என் மலர்

  இந்தியா

  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
  X
  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

  அம்பேத்கரின் வாழ்க்கை, செயல்பாடுகள் உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது- காங்கிரஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.
  அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இவர்களை தவிர சபாநாயகர், மத்திய அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அம்பேத்கரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

  பின்னர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
  அம்பேத்கரின் 131வது பிறந்தநாளில் இந்தியாவிற்கு வலிமையான தூணாகிய நமது புனிதமான அரசியலமைப்பை வழங்கிய பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு எனது அஞ்சலிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

  இதேபோல், காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பாபாசாகேப் அம்பேத்கர் சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான உயர்ந்த மனிதராக இருக்கிறார்.

  அவரது வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்காணக்கோனருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. அவரது பிறந்தநாளில் இந்தியாவிற்கு அரசியலமைப்பை வழங்கிய மனிதரின் பாரம்பரியத்தை நாங்கள் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது.

  இதையும் படியுங்கள்.. கருங்கடலில் ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டோம்- உக்ரைன் அறிவிப்பு
  Next Story
  ×