என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 0-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வருபவர் ஜோ ரூட். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. 

    சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோ ரூட் இன்று அறிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்த  இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது.

    கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணிக்காக இணைந்து விளையாடுவது ரசிகர்களின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட் மிகவும் பிரபலம் பெற்றது. இதில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடுவது வழக்கம்.

    இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா கடந்த 2014 முதல் கவுண்டி போட்டியில் வெவ்வேறு அணிக்காக ஆடினார். இந்த சீசனில் சசெக்ஸ் அணிக்காக ஆடுகிறார். இதேபோல் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும் இந்த சீசனில் முதல் முறையாக சசெக்ஸ் அணியில் ஆடுகிறார்.

    இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணிக்காக இணைந்து விளையாடுவது ரசிகர்களின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் சசெக்ஸ் அணியின் ஜெர்சியில் இணைந்து ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
    வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 61 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் லக்னோவிடம் 12 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. அதை தொடர்ந்து சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன், அபிஷேக் வர்மா, நிகோலஸ் பூரன், மார்க்கிராம், புவனேஷ்வர்குமார், நடராஜன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கொல்கத்தா அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    அந்த அணி சென்னை (6 விக்கெட்), பஞ்சாப் (6 விக்கெட்), மும்பை (5 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. பெங்களூர் (3 விக்கெட்), டெல்லி (44ரன்) அணிகளிடம் தோற்று இருந்தது. ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா 4-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா அணியில் கேப்டன் ஸ்ரேயர்ஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரஸ்சல், கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 14-ல், ஐதராபாத் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.
    ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எனது ஆட்டம் சிறப்பானது என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    புனே:

    ஐ.பி.எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

    மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 52 பந்தில் 87 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), அபினவ் மனோகர் 28 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 14 பந்தில் 31 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். குல்தீப்சென், யசுவேந்திர சாஹல் , ரியான் பராக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

    பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் 37 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பட்லர் அதிகபட்சமாக 24 பந்தில் 54 ரன் (8 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 17 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். பெர்குசன், யாஷ் தயாள் தலா 3 விக்கெட்டும் முகமது ‌ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    குஜராத் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இந்த வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    கேப்டன் பதவியை நான் ரசிக்கிறேன். கேப்டனாக இருப்பது வேடிக்கையானது. அது என்னை பொறுப்பேற்கவும், கொடி ஏந்தியவராகவும் இருக்க அனுமதிக்கிறது. குழு ஒருவரையொருவர் சுமக்கிறது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்.

    நான் நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்த பழக்கம் இல்லை. தற்போது நீண்ட நேரம் ஆடி இருக்கிறேன். என்னால் கணக்கீடு செய்து துணிச்சலான முடிவை சந்திக்க முடிகிறது. கடந்த ஆட்டத்தில் அது சரியாக அமையவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் அதை உறுதி செய்தேன்.

    எனது இந்த ஆட்டம் சிறப்பானது அதற்கு கடினமாக உழைத்தேன். எனக்கு வெறும் பிடிப்பு மட்டும் தான் ஏற்பட்டது. மற்றப்படி தீவிரமான காயம் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சீனியர் வீரர் முகமது ‌ஷமியிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா கோபப்பட்டு இருந்தார். இதற்காக அவருக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் அணி 6-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    ராஜஸ்தான் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சை 18-ந் தேதி எதிர்கொள்கிறது. 

    நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
    புவனேஸ்வர்:

    9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 

    இந்நிலையில்  இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது.  இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.  

    இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது.  2வது இடத்தில் ஜெர்மனியும், 3வதுஇடத்தில் நெதர்லாந்தும் உள்ளன.  இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மீண்டும் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
    இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியில் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

    இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 12 ரன்கள் இருக்கும் போது ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சுப்மன் கில் 13 எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஹர்த்திக் பாண்ட்யா-அபினவ் மனோகர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

    28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மனோகர் சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய  ஹர்த்திக் பாண்ட்யா  52 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துர்.  இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 

    இதனால் 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடியது. அந்த துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.  படிகல்  ரன் எதுவும் எடுக்காத நிலையில் அவுட்டானார். 

    கேப்டன் சஞ்சு சாம்சன் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார்.  ஹெட்மயர் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  ராஜஸ்தான் அணி  20  ஓவர் முடிவில் 9  விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள்  எடுத்தது.  இதனையடுத்து குஜராத் அணி  37  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்-மேத்யூ வேட் களமிறங்கி ஆடினார்கள். வேட் 12 ரன்கள் இருக்கும் போது ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த தமிழக வீரர் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சுப்மன் கில் 13 என அடுத்தடுத்து 3 வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இந்நிலையில் ஹர்த்திக் பாண்ட்யா-அபினவ் மனோகர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மனோகர் சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த ஹர்த்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.

    அடுத்ததாக ஹர்த்திக் பாண்ட்யாவுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இதனால் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கும்.
    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. புள்ளிபட்டியலில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. குஜராத் அணியும் 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து 5 இடத்தில் உள்ளது.

    4-வது வெற்றி ஆர்வத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    குஜராத் டைட்டன்ஸ்: 

    மேத்யூ வேட், ஷுப்மான் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள்

    ராஜஸ்தான் ராயல்ஸ் : 

    ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்

    நாங்கள் ஆக்ரோஷமான, கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என பஞ்சாப் அணி கேப்டன் மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று  நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதின. இந்த ஆட்டத்தில்   12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்கு பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் கூறியதாவது ;
     
    அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி. எங்களுக்கு முக்கியமான விஷயம் இரண்டு புள்ளிகள். இந்த ஆட்டத்தில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருந்தன. நிறைய முக்கியமான தருணங்கள் இருந்தன, அதைவிட அதிகமாக, நாங்கள் அந்த தருணங்களை  வெற்றி பெற்றோம். நாங்கள்  ஆக்ரோஷமான, கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இவ்வாறு கூறினார் 

    பொருளாதார நெருக்கடியால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் கேப்டன் ரனதுங்கா கூறியுள்ளார்.
    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (ஒரு நாள் போட்டி) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.

    இதுவரை 14 ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியாக இலங்கையில் நடத்தப்படுவது இந்த போட்டி ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் ஆசய கோப்பை போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் அர்ஜூன ரனதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது உறுதி இல்லை . மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. மக்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக அவர்களது மனநிலை இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே இலங்கையில் இருந்து இந்த போட்டியை மாற்ற முடிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி தொடர்ச்சியாக முதல் 5 ஆட்டத்தில் தோல்வியை தழுவுவது இது 2-வது முறையாகும்.
    புனே:

    ஐ.பி.எல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் சோகம் தொடர்கிறது. அந்த அணி பஞ்சாபிடமும் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது.

    புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது.

    ஷிகர் தவான் 50 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் மயங்க் அகர்வால் 32 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 15 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பசலி தம்பிக்கு 2 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு ‌ 186 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரேவிஸ் 25 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர் ), சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி , 4 சிக்சர் ) திலக் வர்மா 20 பந்தில் 36 ரன்னும் ( 3 பவுண்டரி , 2 சிக்சர் ) எடுத்தனர். ஓடியன் சுமித் 4 விக்கெட்டும் , ரபடா 2 விக்கெட்டும் , வைபவ் அரோரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி தொடர்ச்சியாக முதல் 5 ஆட்டத்தில் தோல்வியை தழுவுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2014-ல் முதல் 5 போட்டியில் தோற்று இருந்தது.

    இந்த தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நாங்கள் நன்றாக ஆடினோம் என்று தான் நினைத்தேன். மிகவும் நெருங்கி வந்தோம். சில ரன்அவுட்டுகள் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் ரன்ரேட்டை தக்க வைத்தோம். ஆனால் கடைசியில் அது முடியாமல் போனது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.

    பேட்டிங் வரிசையை மாற்றி பார்த்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. பேட்டிங்குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் 190 ரன்னுக்கு மேல் எடுக்க கூடிய இலக்குதான். நாங்கள் குழுவாக சிறப்பாக ஆடவில்லை. இந்த தொடரில் நாங்கள் மிகவும் மோசமாக விளையாடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப் அணி 3-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 6-வது ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத்தை வருகிற 17-ந் தேதி சந்திக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் அடுத்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 16-ந் தேதி எதிர்கொள்கிறது.
    இரு அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் உள்ளன.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடபெற்று வருகிறது. 20-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 24 -வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் உள்ளன.இதனால் 4- வது வெற்றியை பெறப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் அணி ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்திலும், மும்பையை 21 ரன்னிலும், லக்னோவை 3 ரன்னிலும் வீழ்த்தி இருந்தது. பெங்களூர் அணியிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

    குஜராத் அணி லக்னோ, டெல்லி, பஞ்சாப் ஆகியவற்றை தொடர்ச்சியாக தோற்கடித்தது. ஐதராபாத்திடம் வீழ்ந்தது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×