குவித்தது. 217 என்ற இமாலய இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளசிஸ் 8 (9) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.இறுதியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் நேற்று விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த டோனி வகுத்த திட்டம் குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளைங்களில் வைரலாகி வருகிறது.

    2-வது இன்னிங்சின் 4-வது ஓவரை இளம் வீரர் முகேஷ் சவுத்ரி வீச வந்த நிலையில் அதை விராட் கோலி எதிர்கொண்டார். அதற்கு முன்பாக முன்பாக டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் எந்த பீல்டரும் இல்லாததை பார்த்த எம்எஸ் டோனி அந்த இடத்தில் அவர் பிளிக் ஷாட் அடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை கணித்து ஷிவம் துபேவை அங்கே நிறுத்தினார். 


    அடுத்த பந்திலேயே சொல்லி வைத்தார் போல் பிளிக் ஷாட் ஆடிய விராட் கோலி தோனியின்  பிளானில் சிக்கி சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தற்போது டோனியை புகழ்ந்து வருகின்றனர்.

    மூத்த வீரர் முகமது சமி மீது ஹர்த்திக் பாண்ட்யா கோபத்தை வெளிப்படுத்தியது சரியல்ல என்று சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் புதிய அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்சுக்கு ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக உள்ளார்.

    ஆடுகளத்தில் அவர் சக வீரர்கள் மீது தேவையில்லாமல் அதிகமாக கோபப்படுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது வெளிநாட்டு வீரரான டேவிட் மில்லர் மீது ஹர்த்திக் பாண்ட்யா கோபப்பட்டது டெலிவி‌ஷனில் தெளிவாக தெரிந்தது.

    இதேபோல ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது சீனியர் வீரரான முகமது சமி மீது கோபத்தை வெளிப்படுத்தினார். ராகுல் திரிபாதி கொடுத்த கேட்சை பிடிக்க டீப்தேர்ட்மேன் பகுதியில் இருந்த ‌சமி பெரிதாக முயற்சி செய்யவில்லை. பந்து பவுண்டரிக்கு சென்று விடாமல் இருக்கும் வகையில் அவர் தடுத்தார்.

    ‌சமி அந்த கேட்சை பிடிக்க முயலாததால் ஹர்த்திக் பாண்ட்யா அவர் மீது கோபம் அடைந்தார்.

    இதை டெலிவி‌ஷனில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மூத்த வீரர் முகமது ‌சமி மீது ஹர்த்திக் பாண்ட்யா கோபத்தை வெளிப்படுத்தியது சரியல்ல என்று சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.

    அணி வீரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு தெரியவில்லை. ‌சமி இந்திய அணிக்காக பல ஆண்டுகள் பங்களித்து வருகிறார். அவரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று பலரும் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு கண்டனம் தெரிவித்துப் பதிவு செய்துள்ளனர்.

    பஞ்சாப் அணியின் கேப்டனான மயங்க் அகர்வாலும் பீல்டிங்கில் சொதப்பும் சக வீரர்கள் மீது கோபப்படுவார். இவர்கள் டோனியிடம் இருந்து எப்படி நிதானமாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். 

    மும்பை அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் (டெல்லி, ராஜஸ்தான், கொல்கததா, பெங்களூர்) தோற்று இருந்தது. தோல்வி பாதையில் இருந்து மீண்டு அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று நடைபெறும் 23-வது ‘லீக்‘ ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் (டெல்லி, ராஜஸ்தான், கொல்கததா, பெங்களூர்) தோற்று இருந்தது. தோல்வி பாதையில் இருந்து மீண்டு அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் அணி 2 வெற்றி (பெங்களூர், சென்னை), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத்) 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மும்பையை வீழ்த்தி 3-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகிய 2 பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டி மைலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது.


    எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன் மற்றும் லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான மகளிர் அழைப்பு கைப்பந்து போட்டியை சென்னையில் நடத்துகிறது.

    பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகிய 2 பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டி மைலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 16-ந் தேதி வரை 3 நாட்கள் போட்டி நடக்கிறது.

    பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி, ஐ.சி.எப், தமிழ்நாடு போலீஸ், டாக்டர் சிவந்தி கிளப், ஜி.கே.எம். பவுண்டே‌ஷன், பாரதியார் ஆகிய 8 அணிகளும், பள்ளிகள் பிரிவில் லேடி சிவசாமி, வேலம்மாள், டி.ஏ.வி, ஆவடி அரசு பள்ளி உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

    பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், பள்ளி பிரிவில் ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இதேபோல் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    வெளியூரில் இருந்து பங்கேற்கும் அணிகளுக்கு தங்குவதற்கு இடம் இலவசமாக அளிக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டே‌ஷன் தலைவர் வீரமணி ஆகியோர் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.14 கோடிக்கு தீபக் சாஹர் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர். 

    கடந்த பிப்ரவரி மாதத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.

    இதைத்தொடர்ந்து, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் இருந்தபோது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தீபக் சாஹர் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியானது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    மும்பை:

    ஐ.பி.எல்  தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார்.  ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    அடுத்து ஆடிய பெங்களூரூ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷபாஸ் அகமது 41 ரன் எடுத்தார். தொடர்ந்து 4 தோல்விக்கு பிறகு சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு கேப்டன் ஜடேஜா பேசுகையில், கேப்டனாக பெறும் முதல் வெற்றி எப்போதும் சிறப்பானது. எனவே, முதல் வெற்றியை எனது மனைவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

    முந்தைய நான்கு ஆட்டங்களில் எங்களால் எல்லையை கடக்க முடியவில்லை. ஆனால் ஒரு குழுவாக நாங்கள் நன்றாக மீண்டு வந்துள்ளோம்.

    நான் இன்னும் கற்றுக்கொண்டு ஒவ்வொரு விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் என தெரிவித்தார்.

    பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தப்பா, ஷிவம் துபே ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்து அசத்தியது.
    மும்பை:

    ஐ.பி.எல்  தொடரில் இன்று மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்னும், மொயீன் அலி 3 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய உத்தப்பா, ஷிவம் துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். உத்தப்பா 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார்.  ஷிவம் துபே 46 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரூ அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்ததால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    டூ பிளசிஸ் 8 ரன், அனுஜ் ராவத் 12, விராட் கோலி 1, மேக்ஸ்வெல் 26 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். பிரபு தேசாய் அதிரடியாக ஆடி 18 பந்தில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார். ஷபாஸ் அகமது 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் போராடினார். அவர் 14 பந்தில் 31 ரன் அடித்து அவுட்டானார்.
     
    இறுதியில், பெங்களுரு அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை அணி சார்பில் தீக்‌ஷனா 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். 4 தோல்விக்கு பிறகு சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷிவம் துபே 46 பந்துகளில் 95 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
    மும்பை:

    ஐ.பி.எல்  தொடரில் இன்று மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும்  22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன .

    டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  

    சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மொயீன் அலி 3 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.  இதன் பின்னர் ஜோடி சேர்ந்த உத்தப்பா , ஷிவம்  துபேவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

    உத்தப்பா 50 பந்துகளில் 4  பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார். 

    மறுபுறம் துபேவும் 46 பந்துகளில் 5 பவுண்டர்கள், 8 சிக்சர்களுடன் 95  ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 

    சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
    இதையடுத்து 217 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரூ அணி களம் இறங்கி உள்ளது.



    சி.எஸ்.கே. அணி 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் இரவு நடக்கிறது.
    மும்பை:

    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட்டிலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 8 விக்கெட்டிலும் தோற்றது.

    சி.எஸ்.கே. அணி 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    சென்னை அணி முதல் வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது. 4 ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. எஞ்சிய 10 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்றால்தான் பிளேஆப் வாய்ப்பில் இருக்க முடியும். இதனால் இன்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வெல்ல இயலும். தற்போது பெங்களூரு அணி நல்ல நிலையில் இருப்பதால் அதனை வீழ்த்துவது சவாலானது.

    டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி சென்னையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 18-ல், பெங்களூரு 9-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    6-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இதுவரை 5 டி.என்.பி.எல். போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றது.

    டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு டி.என்.பி.எல் போட்டி நடைபெறவில்லை.

    6-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.

    இந்தநிலையில் இதுதொடர்பாக டி.என்.பி.எல். ஆட்சி மன்றகுழு கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் இந்த சீசனிலும் வீரர்களை வரைவு ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    டி.என்.பி.எல். போட்டி ஜூன் 27-ந் தேதி தொடங்கலாம் என்று தெரிகிறது. ஜூலை 31-ந்தேதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் வரை போட் நடைபெறலாம். திண்டுக்கல், நெல்லை, சேலம், கோவை ஆகிய 4 இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியதாவது:-

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதமபரம் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் இந்த சீசனில் இல்லை. சேலம், கோவையில் மின்னொளி வசதி உள்ளன. அங்கு 4 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன.

    வீரர்கள் தேர்வு வரைவு ஒதுக்கீடு முறையில் இருந்து ஏலத்துக்கு கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்த மாற்றம் அடுத்த ஆண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்படும். இது தொடர்பாக அணிகளின் உரிமையாளர்களு டன் விவாதித்துள்ளோம். அனைத்து அணி உரிமையாளர்களும் ஏலம் முறை சிறந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

    இந்த ஆண்டும் வரைவு ஒதுக்கீடு பட்டியலில் இருந்து வீரர்கள் தேர்வு முறை நீடிக்கும். நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்.சுக்காக ஸ்பான்சரை தேடி வருகிறோம்.

    ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்சிடம் உறுதி செய்த பிறகு போட்டி அட்டவணை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×