search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஸ்வான்"

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்திருந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் மிட்செல் 72 ரன்னிலும் பில்ப்ஸ் 70 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் 3 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப்- ரிஸ்வான் களமிறங்கினர். சைம் அயூப் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பாபர் அசாம்- ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை மில்னே பிரிந்தார். பாபர் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. 8 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து 20 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் ஆலன் 8, டிம் சீஃபர்ட் 0, வில் யங் 4 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இந்த நிலையில் மிட்செல் - பில்ப்ஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து தடுத்தது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி சர்வதேச அளவில் தொடர்ச்சியாக 8 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் கடைசி லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து நடந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டியிலும் தோல்வியடைந்தது. அதனையடுத்து நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிராக 4 டி20 போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்களாதேசம் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக வங்காளதேசம் அணி பேட்டிங் செய்த போது ரிஸ்வான் செய்த காரியத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அப்ரிடி வீசிய 43-வது ஓவரில் டஸ்கின் அகமதுக்கு அப்பில் கேட்கப்பட்டது. நடுவர் அதனை நிராகரித்தார். உடனே கீப்பரான ரிஸ்வான் பேட்டில் படவில்லை எனவும் ரிவ்யூ கேட்கலாம் என பாபர் அசாமிடமும் அப்ரிடியிடமும் முறையிட்டார்.

    அவர்கள் இருவரும் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் ரிஸ்வான் ரிவ்யூ கவுண்டவுன் ஓடிக் கொண்டிருக்கும் போதே பேட்ஸ்மனிடம் பந்து பேட்டில் பட்டதா என கேட்டார். அதற்கு பேட்டர் பதில் அளித்தவுடன் பாபரிடம் பார்த்தியா நான் சொல்லுவது சரி என்பது போல கூறினார். இதை சற்றும் எதிர்பாராத பாபர் அசாம், ரிவ்யூ கேட்காமல் நிராகரித்தார்.

    பொதுவாக ரிவ்யூ கவுண்டவுன் முடிந்தவுடன் தான் பேட்டரிடம் பேட்டில் பட்டதா இல்லையா என்பது குறித்த சந்தேகத்தை எதிரணியினர் கேட்பார்கள். ஆனால் இவர் கவுண்டவுன் ஓடிக்கொண்டிருக்கும் போதே கேட்டது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    • இந்த போட்டியில் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டன
    • இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் சதம் அடித்தனர்

    உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இலங்கை 344 ரன்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் எளிதாக சேஸிங் செய்தது.

    இந்த போட்டி பல்வேறு சாதனைகளை கண்டுள்ளது. அதனைப் பார்ப்போம்

    1. ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் (131 நாட்அவுட்) படைத்துள்ளார்.

    2. உலக கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்

    3. இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்கள் என 4 பேர் சதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களை கண்ட போட்டி என்ற சாதனையில் இணைந்துள்ளது. இலங்கையில் குசால் மெண்டிஸ் (122), சமரவிக்ரமா (108) ஆகியோரும் பாகிஸ்தானில் அப்துல்லா ஷபிக் (113), முகமது ரிஸ்வான் (131) ஆகியோரும் சதம் அடித்தனர்.

    4. இலங்கை அணிக்கெதிராக தோல்வியை சந்திக்காமல் அதிக வெற்றி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. 8 முறை உலக கோப்பையில் இலங்கையில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான்

    5. இரு அணிகளிலும் 4-வது வீரர் சதம் அடிப்பது இது ஐந்தாவது முறையாகும். சமர விக்கரமா 108 ரன்களும், ரிஸ்வான் 131 ரன்களும் அடித்தனர்.

    6. உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    7. இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது

    • இலங்கை அணி 344 ரன்கள் குவித்திருந்தது
    • 48.2 ஓவரிலேயே இலக்கை எட்டி பாகிஸ்தான் அசத்தல்

    உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி 344 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    345 இலக்கை எட்டியதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் இலக்கை எட்டிப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து 328 ரன்களை எட்டிப்பிடித்தது.

    2019-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக வங்காளதேசம் 322 ரன்களை எட்டிப்பிடித்துள்ளது. 2015-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக வங்காளதேசம் 319 ரன்களையும், 1992-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இலங்கை 313 ரன்களையும் எட்டிப்பிடித்துள்ளது.

    • பாகிஸ்தான் அணி 28 ஓவருக்கு முன்னதாகவே 2 ரிவ்யூவும் முடிந்து விட்டது.
    • நசீம் ஷா வீசிய 3.5 ஓவரில் ரோகித் சர்மாவுக்கு ரிஸ்வானால் ரிவ்யூ கேட்கப்பட்டது.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

    சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

    இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 121-ஐ எட்டிய போது ரோகித் சர்மா (56 ரன், 49 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஷதப்கானின் பந்துவீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் சுப்மன் கில்லும் (58 ரன், 52 பந்து, 10 பவுண்டரி) வெளியேறினார். அவர் அப்ரிடி வீசிய பந்தை அடித்த போது 'கவர்' திசையில் நின்ற ஆஹா சல்மானிடம் சிக்கினார்.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் கைகோர்த்து விளையாடிய போது மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த ஆட்டத்திற்கு மாற்று நாள் (ரிசர்வ்) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், இதன்படி பாதியில் நின்று போன இந்த ஆட்டம் மாற்று நாளான இன்று தொடர்ந்து நடைபெற்றது. கேஎல் ராகுலும் விராட் கோலியும் சிறப்பாக ஆடி வருகின்றனர். கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 28 ஓவருக்கு முன்னதாகவே 2 ரிவ்யூவும் முடிந்து விட்டது. இதற்க்கு முக்கிய காரணம் கீப்பர் ரிஸ்வான். இவரால் தான் 2 ரிவ்யூ-வும் பறிபோனது.

    நசீம் ஷா வீசிய 3.5 ஓவரில் ரோகித் சர்மாவுக்கு ரிஸ்வானால் ரிவ்யூ கேட்கப்பட்டது. அது 3-வது நடுவரால் நிராகரிக்கப்பட்டது. இதனை போன்று 27.6 ஓவரில் விராட் கோலிக்கு அவுட்டுக்கான அப்பில் கேட்கப்பட்டது. இதனை கீப்பராக நின்ற ரிஸ்வான் ரீவ்யூ எடுக்குமாறு கேப்டனை கேட்டுக் கொண்டார். இதனால் ரிவ்யூ கேட்கப்பட்டது.

    ஆனால் 3-வது நடுவர் அதனை நாட் அவுட் கொடுத்தார். மீதமிருந்த ஒரு ரிவ்யூ-வும் பறிபோனது. இதனால் நெட்டிசன்கள் ரிஸ்வானை ஆர்வக் கோளாறு என திட்டி வருகின்றனர்.

    • 20 ஓவர் கிரிக்கெட் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.
    • இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று கராச்சியில் நடந்தது.

    இங்கிலாந்து நிர்ணயித்த 200 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19.3 ஓவரில் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 110 ரன்னும், முகமது ரிஸ்வான் 88 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தனர். இதன் மூலம் பாபர் ஆசாம்-முகமது ரிஸ்வான் ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. 20 ஓவர் கிரிக்கெட் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.

    இதற்கு முன்பு இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.

    அந்த சாதனையை அவர்களே முறியடித்தனர். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் 7 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என்ற சமனில் உள்ளது. 3-வது போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    ×